Monday, December 27, 2010

சிறுகதைகள் பற்றி சங்கமம் நிகழ்வில் பெருமாள் முருகன்


செ
ன்ற வருடம் போலவே இந்த வருடமும் சிறப்புற நடைபெற்ற ஈரோடு வலைப்பதிவர் குழுமத்தினர் நடத்திய சங்கமம்-2010 நிகழ்வின் சில துளிகளை பல வலைப்பூக்களில் இன்று காண்பீர்கள். என் பங்கிற்கு எழுத்தாளர் பெருமாள் முருகன் பேசியதில் இருந்து சில....


‘சிறுகதைகளை உருவாக்குவோம்’ என்கிற தலைப்பில் பேசினார் எழுத்தாளர் பெருமாள் முருகன்.

• முன்னைப் போல வார / மாத இதழ்கள் சிறுகதைக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை. அதிக பட்சம் ஒரு சிறுகதை, சில சமயம் அதற்கும் இடமில்லை என்கிற போக்கே இருக்கிறது. ‘உயிர் எழுத்து’ இதழ் மட்டும் தொடர்ந்து ஐந்து அல்லது ஆறு சிறுகதைக்கு இடமளிக்கிறது.

• சிறுகதை எழுதுவதில் / சிறுகதை வாசிப்பதில் / சிறுகதை வெளியிடுவதில் என்று மூன்று நிலைகளிலும் ஒரு தேக்க நிலை தற்போதைய காலகட்டத்தில் இருக்கிறது.

• கடந்த பத்தாண்டுகளில் சமகால வாழ்வியல் முறையைப் பதிவு செய்யும் சிறுகதைகள் அதிகம் வரவில்லை. இன்றைய வாழ்வைப் பதிவு செய்வது அவசியம். அசோகமித்திரன் போன்ற எழுத்தாளர்கள் அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தைப் பதிவு செய்திருப்பார்கள். அந்தப் போக்கு இப்போது இல்லை.

• இந்த மாதிரியான நேரத்தில் சிறுகதைகளின் தேவை அதிகமாக இருக்கிறது. அதற்கு இணையமே சிறந்த வழி.

• எழுதுவதற்கு, வாசிப்பு என்பது மிகவும் அவசியம். வேலைப்பளு காரணமாக வாசிப்பு குறைந்துவிட்டது என்பதை ஏற்க முடியாது. வாசிப்பையும் ஒரு வேலையாகப் பாவித்து தினமும் செய்தால் இந்த மாதிரி சொல்ல நேராது.

• எழுதுபவர்களுக்கு சின்னச் சின்ன யோசனைகள்:

1) குறைந்தது மாதம் ஒரு சிறுகதை படியுங்கள். கட்டாயமாக இதைச் செய்யுங்கள். மாதம் ஒரு சிறுகதை வாசிப்பதென்பது என்பது நிச்சயமாக கடினமான விஷயமல்ல. கொஞ்சம் கொஞ்சமாக இதை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.

2) பகிர்ந்து கொள்ளக் கூடிய ஆசையை வளர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் எழுத்தாளர்களுக்கு இந்த ஆசை, பேராசையாகவே இருக்கலாம். எந்த ஒரு விஷயத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

3) கதை எழுத தீவிர கவனிப்பு மிக முக்கியம். Observation. கவனிக்கும் தன்மை இருந்தால்தான் நடக்கும் சம்பவங்களிலிருந்து, சிலதைத் தேர்ந்தெடுத்து கொஞ்சம் கற்பனை கலந்து எழுத்தில் கொணர முடியும்.

4) எழுதுவதற்கான பயிற்சியை கொஞ்சம் கொஞ்சமாக மேற்கொள்ளுங்கள். எழுதாமல் கதை வராது. எழுதிய உடனும் கதை வராது. முதல் கதையே மிகச் சிறந்ததாக இருக்க வேண்டும் எல்லாரும் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஜெயமோகன் - விகடன் உட்பட - சில இதழ்களில் பல கதைகள் வெளிவந்து, நெடுநாட்கள் கழித்து கணையாழியில் ‘நதி’ என்றொரு கதை எழுதினார். அந்தக் கதையைத்தான் தன் முதல் கதை என்று குறிப்பிடுவார். ‘அதற்கு முன் நிறைய கதைகள் வந்தனவே?’ என்று கேட்டால், ‘அவையெல்லாம் பயிற்சிக்காக எழுதியவை’ என்பார்!

5) சம்பவங்களிலிருந்து விதிவிலக்குகளைத் தேர்வு செய்து எழுதுங்கள். அன்றாட நடப்புகளை, விதிக்குட்பட்டு நடக்கும் நிகழ்வுகளை / மனிதர்களை கதை வடிவில் கொண்டு வந்து எழுதுவது – அதை வாசகர்களுக்குச் சுவைபடச் சொல்வது கொஞ்சம் சிரமம். அசோகமித்திரன், வண்ணதாசன் போன்றோர் அப்படித்தான் எழுதுகிறார்கள்.

உதாரணமாக கந்தர்வன் ஒரு சிறுகதை எழுதினார். பனைமரத்தைப் பிடுங்கும் ஒரு மனிதனைப் பற்றிய கதை. பனைமரத்தைப் பிடுங்கும் மனிதன் என்றாலே அவன் சமூகத்தில் இருக்கக்கூடிய மற்ற சாதாரண மனிதர்களிடமிருந்து வேறானவன். இதுதான் சிறுகதைக்குத் தேவை.

6) வாசகர்களுக்குக் கருத்தெல்லாம் சொல்லாதீர்கள். நீங்கள் எழுதுகிற கதையில், அதன் போக்கில் சொல்லப்பட்டவற்றை வாசகன் படித்துக் கொள்ளட்டும். வலிந்து திணிக்கப்பட்ட நீதிபோதனைகளை எவரும் விரும்புவதில்லை.

இவையாவும் மேம்போக்காகச் சொல்லப்பட்டவையே. சிறுகதையுலகு ஒரு கடல். அவற்றின் துளியின் துளி பற்றியே பேசியிருக்கிறேன் என்றார்.

முடிக்கும் முன் தி.ஜானகிராமனின் ‘காண்டாமணி’ என்றொரு கதையைச் சொன்னார்.

உணவுச் சாலை நடத்தும் ஒருவர், ஒரு நாள் - தன் முதல் வாடிக்கையாளருக்கு சாம்பார் ஊற்றிவிட்டு சிறிது நேரம் கழித்து அந்த சாம்பாரில் பல்லி விழுந்திருப்பதைக் கவனிக்கிறார். சாம்பாரைக் கொட்டி விட்டு, பிற வாடிக்கையாளர்களுக்கு புதிய சாம்பார் சமைக்கிறார். முதலில் உண்ட வாடிக்கையாளருக்கு என்ன ஆகியிருக்குமோ என்று குற்றவுணர்ச்சி. அவரோ சென்று விட்டார். ஒன்றும் ஆகிவிடக் கூடாதே என்று கடவுளைப் பிரார்த்திக்கிறார்.

துரதிருஷ்டவசமாக அந்த வாடிக்கையாளர் மறுநாள் இறந்துவிடுகிறார். நெஞ்சு வலி என்று சொல்லப்படுகிறது. தன் கடைச் சாம்பாரின் பல்லி விஷம்தான் காரணம் என்று இவர் நினைத்துக் கொள்கிறார். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் தன் கடை வியாபாரம் பாதிக்கப்படும் என்று அஞ்சுகிறார். வெளியில் தெரியாமல் தன் கடைக்கு எந்த பாதிப்பும் வராமல் இருந்தால் அருகிலேயே இருக்கும் கோயிலொன்றுக்கு காண்டாமணியை உபயம் செய்வதாக வேண்டிக் கொள்கிறார். அதுபோலவே காண்டாமணியை கோயிலுக்கு உபயம் செய்கிறார்.

ஒவ்வொரு முறை அந்த காண்டாமணி அடிக்கும்போதெல்லாம் குற்ற உணர்ச்சியில் வாடுகிறார். ஒரு கட்டத்தில் அந்த மணியை திரும்ப வாங்கிக் கொள்கிறார்.

இதுதான் கதை. இதில் எந்த வித நேரடியான நீதிபோதனைகளும் இல்லை. நீங்களும் உங்கள் வாழ்வில் நடந்த, நீங்கள் மறக்க நினைக்கும் குற்ற உணர்ச்சி ஏற்படுத்தும் ஏதேனும் நிகழ்வைப் பொருத்திப் பார்க்கச் செய்கிற கதை. இப்படி வாசகனை, கதையோட்டத்துடன் இணைத்துச் செல்லும் கதைகளே வெற்றிபெறும் என்று சொல்லி முடித்தார் பெருமாள் முருகன்.

__________________________________

சங்கமம் குறித்த முழுத் தகவல்களுக்கு ஈரோடு கதிரின் இந்த இடுகையைச் சுட்டவும்.


.

20 comments:

பழமைபேசி said...

பகிர்வுக்கு நன்றிங்க பரிசல்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

பகிர்வுக்கு நன்றி

அமர பாரதி said...

பகிர்வுக்கும் வருகைக்கும் நெஞ்சார்த நன்றிகள் பரிசல்.

Nithu Bala said...

அருமையான பதிவு. உபயோகமான தகவல்கள்.. நன்றி

Unknown said...

சிறுகதை முயற்சி செய்வோருக்கு பயனுள்ள தகவல்கள்.

கத்தார் சீனு said...

நல்ல பதிவுங்க கிருஷ்ணா !!!
40 நாள் கழிச்சு ஒரு பதிவ போடுறீங்க...
Welcome after the break !!!

ஆரூரன் விசுவநாதன் said...

பங்கேற்றமைக்கும் பகிர்வுக்கும் நன்றிங்க பரிசல்

ஈரோடு கதிர் said...

ஆஹா,
அற்புதமான தொகுப்பு. நிகழ்ச்சி ஏற்பாட்டில் இழந்த மிக முக்கியமானது பெருமாள் முருகனின் பயன் மிகு உரை. அதை அப்படியே தொகுத்து வழங்கியதற்கு மிகுந்த நன்றிகள் பரிசல்!

Tamil.Readandshare.in said...

நல்ல அலசல். நல்ல அலசல். வாழ்த்துகள்.

ஈரோடு சங்கமம் பற்றிய பதிவர் கதிரின் நெஞ்சை நக்கிய பதிவு.

இங்கே

நர்சிம் said...

பகிர்விற்கு நன்றி பரிசல்

Anand, Salem said...

எல்லாம் சரி. இவ்ளோ நாளா எங்க போய்ட்டீங்க.

செல்வா said...

எனக்கும் அவரது ஆலோசனைகள் பயனுள்ளதாக உள்ளது அண்ணா ..
நிச்சயமாக இனி சிறுகதை எழுதும் போது எனக்கு அது பயன்படும் .!

sathishsangkavi.blogspot.com said...

நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கும், அற்புதமான பகிர்வுக்கும் நன்றி பரிசல்...

VELU.G said...

தங்கள் வருகைக்கும் பகிர்விற்கும் நன்றி

விக்னேஷ்வரி said...

நல்ல டிப்ஸ். பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணா.

மாணவன் said...

தகவலுக்கும் பகிர்வுக்கும் நன்றி சார்

க.பாலாசி said...

மிக்க நன்றிங்க பரிசல்... எல்லாரும் சீக்கிரமா கிளம்பிட்டீங்களேன்னுதான் கொஞ்சம் வருத்தம்..

சேர்தளம் நண்பர்கள் அனைவருக்கும் எங்களது நன்றிகள்..

ஸ்ரீராம். said...

வாசிப்பு எவ்வளவு முக்கியம் என்பதைப் பகிர்கிறது பதிவு. நன்றி.

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு. நன்றி.

ராமலக்ஷ்மி said...

நல்லதொரு பகிர்வு. மிக அழகாகத் தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்!