அ
அவன் இவன் - யுவன்
ஒவ்வொரு புதிய ஆல்பம் வெளியிடப்படும்போது ஆர்வமாக அதற்காகக் காத்திருந்து ஒரிஜினல் சி.டி வாங்குவதில் எனக்கொரு அலாதி ஆர்வம். ஆனால் என்னைப் போன்றவர்களின் ஆர்வத்திற்கு ஒரு சில ஆலபங்களே சரியான தீனி போடுகின்றன. சில ஏமாற்றத்தையும், சில வெறுப்பையுமே தருகின்றன. யாரோ சொன்னார்கள் என்று ‘சேவல்’ பட ஆல்பத்தையெல்லாம் முதல் நாளே வாங்கிய மஹானுபாவன் நான். போலவே – திட்டாதீர்கள் – ஜக்குபாய், மாப்பிள்ளை, தூங்கா நகரம் ஒலிப்பேழைகள்.
மேற்குறிப்பிட்டவை போல வாங்கும் குப்பைகளைக்கெல்லாம் பிராயச்சித்தமாக எப்போதாவது அகஸ்மாத்தாக சில முத்துகளும் கிடைக்கும். இப்போதப்படி அமைந்தது அவன் இவன் பட ஒலிப்பேழை. யுவன் ம்யூசிக்.
ராசாத்தி போல என்று ஹரிசரண் குரல் ஆரம்பித்து அந்த துள்ளலிசை துவங்கும்போது செமயாக இருக்கிறது!
வரிகள் இல்லாத டையா டையா டோல் – உருமியில் ஆரம்பித்து உடுக்கையில் தொடர்ந்து தப்பு, தாரை, பறை என்று செவிப்பறையைக் கிழித்து அலப்பறை தரும் இந்த இசை – இனி எல்லா இடங்களிலும் கேட்கலாம். டாப்!
அவனைப் பத்தி நான் பாடப்போறேன் – தத்துவம் கலந்த அதிரடி சரவெடி. ஒரு மலையோரம் – நல்ல மெலடி. முதல்முறை – சோகப்பாடல்.
ராசாத்தியும், டையா டையா டோலும், அவனைப்பத்தியும் இன்னும் கொஞ்ச காலத்துக்கு தமிழகத்தையே கலக்கப் போகிறது!
--------
வி
கோ
கே.வி.ஆனந்தை எனக்கு பிடிக்கும். மாத நாவல்களின் அட்டைப் படத்தில் அவரது க்ரியேட்டிவ் ஸ்டில்களைப் பார்த்து அவருக்கு கடிதமெழுதி, அவரும் ஒன்றிரண்டு பதிலெல்லாம் போட்டு (அது கெடைச்சா விடுவேனா உங்கள…) - அப்போதிலிருந்து பழக்கம் – அல்லது தெரியும்!
கனா கண்டேன், அயன் என்று மேக்கிங்கில் சிரத்தை காட்டும் இவரது டைரக்ஷனில் வரும் கோ-வை எதிர்பார்க்கக் காரணம் அவரது ப்ரொஃபஷனான அல்லது அவர் ஆசைப்பட்ட ஃபோட்டோக்ராஃபி ஜர்னலிசத்தை சுற்றிப் பின்னப்பட்ட கதை என்பதால்.
கதை எல்லாம் வேண்டாம். விமர்சனத்தில் கதை சொல்ல மாட்டேன் என்று இதோ இந்த என் கம்ப்யூட்டர் டேபிள் மேல் சத்தியம் செய்திருக்கிறேன்.
ஹீரோ, ஹீரோயின், இசையமைப்பாளர், டைரக்டர் என்று கைதட்டுவார்கள். இதில் ஸ்டில்ஸுக்காக நிறைய கைதட்டல்கள். அதே போல அமளி துமளி பாட்டின் லொகேஷன் கண்ணைக் கொள்ளை கொள்கிறது. (நார்வேயாமே.. அப்படியா?)
அந்த பத்திரிகை எடிட்டர் கதாபாத்திரத்துக்கு வைத்திருக்கும் பெயரில் கே.வி.ஆனந்த் என்னைக் கவர்கிறார். குட்!
ஜீவா-ஓகே. கார்த்திகா – நல்ல ஸ்ட்ரக்சர். படத்தில் எல்லாரையும் – என்னையும் – கவர்ந்தவர் பியா. க்யூட்.
பிரகாஷ்ராஜ் வீணடிக்கப்பட்டிருக்கிறார். அல்லது அவர் கதாபாத்திரம் கலைஞரை நினைவு படுத்துவதால் கத்தரிபட்டிருக்கிறார்.
எது எப்படியாயினும், அரசியலுக்கு தகுதியான இளைஞர் வருவதை கொஞ்சம் நெகடீவாகக் காட்டியதால் ஆனந்திற்கு – என் கண்டனம்.
----------------
ய
நேற்றிரவு அலுவல் விட்டு, திருப்பூர் பிக் பஜாரைத் தாண்டி பைக்கை செலுத்திக் கொண்டிருந்தேன். இடது புறம் நான். எனக்கு வலது புறம் கொஞ்சம் தள்ளி ஒரு கார். இரண்டுக்கும் இடையே புகுந்த மினி ஆட்டோ ஒன்றின் மூக்கு முன்னால் செல்ல, கொஞ்சம் அகன்ற அதன் பாடி என் பைக்கை உரசி நான் பறந்து போய் விழுந்தேன். கிட்டத்தட்ட பத்தடிக்கு தரையில் நீச்சலடிப்பது போல தேய்த்தபடி போனேன். ஹெல்மெட் வாழ்க. அதன் தாடைப்பகுதியைப் பார்த்தால் தெரியும். அதுதான் என்னைக் காப்பாற்றியது.
ஆட்டோக்காரன் கொஞ்சம் முன்னே சென்று நிறுத்த, நான் கூட்டத்தை விலக்கி அவனைப் பிடி பிடி என்று சண்டைபிடித்துவிட்டு வந்தேன். பான் அமெரிக்கா – 1500 ரூ – சட்டை பாழ்! கை கால்களில் சிராய்ப்பு. பைக் முன்புறம் அடி.
திரும்பி வந்து பைக் எடுக்கும்போது கூட்டத்திலிருந்தவர்கள் எல்லாருமே ஹெல்மெட்டுக்குதான் தாங்க்ஸ் சொல்லணும் என்றனர். சொல்லீட்டேங்க என்றேன் அதை கையில் வைத்து ஒரு போஸ் கொடுத்தபடி.
ஒரு வாட்ச்மேன் வந்து ‘எதாவது மிஸ் ஆகுதுங்களா.. செல், பர்ஸ்..’ என்று கேட்டு ‘கைல வாட்ச் கட்டிருந்தீங்களா’ என்று இரண்டு மூன்று முறை வினவினார். இல்லைங்க என்று சொல்லி அவரைக் கவனித்தேன். டைட்டான் வாட்ச் ஷோரூமின் வாட்ச்மேன். அதான்!
இன்னொரு ALL IZZ WELL பதிவு வந்திருக்கும். தப்பிச்சீங்க!
--------------
ல்
ப்ருத்விராஜ் கல்யாணத்தால் மனமுடைந்திருக்கும் கன்னி ராசி கன்னியர்களே.. உங்களை மேலும் கலவரப்படுத்தும் செய்தியாக சூர்யா தம்பி, கார்த்திக்கும் திருமணம் நிச்சயமாகி உள்ளதாம்.
பொண்ணு எப்படி இருக்காங்கன்னு இங்க போய்ப் பார்த்துக்குங்க.
அப்பாடா.. கொஞ்சம் நிம்மதி..
----
அவ்ளோதான்.
கொஞ்ச நாளாகவே சிஸ்டம் ப்ராப்ளம். இந்த நான்கு பக்கம் அடிப்பதற்கும் மூன்று முறை ரீ ஸ்டார்ட் ஆகிறது. ஆகவே இதை டாக்டரிடம் அனுப்புகிறேன். திரும்பி வரும் வரை பதிவிருக்காது. ‘இல்லை.. நீங்க எழுதியே ஆகணும்’ என்று அடம்பிடிப்பவர்கள் லேட்டஸ்டாக மார்க்கெட்டில் வந்திருக்கும் லேப் டாப் வாங்கிப் பரிசளிக்கலாம்.
குறிப்பு: வரிவிலக்கு உண்டு.
---------
.
22 comments:
நேற்றிரவு அலுவல் விட்டு, திருப்பூர் பிக் பஜாரைத் தாண்டி பைக்கை செலுத்திக் கொண்டிருந்தேன்.
நானும் அந்த ஏரியாவில் தானே இருந்தேன் எனக்கு தெரியவில்லையே ,டேக் கேர் வென் டிரைவ் .
அவியல் அருமை .
அவியல் நல்ல அருமையாக உள்ளது
அவன் இவன் - யுவன்//
இது இந்த அல்பத்தில் உள்ள பாடல்களைக் கேட்கத் தூண்டும் விமர்சனமாக அமைந்துள்ளது.
கோ... படம்...இறுதி வரிகளே, இளைஞர்களைப் புறக்கணிக்கும் செயலே... இயக்குனரின் கதையின் தொய்விற்கும் எடுத்துக் காட்டு என்பதை அலசியிருக்கிறீர்கள்.
ஹெல்மேட்... விபத்திலிருந்து தலையினைப் பாதுகாப்பதற்கான விடயம் என்பதை, விட உங்கள் அனுபவத்தின் ஊடாக விழ்ப்புணர்வாக வந்திருக்கிறது.
சூர்யா தம்பி. திருமணம்..
ஹி..ஹி...
அப்புறம் லப்டோப்பிற்கு வரி விலக்கு இருக்கா?
நாங்க கார்ட் டிஸ்க் இல்லாம லப்டோப் தாறம். நீங்க முழு விலையும் கொடுக்க ரெடியா;-))
கிருஷ்ணா, இது இரண்டாவது முறை. வண்டி ஓட்டும்போது உங்களுக்கு இன்னும் கவனம் தேவை. அப்படி இல்லாத பட்சத்தில் வண்டி ஓட்டுவதை தவிருங்கள்.
விபத்திலிருந்து தப்பியதற்கு மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
தல,
வண்டி ஓட்டும்போது கவனமா ஓட்டுங்க, அடுத்த பதிவுக்கு என்ன மேட்டர் தேத்தலாம்னு யோசிச்சுட்டே போனா இப்பிடித்தான்.
அவியல் அருமை
//அடம்பிடிப்பவர்கள் லேட்டஸ்டாக மார்க்கெட்டில் வந்திருக்கும் லேப் டாப் வாங்கிப் பரிசளிக்கலாம். //
நீங்க ஆணியே பிடுங்க வேண்டாம்...:))
அடடா என்ன பரிசல். ஜாக்கிரதையா வண்டி ஓட்டுங்க.
கார்த்திக்கு கல்யாணம் என்பதை விட அந்த பொண்ணு போட்டோ பார்த்துட்டு நம்ம தமிழ் நாட்டு கேர்ல்ஸ் என்னென்ன கமெண்ட் விட போறாங்கன்னு பாக்கணும்.. :)))
பார்த்து ஓட்டுங்க பரிசல்.... கார்த்தியோட கல்யாண மேட்டருக்கு ஏன் அப்பாட கொஞ்சம் நிம்மதி?ன்னு நேத்து வீட்ல கார்த்தி போஸ்டரைப் பார்த்ததுமே புரிஞ்சிபோச்சு..... :-)
வாட் கோ இன்(ஆக்)சிடெண்ட் நேற்றிரவு நான் பிக் பஜாரில் தான் இருந்தேன். சின்ன வித்தியாசம் நான் உள்ள நீங்க வெளியே...ஆட்டோவுக்கு ஒன்னும் ஆகலியே...யூத்துன்னா இதெல்லாம் சகஜம்தான்???!!!..
//கார்த்தியோட கல்யாண மேட்டருக்கு ஏன் அப்பாட கொஞ்சம் நிம்மதி?ன்னு நேத்து வீட்ல கார்த்தி போஸ்டரைப் பார்த்ததுமே புரிஞ்சிபோச்சு..... :-)//
ஹஹாஹா.. இது செம..
பாத்து சூதானமா போய் வாங்க கிருஷ்ணா..
அவன் இவன் பாடல்கள் சூப்பர் தாங்க.
விபத்தா... இப்போ எப்படி இருக்கீங்க கிருஷ்ணா.. அதென்ன கீழே விழுந்தெழுந்தும் சண்டை போடப் போறது..
பான் அமெரிக்கா – 1500 ரூ
மச்சி, இந்தியா ஒளிர்கிறது!
‘சேவல்’ பட ஆல்பத்தையெல்லாம் முதல் நாளே வாங்கிய மஹானுபாவன் நான்//
எப்பூடி இப்பூடி !!
hai Thala
"Thalai gavasam uyer gavasam"
Ungal peroor seitha tharmam ungal thalaiyai gaabaaRRi ullathu, Aayram Aayrm kotuththu Pan amerika vaanggalaam aanaal ...
thirusiti koolaaru ji Suri poodungal . .
எல்லாமே அசத்தல்.
உங்கள் (மறு)விபத்துக்கு வருந்துகிறேன் கிருஷ்ணா..கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள். repeated ஆக நடக்கிறது என்றால் டைம் எதாவது சரியில்லை, ஏதும் ப்ரீதி (ப்ரீத்தி அல்ல :) செய்ய வேண்டுமா என்று பாருங்கள்.
Post a Comment