April 2 2011 - சனிக்கிழமை இரவு. மறக்க முடியாத மேட்ச்! இந்தியா கையில் கோப்பை!
கோப்பையை வென்றதன் மூலம் பலரின் வாயை அடைத்துவிட்டார் தோனி!
பலர் என்று நான் சொல்வது எதிர் நாட் டு அணியையோ எதிர் நாட்டின் பத்திரிகையையோ அல்ல. நம்ம கூடவே இருந்துட்டு இவனுக ஆகாதுப்பா என்று புலம்புபவர்களைத்தான்!
ஏற்கனவே ஆஸியை ஜெயிச்சப்பவே, இதுக்காக ஒரு போஸ்ட் போட்டு பொங்கீட்டேன். பாகிஸ்தான் கிட்ட உங்க பப்பு வேகாதுன்னாங்க.. அதுக்கும் ஆப்பு வெச்சாச்சு. மறுபடி இலங்கைகூட ஃபைனல்ஸ்ன்னப்ப, 40%தான் இந்தியாவுக்கு சான்ஸ்னாங்க.. கோவப்பட்டு, மேட்சுக்கு முன்னாடியே இந்த போஸ்டைப் போட்டேன். அதுக்கும் பேராசைன்னாங்க!
மார்ச் 31 அன்னைக்கு ட்விட்டர்ல 'எல்லார்க்கும் முட்டாள்கள் தினம் ஏப்ரல் 1. இலங்கைக்கு மட்டும் ஏப்ரல் 2’ன்னு எழுதினேன். யாரோ வந்து திட்டினாங்க.
இப்ப என்னாச்சு? சொல்லி அடிச்சோம்ல?
------------- ---------------- ------------------
தோனி!
(ஜனாதிபதி மாளிகையில் ஆட்டநாயகன் விருது + கோப்பையுடன்)
சிலர் பேசறாங்க. இவர் விளையாடாத கேப்டன்னு. தேவையே இல்லைப்பா. மேன் மேனேஜ்மெண்ட்னு ஒரு விஷயம் நான் இவர்ட்டேர்ந்து கத்துகிட்டேன். என்னா கூல்!
கீழ பாருங்க..
சரி.. இந்த ஸ்டில் பாருங்க..
பந்து சிக்ஸுக்கு போயாச்சு. யுவிக்கு தெரிஞ்சுடுச்சு. இது லைஃப் டைம் ஷாட்ன்னு. ஆனா இப்பவும் தோனி முகத்துல ஆரவாரம் இல்லை. அர்ஜூனன்யா அவன். பந்து போய் ராஜபக்ஷே மண்டைல விழுந்து கன்ஃபர்ன் ஆகறதுக்காக பார்த்துட்டே இருக்காரு!
இதுவரைக்கும்கூட ஓகே-ங்க..
இப்ப இந்த ஸ்டில் பாருங்க..
சிக்ஸும் அடிச்சாச்சு. மேட்சும் ஜெயிச்சாச்சு. யுவியால அடக்க முடியல.. ‘இப்பக் கூட கத்தமாட்டியாடா நீ’ங்கற மாதிரி தோனியைப் பார்த்து கேட்கற மாதிரியே இருக்கா?
ஆனா நம்மாளு என்னா சாவகாசமா ஸ்டிக்கை கலெக்ட் பண்றாரு.. மனுஷனாய்யா இவன்? லவ் யூ மேன்!
-------------------------
சச்சின்!
சச்சினும் சரி, ரஜினிகாந்தும் சரி.. ஒரே மாதிரிதான். தங்களோட ஃபீல்ட்ல டாப்ல இருந்து பல சாதனைகள் செஞ்சிருக்காங்க. ஆனாலும் இந்த ரெண்டு பேரும் என்ன சொன்னாலும், சொல்லலைன்னாலும், செஞ்சாலும், செய்யலைன்னாலும் குத்தம்!
ஃபைனல்ஸ்ல சச்சின் அவுட் ஆனப்ப என் ஃப்ரெண்ட்ஸ் சில பேரே கூப்ட்டு திட்டினாங்க.. அட.. கவலைப்படாதீங்கப்பா.. இன்னும் நாலு விக்கெட் விழுந்தாலும் ஜெயிக்கும்ன்னேன். சச்சினை நம்பி மட்டுமே இருக்கற டீம் இல்ல இது.
யோசிச்சுப் பாருங்க.. எதிரணி எப்படி வியூகம் அமைச்சிருப்பாங்க. சச்சின், சேவக்கை தூக்கிட்டா கப்பைக் கடத்தீட்டுப் போய்டலாம். மிடில்ல யுவராஜை கழட்டிவிட்டா போதும்’ இப்படித்தானே நினைச்சிருப்பாங்க. அவங்க நெனைச்சே பார்க்காத காம்பீர் ஆடினது அன்னைக்கு சர்ப்ரைஸ். அதே மாதிரி, விராட் கோஹ்லி அவுட் ஆனதும் யுவி வந்து சடார்னு ஒரு விக்கெட் விழுந்தாலும் கொஞ்சம் கஷ்டமா போயிருக்கும். அதான் சடார்னு ஒரு டவுன் முன்னாடி வந்து மிரட்டீட்டாரு தோனி.
அந்த முடிவு சரியா அமைஞ்சு மேட்ச் ஜெயிச்சதால ஓகே. இல்லைன்னா? தோனி பேசும்போது சொன்னது செம! ‘ஏன் அஸ்வினுக்கு பதிலா ஸ்ரீசாந்த்? ஏன் நீ ஒரு டவுன் முன்னாடி இறங்கின’ங்கறா மாதிரி கேள்விகள் வரக்கூடாதேன்னு பொறுப்பா ஆடினேன்னு சொன்னாரு.
சச்சின் ரிடயர்மெண்டாம்! அடப்பாவிகளா.. அதுக்கு வேலையே இல்லையே.. இத்தனை வருஷமா ஆடிகிட்டிருந்தாலும், பாருங்க.... இந்த சீரிஸ்லயும் சொச்ச ரன் வித்யாசத்துல இரண்டாமிடம் பிடிச்சிருக்காரு. சச்சின் சிங்கிள்ஸ் எடுக்கறதையும், பவுண்டரியைத் தடுக்கறதையும் பார்த்தா வயசு தெரியுது உங்களுக்கு?
இந்த வெற்றில சச்சினுக்கு கண்டிப்பா பங்கிருக்கு. அவருக்கு நம்மளால கோடி, லட்சமெல்லாம் தரமுடியாது. எனக்காக ஒரே ஒரு உறுதிமொழியைத் தாங்க.
சச்சின் அடிச்ச செஞ்சுரி 48. அதுல இந்தியா தோத்தது 13. பல முறை சொல்லியாச்சு. அடிக்கடி நூறு அடிக்கறதால, தோக்கற மேட்ச்தான் உங்களுக்கு வலியா நினைவில இருக்கு. அதுவும் சமீபமா சச்சின் செஞ்சுரி போட்டா மேட்ச் தோக்கும்ன்னு சொல்றவங்க அதிகமாய்ட்டு வர்றாங்க. அப்படி ஒரு எண்ணமிருந்தா இன்னியோட விட்ருங்க. உங்க ஃப்ரெண்ட்ஸ் யாரும் அப்டி பேசினா வாய்லயே குத்துங்க..
யுவராஜ், ஜாகிர்ன்னு இன்னும் பலபேரைப் பத்தி பலதும் எழுதலாம். சச்சினைத் தூக்கி தோள்ல வெச்சுட்டு சுத்தினாங்க பாருங்க... எவ்ளோ முக்கியமான தருணம் அது.
ஒரு விஷயம் தெரியுமா? 21 வருஷமா விளையாடறாரே தவிர, பெரிய டோர்ணமெண்ட் கப் எதுவும் சச்சின் கைல வாங்கிப் பாத்ததில்லை. அதாவது 4, 5 டீமுக்கு மேல விளையாடற டி20 கப், ஐ பி எல், சாம்பியன்ஸ் ட்ராஃபின்னு எதுவும் சச்சின் இருக்கறப்ப ஜெயிச்சதில்லை. அவ்ளோ தூரம் விளையாண்டு, உழைப்பைக் கொட்டியும் இவருக்கு சரியான டீம் மேட்ஸ் இந்த தடவைதான் அமைஞ்சிருக்கும்பேன் நான். அந்த வெறிதான் நேத்து. சச்சின் கைல கப்பை கொடுத்த ஒவ்வொருத்தரையும் நான் நமஸ்கரிக்கறேன்.
------------------
அடுத்த அதிரடி ஐ பி எல் ஆரம்பம். வழக்கம்போல நான் CSK பக்கம்.
29 comments:
me too boss. csk. :-)
தொரை.. யாருப்பா அது ரஜினி பக்கத்தில் ?
Nice post!!!!!!!!!
senthi,
tirupur
(doha)
@ முரளி
அப்பவும் ஒரு பார்ட்டி இருக்கு! (சரி என்னது அது ப்ரொஃபைல் ஸ்டில்..?)
@ கொல்லான்
அடிங்.. மாஞ்சு மாஞ்சு க்ரிக்கெட்டை எழுதினா கேள்வியப் பாரு..
:)
@ செந்தில்
எப்ப ஊருக்கு வர்றீங்க?
அட விடுங்க பாஸ் இது மட்டுமா "சீரிசாந்த் டீம்ல இருந்தா நமக்கு அதிர்ஷ்டம் அதனால் தான் அவரை டீம்ல சேர்த்தாங்கனு" வேற சொல்றாங்க. அப்புறம் சச்சினைப் பத்தி குறை சொல்ற மக்களுக்கு வீரட் கோஹ்லி சொன்னது சரியான பதிலடி " 21 வருஷமா நாட்டைத் (அணியை) தோளில் தூக்கிய சச்சினை இன்று நாங்கள் தூக்குகிறோம்".எனக்கு
ஒரே குறை "அந்த மேடையில் நாம் கபிலுக்கு இடம் கொடுத்து இருக்க வேண்டும்"
கொல்லான் சொல்ல மறந்துட்டேன் "ரஜினி பக்கத்தில் இருப்பது முகேஷ் அம்பானியின் மனைவி"
"சச்சின் அடிச்ச செஞ்சுரி 48. அதுல இந்தியா தோத்தது 13"
I did not know this. So as you said they should stop talk like that....
congrats to India ......
//பந்து போய் ராஜபக்ஷே மண்டைல விழுந்து கன்ஃபர்ன் ஆகறதுக்காக பார்த்துட்டே இருக்காரு!//
செம பரிசல் :)
// உங்க ஃப்ரெண்ட்ஸ் யாரும் அப்டி பேசினா வாய்லயே குத்துங்க..//
சொல்லிட்டிங்க இல்லை.. அப்புறம் போலிஸ் கேசானா இந்த பதிவை காப்பி எடுத்தும் குடுத்திடறேன்.
இருந்தாலும் மொட்டைத் தலையையும் முழங்காலையும் ஏந்தான் முடிச்சு போடறாங்களோ. ரொம்ப வருத்தமா இருந்தது அவர் செஞ்சரி இல்லாமலே அவுட்டானப்போ.
//ஆனா நம்மாளு என்னா சாவகாசமா ஸ்டிக்கை கலெக்ட் பண்றாரு.. //
என்னமோ எனக்கு தோனிய பிடிக்கிறதில்லை. ஃபைனல்ஸ் பார்த்ததில இருந்து அம்புட்டு மரியாதை அவர் மேல.
அருமை! :-)
Best post Parisal.. Dedicated to the vettriveerargal !!
//சச்சின் அடிச்ச செஞ்சுரி 48. அதுல இந்தியா தோத்தது 13//
அப்பட்டமான உண்மை பரிசல் அன்பரே;
விளையாட்ட விளையாட்டிற்கான மரியாதையோட எழுதியிருக்கீங்க. சில பேர் அரசியல், ஈழம், கிரிக்கெட் எல்லாம் என்னத்துக்குன்னு எழுதி பயமுறுத்துறாங்க.
//சச்சின் செஞ்சுரி போட்டா மேட்ச் தோக்கும்ன்னு சொல்றவங்க அதிகமாய்ட்டு வர்றாங்க. அப்படி ஒரு எண்ணமிருந்தா இன்னியோட விட்ருங்க. உங்க ஃப்ரெண்ட்ஸ் யாரும் அப்டி பேசினா வாய்லயே குத்துங்க..//
கிருஷணா சார். இதெல்லாம் ஓவர். சச்சின் 100 அடிக்கவே கூடாதுன்னு வேண்டிட்டு இருந்தவள நானும் ஒருத்தி. 100 அடிச்சிருந்தா கண்டிப்பாக இந்தியா தோத்திருக்கும். இலங்கை வென்றிருக்கும். என் ஆசையில் மண் விழுந்திருக்கும்.
http://reap-and-quip.blogspot.com/2011/04/03-04-2011.html
பிரண்ட்ஸ் அப்டி பேசினா, வாயில சக்கரை போட்டுங்க. இந்த குத்தெல்லாம் வேண்டாம். எனக்கே நான் எப்படி குத்தறதாம்.? சக்கரை போடறது ஈசி யூ சி?
////பந்து போய் ராஜபக்ஷே மண்டைல விழுந்து கன்ஃபர்ன் ஆகறதுக்காக பார்த்துட்டே இருக்காரு!////
விழுந்திருந்தால். ஹா ஹா ஹா.
@ எட்வின்,
இலங்கை மட்டும் வென்றிருந்தால், எல்லா படுகொலைகளும் மூடி மறைக்கப்பட்டிருக்கும். போரால் அழிந்த தேசத்துக்கு ஒரு ஆறுதல், ஒரே நேஷன் ஒரே நாடு ஒரே புடலங்காய்னு திடீர் பாசம் தமிழர் மேல எல்லா இனவாதிகளுக்கும் (புரிந்துணர்வுள்ள சிங்களவர்கள் இனவாதிகள் அல்ல). இந்தியா வென்றதா - நீங்கள் அதைக் கொண்டாடுங்கள். இலங்கை தோற்றதுக்கு நாங்கள் கொண்டாடுகிறோம். விளையாட்டையும் அரசியலையும் வேறு படுத்தி பார் என்று சொல்லுவது இன்டலக்சுவல் இல்ல. அப்படின்னு நீங்க நினைச்சால், உங்களப்பார்த்து பரிதாபப்படவே முடியும்.
Link: http://reap-and-quip.blogspot.com/2011/04/03-04-2011.html
////ஆனா நம்மாளு என்னா சாவகாசமா ஸ்டிக்கை கலெக்ட் பண்றாரு.. ////
தோனி வந்த நாள்ல இருந்து (ஆடியில் ஒரு தடவை அமாவாசையில் ஒரு தடவை) பார்க்கும் போது ரொம்ப கூலான காப்டன்னு தோனிச்சு. நான் சொன்னா, டோனி மூஞ்சி மட்டும் தான் ரொம்ப நல்லா இருக்குங்கிறதால உனக்கு அவரப் பிடிக்குதுன்னு திட்டுவாங்க. இப்ப பாருங்க, அனாமிகாவோட ஆருடம் என்னைக்குமே தப்பா போனதில்ல. இப்ப தான் நிறையப் பேருக்கு புரிஞ்சிருக்கு. வென்றிருக்காவிட்டால் டோனி பத்தி தெரிஞ்சே இருக்காது. பாவம் டோனி.
அருமையா அலசியிருக்கீங்க பரிசல்
நானும் CSK தான்....
அப்புறம் சச்சின் சென்சுரி மேட்டர்... நெத்தியடி..
கலக்கல் :)
What a moment !!! சூப்பர் பதிவு!
நான் பீல் பண்ணினத இப்ப பண்ணிட்டு இருக்கிறத உங்கள் எழுத்தில் பாக்கிறேன்.
அந்த கடைசி சிக்ஸ்... தோனி ... யுவி... சச்சின்... சொல்லுறத்துக்கு வார்த்தை இல்லை.
லவ் யூ தோனி!
nan deccan chargers pakkam:))]
veetula 2 deccan chargers 2 csk
விளையாட்டை விளையாட்டாக பாருங்கள் என்ற வாதம் நிச்சயம் இலங்கை வீரர்களுக்கு பொருந்தாது .
இது என் அனுபவம். லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இலங்கை இங்கிலாந்து கிரிக்கெட் மேட்ச் நடந்த நேரம்.
பௌண்டரி அருகே நின்ற இலங்கை வீரர் zoysa விடம் ஆட்டோகிராப் கேட்டான் என் நண்பன். என் நண்பனின் நிறம் மற்றும் உச்சரிப்பு பார்த்து அந்த வீரர் கேட்டார் "ஆர் யு டமில்?". என் நண்பன் ஆம் என்றவுடன் அவனுடைய ஆட்டோகிராப் நோட்டை வீசி எறிந்து விட்டு மீண்டும் பீல்டிங் செய்ய ஓடினார் அந்த வீரர். எனவே விளையாட்டை விளையாட்டாக பாருங்கள் என்ற வாதம் நிச்சயம் இலங்கை வீரர்களுக்கு பொருந்தாது. இனவெறி அவர்களின் ரத்தத்தில் ஊறிய ஒன்று.
ஒரு வேலை இலங்கை ஜெயித்திருந்தால் ராஜபக்ஷே முரளிதரனை தழுவி தன்னை தமிழரின் காப்பாளன் போல் காட்டி கொண்டு இருப்பான். நல்ல வேலை அது நடக்கவில்லை. அவன் கணக்கு பொய்த்தது. உலகத்தின் பார்வையில் இருந்து மாபெரும் மனித அவலம் மறைக்க படாமல் இருந்தது தான் பெரிய சந்தோசம்.
இலங்கை வீரர்கள் ஒவ்வொருவரையும் பார்க்கும்போது நம் சகோதரிகளை வன்புணர்ச்சி செய்த இலங்கை ராணுவ வீரனை பார்க்கும் உணர்வு தவிர்க்க முடியாதது.
I Love Cricket. But humanity is more than that!
மிக அருமையான கிரிக்கெட் அலசல்.
வாழ்த்துக்கள்.
the second photo's (dhoni with cup) backdrop is gateway of India..not presidents residence as mentioned in the caption :)
அருமையான பதிவு நண்பரே! cupஅ ஜெய்ச்சதும் குழந்தை மாதிரி ஓடி வந்தரே சச்சின் அட அட, இந்த சின்னப் பையன எதுக்கையா ரிடையர் ஆகச் சொல்றாங்க.
நான் எப்பவுமே தல கட்சி தான், IPLல நம்ம ஆதரவு மும்பை இந்தியன்ஸ்க்கு தான்
தல...
சமயத்திற்கேற்றாற் போல் ஒரு அருமையான பதிவு...
இந்திய அணியின் விஸ்வரூப வெற்றி சாதாரணமாக வரவில்லை... அனைத்து முந்தைய கோப்பையை வென்றவர்களை கடந்ததாலேயே வந்தது...
மேற்கு இந்திய தீவுகள்
ஆஸ்திரேலியா
பாகிஸ்தான்
இலங்கை
அசத்தலாக ஆடி அனைத்து முன்னணி அணிகளையும் கடந்து அந்த வெற்றியை ருசித்த இந்திய அணியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்...
||சிக்ஸும் அடிச்சாச்சு. மேட்சும் ஜெயிச்சாச்சு. யுவியால அடக்க முடியல.. ‘இப்பக் கூட கத்தமாட்டியாடா நீ’ங்கற மாதிரி தோனியைப் பார்த்து கேட்கற மாதிரியே இருக்கா?
ஆனா நம்மாளு என்னா சாவகாசமா ஸ்டிக்கை கலெக்ட் பண்றாரு.. மனுஷனாய்யா இவன்? லவ் யூ மேன்!||
கரெக்ட்.
அதனாலதான் எவரையும் விட இது தோனி மற்றும் கேரியின் வெற்றின்னு நான் நினைக்கிறேன்..
கிரிக்கெட் ஒரு டீம் கேம்.தனிப்பட்ட முறையில் சச்சின் ஒரு ஜீனியஸ் ஆக இருந்தாலும் அவரால ஒரு வின்னிங் டீம் அமைக்க முடியல...அதுலதான் தோனி ஜெயிச்சுருக்கார்..
சச்சினும் சரி, ரஜினிகாந்தும் சரி.. ஒரே மாதிரிதான். தங்களோட ஃபீல்ட்ல டாப்ல இருந்து பல சாதனைகள் செஞ்சிருக்காங்க. ஆனாலும் இந்த ரெண்டு பேரும் என்ன சொன்னாலும், சொல்லலைன்னாலும், செஞ்சாலும், செய்யலைன்னாலும் குத்தம்!
சச்சின் ரிடயர்மெண்டாம்! அடப்பாவிகளா.. அதுக்கு வேலையே இல்லையே.. இத்தனை வருஷமா ஆடிகிட்டிருந்தாலும், பாருங்க.... இந்த சீரிஸ்லயும் சொச்ச ரன் வித்யாசத்துல இரண்டாமிடம் பிடிச்சிருக்காரு. சச்சின் சிங்கிள்ஸ் எடுக்கறதையும், பவுண்டரியைத் தடுக்கறதையும் பார்த்தா வயசு தெரியுது உங்களுக்கு?
சச்சின் அடிச்ச செஞ்சுரி 48. அதுல இந்தியா தோத்தது 13. பல முறை சொல்லியாச்சு. அடிக்கடி நூறு அடிக்கறதால, தோக்கற மேட்ச்தான் உங்களுக்கு வலியா நினைவில இருக்கு. அதுவும் சமீபமா சச்சின் செஞ்சுரி போட்டா மேட்ச் தோக்கும்ன்னு சொல்றவங்க அதிகமாய்ட்டு வர்றாங்க. அப்படி ஒரு எண்ணமிருந்தா இன்னியோட விட்ருங்க. உங்க ஃப்ரெண்ட்ஸ் யாரும் அப்டி பேசினா வாய்லயே குத்துங்க..
super parisal sir.
(analum nanga IPL la MI than.)
Post a Comment