Tuesday, December 28, 2010

மைனாவும் மன்மதன் அம்பும்


கா
ந்தி செத்துட்டாரா, இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சாச்சா, சக்கரம் கண்டுபிடிச்சாச்சா - இப்படீன்னெல்லாம் கேட்காம கம்முன்னு படிங்க. நானே ரொம்ப நாள் கழிச்சு தமிழுக்கு - வாரத்துக்கு ரெண்டு மூணு தடவையாச்சும் - சேவை இல்லீன்னா இடியாப்பம் செய்யலாம்ன்னு இருக்கேன். புரிஞ்சுக்கங்க.. ஆமா...

----------------

மொதல்ல மைனா.

எனக்கு ஒரு வியாதி இருக்கு. சோகப்படம்னா அந்தத் தியேட்டரைச் சுத்திதான் ஆஃபீஸூக்கே போவேன். அதென்னமோ சோகரசம் பிடிக்கறதில்லை. ‘அதான் வாழ்க்கையே முழுக்க சோகமா இருக்கே.. அப்பறம் என்ன தியேட்டர்லயும் போய்’ அப்படீன்னெல்லாம் காரணம் சொல்ல விரும்பல. போனமா ரெண்டரை மணி நேரம் ஜாலியா ரசிச்சமா வந்தமான்னு இருக்கறதுதான் பிடிச்சிருக்கு.

மைனா வர்றதுக்கு முன்னாடிலேர்ந்தே ஊரே ‘மைனா.. மைனா’ன்னு பேசிகிட்டிருந்துச்சு. காட்டுக்குள் பருத்திவீரன்னு கமெண்ட்ஸ் வேற. சென்னைலேர்ந்து வர்ற ப்ரிவ்யூ தகவல்கள் ‘படம் டாப்பு. ஆனா சோகமா முடியுது’ன்னு சொல்லிச்சு. முதல் மரியாதை, பருத்தி வீரன் உட்பட பல படங்களை சோகம் அதிகமா இருக்கும்ன்னு ரொம்பவே லேட்டாத்தான் பார்த்தேன். அதே மாதிரிதான் ஆச்சு மைனாவுக்கும்.

கிட்டத்தட்ட ஒரு மாசம் கழிச்சுதான் படம் பார்த்தேன். செமயான படம். படத்துல எனக்குப் பிடிச்சது தம்பி ராமையாவோட கேரக்டர்தான். கைதியோட வீராப்பா இருக்கறதும், அவன் கோவப்படறப்ப ‘ஜெயில்ல வெச்சு நொங்கெடுத்துடலாம்’ன்னு இன்ஸ்பெக்டர்கிட்ட (வார்டன்?) சொல்றதும், அவனால காப்பாத்தப்படறப்ப அவனுக்கு சப்போர்ட்டா இருக்கறதும்-ன்னு அவரோட கேரக்டரை அற்புதமா செதுக்கின இயக்குனர் பிரபு சாலமனுக்கு பாராட்டுகள். அதே சமயம் ஒவ்வொரு மனநிலைக்குத் தகுந்தாப்ல உடல்மொழி காட்டி நடிச்ச தம்பி ராமையாவுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்!!

முடிவைப் பத்தி பேசிகிட்டிருக்கறப்ப ‘யதார்த்த சினிமான்னா சோகமாத்தான் இருக்கணும்’ன்னு நண்பர்கள் சொன்னாங்க. இந்த கான்செப்ட் என் மரமண்டைக்குப் புரியவே இல்ல. நாட்டுல நூத்துல 10 பேருக்கு இந்த மாதிரி நடக்குமா? அது யதார்த்தமா? ஒண்ணுமே புரியலப்பா...

அமலா பால், (ஸ்ஸ்ஸ்......) இன்ஸ் வீட்டுக்குப் போவாம, தம்பி ராமையா வீட்டுக்குப் போய் நல்லா இருந்திருக்கலாம்ன்னு தோண வைக்கறதுதான் படத்தோட வெற்றியோ என்னமோ..!

படத்தோட ஒட்டி வர்ற நகைச்சுவை அபாரம். ரொம்ம்ம்ம்ப நாள் கழிச்சு வயிறு வலிக்க சிரிச்சேன்.

விமர்சனத்தை முடிக்கறப்ப மைனா – நைனா போனா வந்தான்னு ஏதாவது சொல்லணும்ல... ம்ஹும்.. ஒண்ணும் தோணல.. விட்டுடுங்க.

------------------------------------------

நெக்ஸ்ட்.. மன்மதன் அம்பு... ஸாரி... மன் மதன் அம்பு

நான் பல படங்களுக்கு முதல் நாளே படத்துக்குப் போகறதுக்குக் காரணம், ரெண்டாவது நாளே விமர்சனங்களைப் போட்டுத் தாக்கி ஒண்ணு எதிர்பார்ப்பைக் கூட்டுவாங்க.. இல்லைன்னா இவ்ளோதானான்னு நினைக்க வைப்பாங்க. முதல்நாள்ன்னா ப்ளெய்னா போய்ட்டு வர்லாம். அதான்.

மன் மதன் அம்பு- நான் கொஞ்சம் எதிர்பார்ப்போடத்தான் போனேன். காரணம் கமல் மட்டும் அல்ல. கமலைவிட ஒரு படி மேல கே.எஸ்.ரவிகுமாருக்கான எதிர்பார்ப்பு. ஆனா அது புஸ்ஸுன்னு போச்சு!

கமல் கதை, வசனத்தோட நின்னிருக்கலாம். இயக்கத்தோட, திரைக்கதையையும் கே எஸ் ஆர்கிட்ட குடுத்திருக்கலாம். மிஸ் பண்ணிட்டார். கே எஸ் ஆர் படத்துல தெரியவே இல்லை. ஒரே ஒரு இடம் தவிர – நீலவானம் பாட்டு. (அந்தப் பாட்டோட பிக்ச்சரைசேஷன் ஐடியா அவரோடதாத்தான் இருக்கும்ன்னு வெச்சுகிட்டா) ஒருவேளை கமலின் யோசனையாகக் கூட இருக்கலாம். பாட்டு ஆரம்பிச்சு முடியறவரைக்கும் முழுமையா பின்னோக்கிப் போய் கமலோட கதையைச் சொல்றது தமிழ்ச் சினிமாக்குப் புதுசுன்னு நினைக்கறேன். ஃபிலிம் நியூஸ் ஆனந்தனையோ கேபிள் சங்கரையோத்தான் கேட்கணும்.

படம் ஆரம்பிச்சு சூடு பிடிக்கவே அரைமணி நேரமாச்சு. சீரியஸான ஜானரும் அல்லாம, காமெடியான ஜானரும் அல்லாம ரெண்டுங்கெட்டான் மாதிரிப் போனது படத்தோட மைனஸ்.

படத்தின் என்னைக் கவரோ கவரென்று கவர்ந்த மகாப்பெரிய அம்சம் வசனம். பல இடங்களில் எழுந்து நின்று கைதட்ட வைக்கிறது. பின்னால் இருக்கிறவருக்கு மறைக்குமென்பதால் அடக்கிக் கொண்டேன்.

படத்தின் க்ளைமாக்ஸ் பழைய எஸ் வி சேகர் ட்ராமாக்களைப் போல, முடிஞ்சாச் சரி பாணியில் இருந்தது நிறைவின்மையைத் தந்தது. அதுவும் மாதவன் சங்கீதா சேரணும்ன்னு ரசிகன் நினைக்கவே இல்ல. கமல் த்ரிஷாகூட அப்படித்தான். இன்னும் அந்த சீனையெல்லாம் கலகலப்பா கொண்டு போக க்ரேஸி மோகனை வெத்தலைப் பெட்டியோட ஆழ்வார்ப்பேட்டைக்குக் கூப்பிட்டிருக்கலாம் கமல்.

படத்துல நான் ரொம்பவும் எதிர்பார்த்த கமல் கவிதை கட். அதே மாதிரி உய்ய உய்ய பாடல் (சூர்யா டான்ஸ் பிரமாதம்) விட்டு விட்டு வர்றதும் ‘பெப்’பைக் குறைத்தது.

படத்தில் கமலுக்கு இணையாக.. ஒரு படி மேலேயே தூள் கிளப்பியிருப்பவர்கள் மாதவன் & சங்கீதா. சங்கீதா டைட்டான காஸ்ட்யூமில் ரொம்ப லைவ்வாக பப்ளிமாஸாக இருக்கிறார். த்ரிஷா, சங்கீதா என்று எல்லாரையும் சொந்தக்குரலில் பேச வைத்து ட்ரில் வாங்கியிருக்கிறார்கள். சபாஷ்.

படம் பிடிச்சுதா, பிடிக்கலையான்னு கேட்டேன் உமாகிட்ட. கமல் ரசிகை வேற.

‘பிடிக்கலைன்னு சொல்லல. ஆனா பிடிச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்’

சரிதான்!



.

36 comments:

கதிரவன் said...

//வசனம். பல இடங்களில் எழுந்து நின்று கைதட்ட வைக்கிறது. பின்னால் இருக்கிறவருக்கு மறைக்குமென்பதால் அடக்கிக் கொண்டேன்.//

:-))

இனிமேல் கடைசி வரிசை சீட்ல உக்காந்து பாருங்க

Joyce the lover. said...

some one said its "Manmadhan Sombu"

கொல்லான் said...

நானும் உங்க வீட்டம்மா கட்சி தான் .

idroos said...

MMA Padam nallaveyillaiya.Ella vimarsanangalum edhirmaraiyakave ulladhu.

பனிமலர் said...

ம அ வேண்டாம் என்று பதிவர்கள் சொன்னா கேட்கனும் இல்லை என்றால் இப்படிதான்.....

a said...

சில பல இடங்கள் (ம . ம . அ ) வில் கொஞ்சம் விட்டேத்தியாய் இருந்தது........ குறிப்பாக கொடைக்கானல் மலயில் கார் ஆக்ஸீடண்ட் காட்சியில் ரத்தம் போன்ற சிவப்பு சாயம்....

மாணவன் said...

//பிடிக்கலைன்னு சொல்லல. ஆனா பிடிச்சிருந்தா நல்லா இருந்திருக்ககும்//

ஹிஹிஹி

செம்ம கலக்கல்....

மாணவன் said...

விமர்சன பகிர்வுக்கு நன்றி சார்

Anonymous said...

கிரேஸி மோகன் இல்லாத குறை க்ளைமேக்சுல அப்பட்டமா தெரிஞ்சுது..

R. Gopi said...

சரி நாம திருமுருகன்பூண்டி, அவினாசி போய் வந்ததைப் பத்தி எப்போ எழுதுவீங்க? நீங்க எழுதலைன்னா நான் எழுதிடுவேன்:)

Arasu said...

ஒரே ஒரு இடம் தவிர – நீலவானம் பாட்டு. (அந்தப் பாட்டோட பிக்ச்சரைசேஷன் ஐடியா அவரோடதாத்தான் இருக்கும்ன்னு வெச்சுகிட்டா)

Watch this video

http://www.youtube.com/watch?v=z-yOXb_x628

ஜி.ராஜ்மோகன் said...

என்னங்க பரிசல் உங்கள ரொம்ப நாளா ஆள காணாம் ! தொடர்ந்து எழுதுங்கள் !
நல்ல பகிர்வு !

கோவி.கண்ணன் said...

//படத்தின் என்னைக் கவரோ கவரென்று கவர்ந்த மகாப்பெரிய அம்சம் வசனம். பல இடங்களில் எழுந்து நின்று கைதட்ட வைக்கிறது. பின்னால் இருக்கிறவருக்கு மறைக்குமென்பதால் அடக்கிக் கொண்டேன்.//

உங்க குசும்பு இருக்கே......அது இடுகை முழுவதும் இதே போல பரவிக் கிடக்கு :)

Unknown said...

Neelavanam song original see here:

http://www.youtube.com/watch?v=bxNJHuM0Js0

லகுட பாண்டி said...

"முடிவைப் பத்தி பேசிகிட்டிருக்கறப்ப ‘யதார்த்த சினிமான்னா சோகமாத்தான் இருக்கணும்’ன்னு நண்பர்கள் சொன்னாங்க."

களவாணி யதார்த்த சினிமா இல்லையா. அது சோகமாக முடியவில்லையே?

நண்பர்களிடம் இதை பற்றியும் கேளுங்களேன்.

நட்புடன்

லகுட பாண்டி

lagudapaandi.blogspot.com

நர்சிம் said...

பகிர்விற்கு நன்றி.

ஆதவா said...

மைனா நல்லாயிருந்தது... ஆனா பருத்திவீரன் மாதிரி ஒரு அசல் கிராம அல்லது மலைப்புறக் கதையா இல்லாம இருந்தது..
\
மன்மதன் அம்பு பிடிச்சிருந்ததா பிடிக்கலையான்னு எனக்கே தெரியலை!!

சசி ராஜா said...

படம் எனக்குப் பிடிச்சிருந்தது பாஸ், முதல் பாதி slow -ஆ இருந்தாலும், அதுவே எனக்குப் பிடிச்சிருன்தது. பார்க்க என் விமர்ச்னம்:
http://alonealike.blogspot.com/2010/12/good-to-see.html

middleclassmadhavi said...

புதிய முகப்பு அருமை!
(நான் 2 படங்களும் பார்க்கவில்லை ..)

valli said...

//‘பிடிக்கலைன்னு சொல்லல. ஆனா பிடிச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்’//
எனக்கும்

மன் மதன் அம்பு பாத்திட்டு நானும் உங்களைப் போலவே உணர்ந்தேன்...

செல்ல நாய்க்குட்டி மனசு said...

‘பிடிக்கலைன்னு சொல்லல. ஆனா பிடிச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்’//
அப்படிப் போடு!! கமலுக்கு கமல் பாணியிலேயே பதில். உம்ம்ம்

கார்க்கிபவா said...

வந்தாச்சு சகா.. இனி சரவெடியா?

Mahi_Granny said...

வாரத்துக்கு ரெண்டு மூணு தடவையாச்சும் - சேவை இல்லீன்னா இடியாப்பம் செய்யலாம்ன்னு இருக்கேன். கட்டாயம் செய்யுங்க. இத்தனை ருசியுடன் சமைப்பதை எப்படி விடுவது. .

R.Gopi said...

//பிடிக்கலைன்னு சொல்லல. ஆனா பிடிச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்//

*******

நல்ல வேளை... கமல் படத்துக்கு இந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்கணுமான்னு பார்க்கவே இல்ல... திராம் 30/- மிச்சம்.. (1 திராம் ரூ.12.50 தல)...

கே.எஸ்.ரவிக்குமாருக்கு நன்றி...

சந்தடி சாக்குல “கேப்டன் டாக்டர் விருதகிரி” பட்டைய கெளப்பிட்டாராமே... மன் மதன் அம்பு படத்தை விட விருதகிரி ஹிட்டாம்..

Kiruthigan said...

நல்ல ஆராய்ச்சி சார்...

கிருத்திகன்.
http://tamilpp.blogspot.com/

Unknown said...

//‘பிடிக்கலைன்னு சொல்லல. ஆனா பிடிச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்’//

கமல் ரசிகை, அதனால் தான் ரசனையா பதில் சொல்லியிருக்காங்க. (கொஞ்சம் சோகம் வழிய )

Unknown said...

இனி தொடர்ச்சியாக உங்கள் பதிவுகளை எதிர்பார்க்கலாமா?

செல்வா said...

//சேவை இல்லீன்னா இடியாப்பம் செய்யலாம்ன்னு இருக்கேன். புரிஞ்சுக்கங்க.. ஆமா//

எனக்கு இட்லி தான் பிடிக்கும் .. இல்லனா தோசை செஞ்சு குடுங்க .!!

செல்வா said...

//எனக்கு ஒரு வியாதி இருக்கு. சோகப்படம்னா அந்தத் தியேட்டரைச் சுத்திதான் ஆஃபீஸூக்கே போவேன். அதென்னமோ சோகரசம் பிடிக்கறதில்லை. ///

நீங்க வெளயாட்ட சொன்னேன்கலான்னு எனக்கு தெரியல அண்ணா .. ஆனா எனக்கு உண்மைலேயே சோகப்படங்கள் பிடிக்கவே பிடிக்காது ..

செல்வா said...

//இந்த கான்செப்ட் என் மரமண்டைக்குப் புரியவே இல்ல. நாட்டுல நூத்துல 10 பேருக்கு இந்த மாதிரி நடக்குமா? அது யதார்த்தமா? ஒண்ணுமே புரியலப்பா...//

ஹி ஹி ஹி .. நல்ல கேள்வி ..!!

செல்வா said...

//படம் ஆரம்பிச்சு சூடு பிடிக்கவே அரைமணி நேரமாச்சு//

பேசாம ஒரு அடுப்ப வச்சு சூடு பண்ணிருக்கலாம் ..!!

செல்வா said...

//பிடிக்கலைன்னு சொல்லல. ஆனா பிடிச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்’

சரிதான்!//

ஹி ஹி ஹி .. அவுங்க தான் உண்மையான கமல் ரசிகை ..!!

THOPPITHOPPI said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

இசைப்பிரியன் said...

இவ்வளவுதான் எதிர்பார்க்க முடியும் என்ற நிலையை எந்த நடிகரின் படம் முன்கூட்டியே தந்தாலும் எனக்கு ஏனோ பிடிப்பதில்லை ,
கமலை பிடித்ததன் காரணமும் அதுவே , பல நடிகர்களை பிடிக்காததன் காரணமும் அதுவே ( பத்து வருடங்களாக ) ... ஏனோ இப்போது ஒரு சலிப்பு தோன்றுகிறது .... பார்க்க கீழே

…http://itsmeariv.blogspot.com/2009/10/blog-post_09.html

Unknown said...

உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

kulebagaavali... said...

you tubeல் Scientist - coldplay என்ற வீடியோ வை நேரம் கிடைத்தால் பாருங்கள்...

நீல வானம் பாடலின் கான்செப்ட், கமலோடதும் இல்லை... கே.எஸ். ரவிகுமரோடதும் இல்லை...!!!

வழக்கம் போல் 3 வருடங்களுக்கு முன்னால் வந்த ஒரு ஆல்பத்திலிருந்து சுட்டது...!!!