இன்னும் எத்தனை நாளைக்குடா பேசுவீங்க என்று கேட்பவர்களுக்கு - அடுத்ததாக 2015ல் மீண்டும் வென்று புதுப்பிக்கும் வரை - என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் இந்திய ரசிகர்கள்.
டி 20 உலகக் கோப்பை, சென்னை சூப்பர் கிங்க்ஸ் கேப்டனாக ஐபிஎல்-கோப்பை, தொடர்ந்து சாம்பியன்ஸ் ட்ராஃபி, டெஸ்டில் நம்பர் ஒன் இடம் என்று தோனி தொட்டதெல்லாம் துலங்கிக் கொண்டிருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகம் இந்த முறை. அப்படியானதொரு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் மெய்ப்பித்திருக்கும் இந்த உலகக் கோப்பை இறுதி ஆட்டம் சம்பந்தமான சில துளிகள்.
------------------
செண்டிமெண்ட் பார்க்காத க்ரிக்கெட் ரசிகர்கள் வெகு குறைவு. இந்த உலகக் கோப்பையின் போது வந்த சில செண்டிமெண்ட் மெசேஜஸ்:
# உலகக் கோப்பையில் SPIN முக்கியப் பங்கு வகிக்கிறது. எப்படி என்றால் அரையிறுதிக்கு தகுதி பெற்ற 4 அணிகள்: Srilanka, Pakistan, India and Newzeland. நான்கின் முதலெழுத்தைக் கூட்டுங்கள். SPIN! இதில் இருக்கும் ஒரே ஒரு Vowel - I. ஆகவே மற்ற மூன்றைக் காட்டிலும் தனித்திருப்பதால் இந்தியாவின் வெற்றி உறுதி! (ரூம் போட்டு யோசிப்பாங்களோ??)
# இந்தத் தொடரில் ‘எம்’ என்ற எழுத்தில் துவங்கும் இடங்கள்/மைதாங்களில் இந்தியா வென்று வருகிறது. மிர்புர் (வங்கதேசம்), எம்.ஏ.சின்னசாமி அரங்கம் (அயர்லாந்து), மொடிரா (ஆஸி), மொகாலி (பாக்). இவற்றைத் தொடர்ந்து மும்பை-யில் இறுதிப் போட்டி நடப்பதால் வெற்றி நமதே. தவிரவும் கேப்டன் யார்? மகேந்திர சிங் தோனி. M! - Magic!!
# 1983ன் காலண்டரும், 2011ன் காலண்டரும் ஒன்று. ஆக அப்போது கோப்பை வென்றது போல, இப்போதும் வெல்வோம்!
------------------
இது தவிர என் சுற்று வட்டத்தில் நடந்த சில சுவாரஸ்யங்கள்:
எங்கள் நிறுவனத்தில் மைக் அனௌன்ஸ்மெண்ட் அசெம்ப்ளி சிஸ்டம் உள்ளது. வருகைக் குறைவைத் தடுக்க வேண்டி, தென்னாப்பிரிக்காவுடனான மேட்ச் முதல் குறிப்பிட்ட இடைவெளியில் ஸ்கோர் அறிவிக்கிறேன் என்று சொல்லி, அதே போல அறிவித்து வந்தேன். சச்சினும், சேவக்கும் புகுந்து விளையாடி ஸ்கோர் 300ஐத் தாண்டுமென நினைத்து தொடர்ந்து பார்க்க வீட்டுக்கு ஓடிவிட்டேன். மேட்ச் தோற்றோம்.
அந்த செண்டிமெண்டால், ஆஸியுடனான மேட்ச் ஸ்கோரை அறிவிக்கவே இல்லை நான். பலரும் கேட்க அவ்வப்போது நோட்டீஸ் போர்டில் ஒட்டிவிட்டேன்!
---------------
அருகாமையிலுள்ள நிறுவனத்தில் பணிபுரியும் நண்பர் ஒருவர் ஆஸி மேட்ச்சின் போது பொய் காரணம் சொல்லி மட்டம் போட்டுவிட்டு பக்கத்து தாபா ஒன்றில் பீரோடு மேட்ச் பார்த்து, செகண்ட் இன்னிங்க்ஸூக்கு தன் வீட்டுக்குப் போனாராம். மேட்ச் வெற்றி. அந்த செண்டிமெண்டின் காரணமாக பாக் மேட்ச்சுக்கும் அதேமாதிரி, ஃபைனல்ஸுக்கும் அதே மாதிரி செய்தாராம். நான் ‘மேட்ச் பாக்கப் போறேன்னே சொல்ல வேண்டியதுதானே? PM, ப்ரசிடெண்ட் எல்ல்லாம் மேட்ச் அன்னைக்கு ஆஃபீஸுக்கு மட்டம் போட்டுட்டு க்ரவுண்ட்ல உட்கார்ந்திருக்காங்க… உங்களுக்கு என்ன? என்றதற்கு ‘நான் கேட்டா லீவ் தருவாங்க சார். ஆனா பொய் சொல்லி லீவெடுத்துப் போனாத்தான் ஜெயிக்குது. அதான்’ என்றார்.
------------------
இன்னொரு நண்பர் - ஃபைனல்ஸ், இந்தியா பேட்டிங்கின் போது, சச்சின் அவுட் ஆன பிறகு தன்வீட்டு பிரம்பு சோஃபாவில் ஒரு காலை HAND RESTல் (கை வைக்கும் பகுதி) தூக்கிப் போட்டபடி பார்த்துக் கொண்டிருந்தாராம். விராட் கோஹ்லி, காம்பீர் சிறப்பாக விளையாட கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கு மேலாக பொசிஷன் மாறாமல் மேட்ச் பார்த்தாராம். கோஹ்லி அவுட் ஆனதும் காலை இறக்கி சாப்பிட்ட தட்டை சிங்கில் போட்டு, கை கழுவிவிட்டு வருவதற்குள் தோனி / காம்பீர் சிறப்பாக ஆட ஆரம்பிக்க கையை சேரில் வைத்து நின்றபடியே பார்த்தாராம். காம்பீர் அவுட் ஆனதும் டக்கென்று உட்கார்ந்தவர் அதே பொசிஷனில் மேட்ச் முழுவதும் பார்த்தாராம். ‘மொத்தம் மூணே போஸ்தான் மாறினேன்.. பயம்ம்ம்மா இருந்துச்சு’ என்றவரைப் பார்க்க வித்தியாசமாக இருந்தது.
----------------------
வேறொரு நண்பரின் மனைவி புலம்பியது அதைவிட சுவாரஸ்யம்: ‘இனிமே மேட்ச் பாக்க வேணாம்னு சொல்லுங்ணா.. அன்னைக்கு பூரா என்ன டென்ஷன். எதாவது சொல்லப் போனாக்கூட முகத்தைப் பார்த்தாலே பயமா இருந்துச்சு. இவருக்காகவாது இந்தியா ஜெயிக்கணும்ன்னு வேண்டிகிட்டேன். ஃபைனல்ஸ்ல சச்சின் ஆடிகிட்டிருக்கும்போது, தேவையில்லாம அவர்ட்ட போய் ‘டீ வேணுமா’ன்னு கேட்டேன். அப்ப சச்சின் அவுட். ‘நீ நடுவுல வந்து கேட்டதுனாலதான் சச்சின் அவுட்டு’ன்னு எனக்குத்தான் திட்டு விழுந்துச்சு’ என்று புலம்பினார். அவனை முறைக்க அவன் ‘மேட்ச் ஜெயிச்சதுக்கு சண்டே கூட்டீட்டு போய் பார்ட்டி வெச்சு கிஃப்ட் வாங்கிக் கொடுத்து சரிகட்டீட்டேண்டா’ என்றான்.
------------------------
நான் ஃபைனல்ஸை நண்பனின் ரூமில் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு வீட்டுக்கு ஓடி வந்துவிட்டேன். வீட்டில் மகள்கள் இருவருமே இந்த உலகக் கோப்பை முதல் க்ரிக்கெட் ரசிகைகள் ஆகிவிட்டார்கள். அவர்களோடு பார்த்தேன். முழுக்க முழுக்க பார்க்காமல் சேனல் மாற்றி மாற்றி அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தேன். கடைசி கட்டத்தில் முழுவதும் பார்த்தேன். ஆனால் தோனியின் சிக்ஸை லைவாகப் பார்க்கவில்லை. இன்னும் 20 ரன்னுக்கும் குறைவாக இருந்த போது வந்து கம்ப்யூட்டரில் அமர்ந்துவிட்டேன். உள்ளிருந்து மகள் அப்டேட் செய்து கொண்டிருந்தாள். ‘அப்பா சிக்ஸர்’ என்று அவள் கத்த, நான் ஓடுவதற்குள் யுவராஜ் தோனியைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தார்! ஜெயித்து முடிந்ததும் பட்டாசு வெடித்துக் கொண்டாடி, அந்த நள்ளிரவில் மகள்களோடு ஒரு ரவுண்டு வந்தேன். ஊரே திருவிழாக் கோலமாக இருந்தது.
வேறு சிலர் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று கேட்டபோது:
சௌந்தர்: (தனியார் நிறுவன ஊழியர்):
என் நண்பனின் அறையில், வேறு சில நண்பர்களோடு முதல் இன்னிங்ஸ் பார்த்தேன். சேஸிங்கின் போது சச்சின் அவுட் ஆனதும் இந்த டிவி ராசியில்லை என்று அவரவர் வீட்டுக்கு போக முடிவெடுத்து கிளம்பிப் போய்விட்டோம். தோனியின் அந்த சிக்ஸின் போது குதித்து விட்டேன். மேட்ச் ஜெயித்ததும் எங்கள் காம்பவுண்டில் எல்லாருமாய் கூல்டிரிங்க்ஸ், ஸ்நாக்ஸ் என்று சாப்பிட்டபடி டான்ஸ் ஆடிக் கொண்டாடினோம்.
முக்கியமான இன்னொரு விஷயம்: நாங்கள் முதல் இன்னிங்ஸ் பார்த்த அறையில் இருந்த அந்த நண்பர், நாங்கள் வெளியேறினதும் டிவியை ஆஃப் செய்துவிட்டு பக்கத்து அறையில் போய் மீதி மேட்சைப் பார்த்தாராம்!
சில பிரபல வலையுலகினரைக் கேட்டபோது..
சுசி:
சத்தியமா இந்தியா ஜெயிக்கும் ஆரம்பம் முதலே நம்பிக்கை இருந்தது. தோனி சிக்ஸ் அடிச்சப்ப அப்டியே அழுதுட்டேன். ஜெயிச்சதும் போஸ்ட் எழுதி, BUZZ போட்டு கொண்டாடினேன். அடுத்தநாள் வீட்ல சமையல் கட்.
ஜோசப் பால்ராஜ்:
நான் அப்போது கொரியாவில் இருந்தேன். மேட்சைப் பார்க்க முடியவில்லை. நெட்டில்தான் பார்த்துக் கொண்டும், நண்பர்களோடு சாட்/BUZZல் பேசிக் கொண்டும் இருந்தேன். தவிர, கார்க்கியின் ட்விட்ஸை விடாமல் ரசித்துக் கொண்டிருந்தேன். அவரது ஸ்டைலில் கலக்கிக் கொண்டிருந்த அந்த ட்விட் நான் நண்பர்களோடு இருக்கும் ஃபீலைத் தந்தது.
சென்னை / சிங்கப்பூரில் இருந்திருந்தால் நண்பர்களோடு நேரில் கொண்டாடியிருக்கலாம் என்ற வருத்தம் இருக்கிறது.
அனுஜன்யா:
கோப்பை நிச்சயம் இந்தியாவுக்குதான் என எதிர்பார்த்தேன். மும்பையில் வான்கடே மைதானத்தில் ஒரு புறம் கேத்ரினா கைஃப், மறுபுறம் Beboவுடன் பார்த்தேன். தோனி சிக்ஸ் அடித்ததும் மேட்ச் முடிந்துவிட்டதாக உணர்ந்தேன். (அடா அடா அடா!!!) காத்ரினாவுக்கு பை பை சொல்லிவிட்டு கிளம்பினேன். அருகிலிருந்த கோவில், மசூதி, புத்த விஹார் எல்லாவற்றுக்கும் சென்று கடவுளுக்கு ந்ன்றி சொன்னேன்.
(மேலே சொன்னதில் ஒன்று மட்டும் நடக்கவில்லை - அனுஜன்யா)
அதிஷா: (முன்னாள் வலைப்பதிவர் - இந்நாள் பத்திரிகையாளர்)
உலக கோப்பை தொடங்கும் முன் அதுகுறித்து கவர்ஸ்டோரி செய்ய சொல்லி எடிட்டர் சொன்ன போதே , நான் பரிந்துரைத்த தலைப்பு ''இந்த முறை இந்தியாதான்!'' கவர்ஸ்டோரியும் அதையொட்டியே இந்தியா ஏன் வெல்லத்தகுதியான அணி என்கிற அடிப்படையிலேயே எழுதியிருந்தேன். மனசு முழுக்க இந்தியா வெல்லும் என்கிற எண்ணம் மட்டுமே போட்டி தொடங்குவதற்கு முன் நிறைந்திருந்தது. அதற்கு என்னிடம் வலுவான காரணங்கள் ஏராளமாய் இருந்தன.
இறுதிப்போட்டியை அலுவலகத்தில் சக தோழர்களோடு இன்டர்நெட்டில்தான் பார்க்க முடிந்தது. தோனி சிக்ஸ் அடித்த தருணத்தில் உணர்ந்ததை வார்த்தைகளாலும் விவரிக்க முடியுமா என்ன! கண்ணீர் பெருக்கெடுத்து ஓட.. மனசுக்குள் மத்தாப்பு இல்லை இல்லை தீபாவளியே கொண்டாடி தீர்த்திருப்பேன்.. மேட்ச் முடிந்ததும் நண்பருகளுக்கெல்லாம் போன் போட்டு ஒவ்வொருவரிடமும் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டேன். அதில் பலரும் இந்தியாவின் மீது நம்பிக்கையில்லாமல் தோற்றுவிடும் என கூறியவர்கள். அதில் சிலரை எழுதவியலாத கெட்டவார்த்தைகளால் அர்ச்சனை செய்யவும் தவறவில்லை. இவை தவிர மேட்ச்சின் ஒவ்வொரு விநாடியிலும் டுவிட்டரில் அடித்த கூத்துகள் மறக்க முடியாதவை.
யுவகிருஷ்ணா :
1. இந்தியன் என்கிற அடிப்படையில் இந்தப் போட்டித் தொடரின் ஆரம்பத்தில் மட்டுமல்ல. ஒவ்வொரு உலகக்கோப்பையின் போதும் இந்தியாதான் வெல்லும் என்று எதிர்ப்பார்ப்பது என்னுடைய வழக்கம்.
2. இறுதிப்போட்டியை அலுவலகத்தில் பார்த்துக் கொண்டிருந்தேன். சச்சின் அவுட் ஆனவுடனேயே ‘ஆப்பு’தான் என்று அஞ்சிப்போய், வீட்டுக்குச் சென்று மீதியை கண்டேன். வீட்டில் நான் மட்டுமே மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தேன்.
3. தோனி அடித்த வின்னிங் ஷாட் சிக்ஸரை விட, முக்கியமான கட்டத்தில் ஆஃப் சைடில் கங்கூலி பாணியில் அவர் அடித்த கச்சிதமான சிக்ஸரே அதிக மகிழ்ச்சியை தந்தது. இறுக்கத்தைத் தளர்த்திய சிக்ஸர் அது. வின்னிங் ஷாட் அடித்தபோது, வாழ்நாளில் இன்னொருமுறை காணக்கிடைக்காத அரியத் தருணம் இதுவென்பதாக உணர்ந்தேன்.
4. மேட்ச் முடிந்ததும் கிட்டத்தட்ட யோகநிலைக்குப் போய்விட்டேன். ஹர்பஜன் அழுததைக் கண்டதும் உணர்ச்சிவயப்பட்டு என்னுடைய கண்களும் கலங்கியது. சச்சினை தோளில் சுமந்து வீரர்கள் மைதானத்தை வலம் வந்தார்கள். நாடே அவ்வீரனை தோளில் சுமந்த உணர்வு ஏற்பட்டது. அன்றிரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. பட்டுக்கோட்டை பிரபாகரின் ‘பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்’ நாவலை வாசித்துக் கொண்டிருந்தேன்.
ச்சின்னப்பையன் சத்யா:
உலகக்கோப்பை பாகிஸ்தான் வெல்லும் என எதிர்பார்த்தேன். இறுதிப் போட்டியை மகளுடன் வீட்டில் அவளுக்கு க்ரிகெட்டைப் பற்றிச் சொல்லிக் கொண்டே பார்த்தேன். தோனி சிக்ஸ் அடித்த போது CHAK DE INDIA என்று உரக்கக் கத்திவிட்டேன். நானே விளையாடியபோது களைப்பு. அரைமணி நேரம் தூங்கிவிட்டு குடும்பத்தோடு ஐஸ்க்ரீம் சாப்பிடப் போனேன்!
கார்க்கி:
தொடர் ஆரம்பிக்கும் முன்பு நான் கணித்தது இந்த பதிவில் இருக்கிறது. தொடர் ஆரம்பித்த நாள் முதலே ட்விட்டரில் இந்தியாதான் ஜெயிக்கும் என சொல்லியிருந்தேன். அலுவலகத்தில் இதுவரை 600 ரூபாய் இந்தியா ஜெயிக்கும் என சொல்லி வென்றிருக்கிறேன் :)
இந்த உலக கோப்பையில் எல்லா போட்டிகளையும் நான் குறைந்தது 100 பேருடன் பார்த்தேன்.ஆம் ட்விட்டரில் நண்பர்களோடு உரையாடிக் கொண்டு தான் போட்டிகளை ரசித்தேன். இறுதிப் போட்டியையும் வீட்டிலே இருந்து, ட்விட்டரில் பேசிக்கொண்டே பார்த்தேன்.
உண்மையை சொல்ல வேண்டுமெனில் தோனி சிக்ஸ் அடிக்கும் முன்பாகவே இந்தியா வெற்றிபெற்று விட்டது. அத்தருணத்தில் ட்விட்டரில் இந்தியா தோற்கும் என சொல்லிக் கொண்டிருந்தவர்களை தேடித்தேடி வம்பிழுத்துக் கொண்டிருந்தேன். என் உற்சாகத்தை அப்படியே பதிவு செய்துக் கொண்டிருந்தேன். அதனால் தோனியின் செக்ஸி சிக்ஸை ரீப்ளேயில்தான் பார்க்க முடிந்தது.
போட்டி முடிந்தவுடன் பட்டாசு வெடித்தோம். சில நண்பர்களின் தொலைபேசி அழைப்பு இன்னும் உற்சாகம் தந்தது. பின் மீண்டும் வந்து ட்விட்டரில் மூழ்கிவிட்டேன். ட்விட்டரில் பேசுவது எனக்கு ஏனோ ஒரு பெரிய குழுவுடன் நேரில் அரட்டையடிப்பது போலிருப்பதால் அதையே செய்து கொண்டிருந்தேன்.
பாலராஜன்கீதா:
கிருஷ்ணா, வீட்டில் அனைவரும் நலமா? ஏதோ கேள்வி கேட்டிருக்கிறீர்கள். அதில் அடிக்கடி க்ரிக்கெட் என்ற வார்த்தை வருகிறது. அப்படி என்றால் என்ன?
.
21 comments:
// அதில் அடிக்கடி க்ரிக்கெட் என்ற வார்த்தை வருகிறது. அப்படி என்றால் என்ன? //
:)
// ‘நான் கேட்டா லீவ் தருவாங்க சார். ஆனா பொய் சொல்லி லீவெடுத்துப் போனாத்தான் ஜெயிக்குது. அதான்’ என்றார் //
பெரிய :)
மீ த பர்ஸ்ட் ?
மீ த செகண்ட் :)
மற்றவர்களுடைய சந்தோஷப் பகிர்வுகள் நிஜமா, இல்ல நீங்களா எழுதினீங்களா ? :)
எப்படியோ, கப்பு அடிச்சுட்டோம், தங்க காப்பு மாதிரி !! நம்மூர்ல இருந்திருந்தா முன்னமே ஒரு 1000 வாலா வாங்கி ரெடியா வெச்சிருந்திருப்பேன், தோனி சிக்சர் அடிச்ச உடனே மொதல் ஆளா வெடிக்க... ஹ்ம்ம்..
ஒரொருத்தரும் ராசி பாக்கறது நெனச்சா தமாஷு தான் போங்க.. வேற எதாச்சுமா இருந்தா அசால்ட்டா விட்ரலாம், வேர்ல்ட் கப் ஆச்சே !!
மேலுள்ளவற்றில் கடைசி சிக்சர்
இதல்லாம் புதுசு இல்ல. வீட்ல நிறைய கிரிக்கட் வெறியர்கள் இருப்பதால் இதை எல்லாம் பார்த்திருக்கேன். சந்தோசம். கிரிக்கட் கொடுமை முடிஞ்சுது.
தூரதர்ஷ்னில் பார்த்தேன். அதிலிருந்து 10 செகண்ட் கழித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் என இரண்டு சேனலிலும் தோனியின் சிக்ஸ்ரைப்பார்த்தேன்..
கண்களில் எதிரியைக் கண்டு பாயும் புலிபோல் கண்களிலும், முகத்திலும் கொப்பளிக்கும் ஆக்ரோசத்துடன் அந்த பந்தை எதிர்கொண்ட விதம் எனக்குப் பிடித்தது.
அடித்துவிட்டு கூலாக பார்த்துக்கொண்டே, மட்டையை சுழற்றிக்கொண்டே சென்ற விதமும் அருமை..
வருகைக் குறைவைத் தடுக்க வேண்டி, தென்னாப்பிரிக்காவுடனான மேட்ச் முதல் குறிப்பிட்ட இடைவெளியில் ஸ்கோர் அறிவிக்கிறேன் என்று சொல்லி, அதே போல அறிவித்து வந்தேன்.//
மற்றவங்க வேலை செய்யணுமேன்னு நீங்க வேலை செய்யாம இருந்தீங்களா? நல்ல கதை தான்
:)
என்ன பரிசல் அந்த கடைசி நிமிட நேரங்களை பார்க்காமல் கம்ப்யூட்டரில் இருந்தீங்களா? !!
என் பெண்ணும் கூட இந்த உலக கோப்பை முதல் தான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தாள். இத்தனை நாள் கிரிக்கெட் பார்கவே விட மாட்டாள். இதற்காக இப்போது தான் இரண்டாவது டிவி வாங்கி கடைசியில் ஒரே டிவியில் அனைவரும் பார்த்தோம்
அப்புறம் அதிஷா முன்னாள் அல்ல "இந்நாளும்" வலை பதிவர் தானுங்க
பரிசல் டீ வேணுமா?
//இன்னும் எத்தனை நாளைக்குடா பேசுவீங்க என்று கேட்பவர்களுக்கு - அடுத்ததாக 2015ல் மீண்டும் வென்று புதுப்பிக்கும் வரை - என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் இந்திய ரசிகர்கள். //
ஒற்றுமை இருக்கும்னா எப்போதும் ஜெயிப்பாங்க.
செண்டிமெண்டுகள் தமாஷு தான் போங்க.
//சில பிரபல வலையுலகினரைக் கேட்டபோது..//
அவ்வவ்வ்வ்வ்.. ஆவ்வ்வ்வவ்வ்வ்..
காபி கேட்டு இருந்தால் சச்சின் 100 எடுத்து இருப்பாரோ.
ஆனா இந்த பதிவிலே சிக்சர் அடிச்சது என்னமோ பாலராஜன்கீதா சார்தான்:-))
அட அட.... என்னா செண்டிமெண்ட்....
-----
நல்ல வேள.. டாய்லெட்லலாம் டிவி வைக்கல....
http://myneta.info/tamilnadu2011/
தமிழ் நாடு சட்ட மன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள் பற்றிய விவரங்கள்(தொகுதிவாரியாக) இந்த தளத்தில் சீரிய முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.
இதை முடிந்த அளவு பிரபலப்படுத்தவும்
நன்றி
எல்லோரும் அனுபவித்த சுவாரஸ்யமான வேடிக்கையான உண்மை அனுபவங்கள்.
ஐந்து குடும்பத்தினர் சேர்ந்து பார்த்த போது இதே செண்டிமெண்ட் (நீ வந்தால் அவுட் ஆகிறார்கள் என்பது போல்). வெற்றிக்கு பிறகு அன்று இரவு எல்லோருக்கும் ஒரு குடும்பத்தினர் விருந்து கொடுத்தனர்.
இன்னும் ஒரு தரவு......
இந்த முறை இந்தியா சாம்பியன் ஆவதற்க்கு, இதற்க்கு முன்னர் சாம்பியன் ஆன அணிகள் எல்லாவற்றையும் ஜெயிக்கவேண்டி வந்துள்ளது
மேற்க்கு இந்திய அணி, பாகிஸ்தான், அஸ்ரேலியா, ஸ்ரீலங்கா
//////இவருக்காகவாது இந்தியா ஜெயிக்கணும்ன்னு வேண்டிகிட்டேன். ஃபைனல்ஸ்ல சச்சின் ஆடிகிட்டிருக்கும்போது, தேவையில்லாம அவர்ட்ட போய் ‘டீ வேணுமா’ன்னு கேட்டேன். அப்ப சச்சின் அவுட். ‘நீ நடுவுல வந்து கேட்டதுனாலதான் சச்சின் அவுட்டு’ன்னு எனக்குத்தான் திட்டு விழுந்துச்சு’ என்று புலம்பினார்/// என்ன கொடும சரவணன் ))))))
கோப்பை இந்தியாவுக்குத்தான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை. கடைசி 2 ஓவருக்கு EB கரண்ட் கட் பன்னிட்டாங்க.. மறுபடி 11:30 க்குத்தான் வந்தது. அடுத்த 2 நாளும் எல்லா நியூஸ் சேனலிலும் வின்னிங் லாப் பாத்தேன்.
Post a Comment