சென்ற மாதத்தில் ஒருநாள் திருவண்ணாமலை அருகே ஓர் ஊரில் பெண்கள் எல்லாரும் சேர்ந்து அவர்கள் ஊரில் டாஸ்மாக் வேண்டும் என்று போராடியிருக்கிறார்கள்.
தாய்மார்களா? டாஸ்மாக் வேண்டும் என்றா? – ஆமாம்.
காரணம் – கடைசியில்!
-----------------------------
வீடு கட்ட லோன் அப்ளிகேஷனில் விவரங்கள் எழுதும்போது தெரிஞ்சவங்க நம்பர் குடுங்க என்றார்கள். அப்போது அந்த அதிகாரி ஒரு விஷயம் சொன்னார். ஒரு வாடிக்கையாளர் தனக்குத் தெரிந்தவர் என்று ஒரு நண்பரின் பெயரைக் கொடுத்தாராம். வங்கி நபர் அந்தக் குறிப்பிட்ட நம்பருக்கு தொடர்பு கொண்டபோது ‘செல்வராஜையும் தெரியாது.. ஒரு மங்கா மடையனையும் தெரியாது’ என்று அவர் கட் செய்து விட்டாராம். வங்கி நபர், உடனே விண்ணப்பதாரரைத் தொடர்பு கொண்டு ‘அவரு தெரியாதுங்கறாரே’ என்று கேட்டதும் ’ஒரு நிமிஷம் இருங்க’ என்று வங்கி நபரையும் லைனில் வைத்துக் கொண்டு குறிப்பிட்ட நண்பருக்கு அலைபேசி டக்கென்று கான்ஃப்ரென்ஸ் கால் போட்டிருக்கிறார். அழைப்பு போனதும் அந்த நண்பர் பேசியது:
‘ஏய்.. செல்வராஜு... சொல்லுடா மாப்ள.. என்ன திடீர்னு..’
‘இல்ல மாம்ஸ்... ஹவுசிங் லோன் போட்டிருக்கேன்.. உன் நம்பர் குடுத்திருக்கேன். பேங்க்லேர்ந்து கூப்பிடுவாங்க..’
‘அதுதான் நேத்தே சொன்னியே மாப்ள... கூப்டா பேசிடறேன் சரியா.. வேற எதுனா இருக்கா?’
இல்லை என்ற விண்ணப்பதாரர் லைனைக் (நண்பரையும்?) கட் செய்துவிட்டு, வங்கி அப்ளிகேஷனில் வேறு நண்பர் பெயரை எழுதிக் கொடுத்தாராம்.
-----------------------
சின்ன மகளின் வகுப்பில் ஒரு சுவாரஸ்யமான நம்பிக்கை. அவளது தோழி ஒருத்தி மார்க் கம்மியாகிவிட்டதாம். பஸ்ஸில் வரும்போது அதுபற்றிப் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். ஏன் கம்மியாச்சு என்று கேட்டதற்கு ‘நான் எக்ஸாமுக்கு முந்தி ஒருவாட்டி சுவாதியை உதைச்சேன்ல.. அதுனாலதான்’ என்றாளாம். அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டிருக்கிறாள் பெரியவள். நாம் யாரையாவது உதைத்தால் அவர்கள் புத்தி நமக்கு வரும்.. நம்ம அறிவு அவங்களுக்குப் போகுமாம்’ என்றிருக்கிறாள். இதை அவர்கள் விளையாட்டாகச் சொல்ல நான் கேட்க நினைத்தேன்: ‘அப்படீன்னா ஃபைனல் எக்ஸாமுக்கு முந்தி போய் ப்ரின்சிபலைப் போய் உதைங்களேன்?’
ஆனால் கேட்கவில்லை. சிறுவர்களின் உலகம் அழகானது. நம்முடைய அழுக்கை அதில் சேர்க்க வேண்டாம்..
------------------
உலகக்கோப்பை க்ரிக்கெட் காலிறுதிக்கு வந்துவிட்டது. என்னமோ ஏதோ என்று விளையாடுகிறார்கள் என்று இந்திய அணியை விமர்சிக்கிறார்கள் சிலர். இருக்கலாம். ஆனாலும் விளையாடும் எல்லாப் போட்டிகளிலும் இவர்கள் முன்னூறுக்கு மேலெடுத்து, எதிரணியை சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கச் செய்வார்களென்பதும் கற்பனை சுகம் மட்டும்தான்.
அஸ்வினை சரிவரப் பயன்படுத்தாமை, மிடில் ஆர்டர் சொதப்பல்கள் என்று தோனி கவனிக்க வேண்டியவற்றை கவனித்து அணியைச் செலுத்தினால் ஆஸியை ஜெயிக்கலாம். ரசிகர்கள் ஆரம்பத்திலிருந்த உற்சாகம் வழிந்து, ஜெயிச்சா ஜெயிக்கட்டும்.. இல்லைன்னா விடுங்க என்றே பார்ப்பதாய்ப் படுகிறது. உலகக் கோப்பையை விட ஐபிஎல் அதிக சுவாரஸ்யம் தரும் விஷயமாகிவிட்டது!
இந்த உலகக் கோப்பையில் உண்மையாகவே கவனிக்கப்பட வேண்டிய அணி - அயர்லார்ந்து! இங்கிலாந்தின் இமாலய ஸ்கோரை போகிற போக்கில் எடுத்து ஜெயித்ததும், கடைசி லீக் மேட்சில் நெதர்லாந்தின் 306ஐ துரத்தி எடுத்ததும் சாதாரண விஷயமில்லை. 2015ல் பத்து அணிகள்தான் என்பதால் அயர்லாந்து வருமா வராதா என்கிற ஐயமிருக்கிறது. வரவேண்டும்!
-------------------------
அரசியலும் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. கலைஞர் க்ரைண்டர் அல்லது மிக்ஸி என்றால் ஜெயலலிதா என்ன தருவார் என்று எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர் மக்கள். தொடர்ந்து தடையில்லா மின்சாரம் போன்ற சில காமெடி அறிவிப்புகள் இருந்தாலும், தேர்தல் அறிக்கையை மிகக் கவர்ச்சியாக அறிவிப்பதில் திமுக கவனமாகவே இருக்கிறது.
என்னுடைய ஏமாற்றம் குஷ்பூவுக்கு சீட் கொடுக்காதது. இதைத் தட்டிக் கேட்க ஒருவர் கூடவா இல்லை? என்ன மாதிரியான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம்! ச்சே..
வைகோவுக்கு இந்த நிலை வந்திருக்க வேண்டியதில்லை. ஜெயிக்கிற குதிரைக்குத்தான் பணம் என்பதுபோல தேமுதிகவை அழைத்துப் பேசிய அம்ம்ம்ம்ம்மா, கூடவே ஐந்து வருடம் இருந்த வைகோவை நடத்திய விதம் கண்டிக்க வேண்டியது. நானெல்லாம் கண்டித்து ஒரு மண்ணாங்கட்டியும் நடக்கப் போவதில்லை என்பது வேறுவிஷயம்! நண்பர் ஒருவர் கூறியதைப் போல ஜெ கூட்டணியில் வைகோ / நாஞ்சில் சம்பத் போன்ற மேடைப் பேச்சாளர்கள் யாருமே இல்லை என்பதே நிஜம்.
----------
முதல் பாராவில் கேட்டதற்கான பதில்: அவர்கள் ஊரில் டாஸ்மாக் இல்லாததால் ரொம்ப தூரம் போகிறார்களாம் கணவன்மார்கள். திரும்பி வருகையில் விபத்து நேர்கிறதாம். தொடர்ந்து பலரையும் இழந்திருக்கிறார்கள். ‘குடிக்கறத நிறுத்துங்கன்னா கேட்கப்போறதில்ல.. ஊருக்குள்ளாறயே ஒரு டாஸ்மாக் இருந்தா இங்கனயே குடிச்சுட்டு இங்கனயே கெடப்பாங்கள்ல’ என்று ஒரு தாய்க்குலம் மீடியா நீட்டிய மைக்கில் உச்சஸ்தாயியில் சொல்ல - வியந்து போய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன் நான். லேடரல் திங்கிங்!
-----------------
18 comments:
//அப்படீன்னா ஃபைனல் எக்ஸாமுக்கு முந்தி போய் ப்ரின்சிபலைப் போய் உதைங்களேன்?//
நான்கூட உங்கள உதைக்கலாம்ன்னு இருக்கேனுங்ணா..! ஆனா உங்க ரசிகர்கள் என்னை கொலையே பண்ணிடுவாங்கன்றதால பேசாம இருக்கேன்..!
அப்பவாச்சும் உங்க லெவலுக்கு எழுதமுடியுமான்னுதான் ..!
கிகிகிகிகி
gud avial sir!I also agree that children's world is beautiful... without jealous.and Friends(?) r with us like house loan friend..but what can we do?we have to overcome them to success our life..
Thanx..
///சிறுவர்களின் உலகம் அழகானது. நம்முடைய அழுக்கை அதில் சேர்க்க வேண்டாம்..///
உணர்வுப்பூர்வமான வரிகள்...அருமை.
எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு
எப்பவும் போல அவியல் அருமை...
119 சீட்ல ஒன்னு குஷ்பூக்கு கொடுத்து இருக்கலாம்....%#%^&
///சிறுவர்களின் உலகம் அழகானது. நம்முடைய அழுக்கை அதில் சேர்க்க வேண்டாம்..///
அருமையான வரிகள்.
//‘குடிக்கறத நிறுத்துங்கன்னா கேட்கப்போறதில்ல.. ஊருக்குள்ளாறயே ஒரு டாஸ்மாக் இருந்தா இங்கனயே குடிச்சுட்டு இங்கனயே கெடப்பாங்கள்ல’//
அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.
உண்மையில் சிறுவர்கள் உலகம் மிக அழகானது.நாம்தான் அதை மாற்ற முயற்ச்சிக்கிறோம்
//அப்படீன்னா ஃபைனல் எக்ஸாமுக்கு முந்தி போய் ப்ரின்சிபலைப் போய் உதைங்களேன்?//
ஹஹஹஹ... நாம் வளர்ந்தவுடன் நம்முடன் மனஅழுக்கும் வளர்ந்துவிடுகிறது... இதுவே ஒரு உதாரண்ம்...:))
குஷ்பூக்கு சீட் கொடுக்கலைன்னு நீங்க ஏன் வருத்தப்படறீங்க... குஷ்பூக்கு கட்டுன கோயில்ல நீங்கான் தர்மகர்த்தவா??? :))
// உலகக் கோப்பையை விட ஐபிஎல் அதிக சுவாரஸ்யம் தரும் விஷயமாகிவிட்டது!//
கன்னாபின்னாவென்று வழிமொழிகிறேன் பாஸ்.. அவியல் வழக்கம் போல் டரியல்..
உண்மையில் சிறுவர்கள் உலகம் மிக, மிக அழகானதுதான்.
ரசிகர்கள் ஆரம்பத்திலிருந்த உற்சாகம் வழிந்து, ஜெயிச்சா ஜெயிக்கட்டும்.. இல்லைன்னா விடுங்க என்றே பார்ப்பதாய்ப் படுகிறது.”
உண்மை.. இது இல்லைனா இன்னொன்னு என்பது போல அடிக்கடி மேட்ச் நடப்பதே இதற்கு காரணம்..
அவியல் அருமை!
நல்லவேளை, அந்த நவீன சாவித்திரிகள் தாங்களே வாங்கி ஸ்டாக் வைத்துத் தரலாம் என்று யோசிக்கலையே!!
// ‘அப்படீன்னா ஃபைனல் எக்ஸாமுக்கு முந்தி போய் ப்ரின்சிபலைப் போய் உதைங்களேன்?’ //
பிரின்சிபால்னா அறிவு இருக்கும் ஒத்துகறோம்..
அதுக்காக அவரு ஒவ்வொரு வகுப்புத் தேர்வையும் எப்போது எழுதினாலும் வெற்றி பெறுவார் என்பது முடியாததாகும்.
உதாரணமாக, நான் 95 மதிப் பெண் எடுத்து ஒரு பத்து அல்லது பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வை இன்று எழுதினால்.. 50 கூட வாங்குவேனா என்பது கேள்விக் குறி.
ஒரு பதிவுக்கும் அடுத்ததற்கும் ஏன் இத்தனை இடைவெளி? ஏனிந்த பதிவு கட்டுப்பாடு?
// உலகக் கோப்பையை விட ஐபிஎல் அதிக சுவாரஸ்யம் தரும் விஷயமாகிவிட்டது!//
எனக்கென்னவோ இது சரின்னு தோணலை. ஐபிஎல்லில் எல்லா அணிகளும் மற்றதுடன் ரெண்டு முறை விளையாட ""ஆவ்வ்வ் ' என ஒரு கட்டத்தில் சுவாரஸ்யம் போயிடும். மறுபடி கடைசி கட்டத்தில் தான் விழிப்போம்.
உலகின் தலை சிறந்த அணிகள் மோதும் உலக கோப்பைக்கு நிகர் உலக கோப்பை தான்.
பெண் புத்தி முன்புத்தி(டாஸ்மார்க்)!!
உலக கோப்பையில் இந்தியா ஆஸ்திரேலியாவை வென்றதாக சரித்திரம் இல்லை, சரித்திரத்தை மாற்றுவார்களா? இல்லை மண்ணை கவ்வுவார்களா?
குஷ்புவுக்கு சீட்டா...உஷ்..யாருக்கும் கேட்டுராம பேசுங்க,.
கவுண்டமணியின் சில மணியோசைகள்
சிறுவர்களின் உலகம் அழகானது. நம்முடைய அழுக்கை அதில் சேர்க்க வேண்டாம்..//
Correct.
Post a Comment