Saturday, May 7, 2011

எங்கேயும் காதல்


டை
ட்டில் பாடலுக்கு பிரபுதேவாவே ஆடியிருக்கிறார். டான்ஸ் கிங். நன்றாகவே. அதுவும் இந்த மாதிரி மெலடிக்கு மூவ்மெண்ட்ஸ் அமைப்பது சிரமம். கலக்கியிருக்கிறார். பாடல் பாடும்போது கீழே ‘இந்தப் பாடல் நயன்தாராவிற்கு டெடிகேட் செய்யப்படுகிறது’ என்று போடாத குறைதான். ஒன்றும் தப்பில்லை பிரபு. இட்ஸ் ஓகே!

டக்கென்று ஆரம்பித்துவிட்டதோ விமர்சனம்? சரி போனால் போகிறது. படித்துவிடுங்கள்..

நாயகன் / நாயகியை அறிமுகப்படுத்தும் விதமும், ப்ரகாஷ்ராஜின் எண்ட்ரியும் ரசிக்கும்படி இருந்தது. காமெடி என்கிற வஸ்துதான் படத்தில் இல்லாமல் போய்விட்டது. ராஜூ சுந்தரம் படாத பாடு படு(த்து)கிறார். கொடுமை. அதுவும் அந்த கார் காமெடி. உவ்வேஏஏஏ… சென்சார் போர்டில் இந்த மாதிரி காமெடிகளையும் கத்திரி வெட்டி அனுப்பினால் அவர்களுக்கு கோடி புண்ணியம் உண்டாகும்.

பாடல்கள் ஹிட்தான். அதற்காக தொடர்ந்து பாடல்களேவா? கண்ணை மூடிக் கொண்டு உட்காந்தால், வீட்டில் ஆடியோ சிடி கேட்பது போலவே இருக்கிறது! ‘நங்காய்’ பாடல் அதிக பட்ச கைதட்டல்களை அள்ளிச் செல்கிறது. அது படமாக்கப்பட்ட விதமும்.

ஜெயம் ரவி – ஓகே. ஹன்சிகா –அறிமுகம் என்று காட்டுகிறார்கள். அவரும் சும்மா காட்டாமல் நடித்திருப்பது ஆச்சர்யம். இடைவேளைக்குப் பின் - காதலைச் சொல்ல முடியாமல் தவிக்கும் காட்சிகளில் - தன் திறமையை நிரூபித்திருக்கிறார். சில காட்சிகளில் நமீதாவை நினைவுபடுத்துகிறார். கொஞ்சம் அந்நியத்தன்மை இருப்பதால் பச்சக் என்று ஒட்ட மறுக்கிறார்.

மற்றபடி, விமர்சனத்தில் நான் கதை சொல்லப் போவதில்லை. பாடல்களைத் தவிர கேமரா சூப்பரு, எடிட்டிங் தேவலாம், அந்த இந்தக் காட்சியில் இந்த மாதிரி அமைத்திருந்தால் அந்த மாதிரி இருக்கும் இந்த மாதிரி இருக்கும் என்றெல்லாம் சொல்ல அது பற்றித் தெரிந்த நம்ம கேபிள் சங்கர் இருக்கிறார்.

இனி படத்துக்கு சம்பந்தமில்லாத சில:

பிரபுதேவாவின் ரசிகைகளை நயன்தாராவுடனான அவரது காதலுக்கு முன் – காதலுக்குப் பின் என இருவகையாகப் பிரிக்கலாம். நிறைய பேருக்கு – குறிப்பாக அவரது பெண் ரசிகைகளுக்கு – அவர் ரம்லத்தை விட்டு நயன் கரம் பிடித்தது பிடிக்காமல் போய்விட்டது.

வழக்கம் போல குடும்பத்தோடுதான் நேற்றைக்கும் படத்துக்குப் போனோம். உமாவுக்கு முன்பெல்லாம் பிரபுதேவாவைப் பிடிக்கும். நயன் காதலுக்குப் பிறகு பிடிப்பதில்லை. அதே போல ப்ரகாஷ்ராஜையும். ஆனால் ப்ரகாஷ்ராஜைக் கூட கொஞ்சம் பிடிக்கும். பிரபுதேவாவை ஏனோ பிடிப்பதில்லை. (எனக்கு இரண்டு பேரையுமே பிடிக்கும். அதெல்லாம் தனிப்பதிவாகப் போடவேண்டிய விஷயம். இங்கே வேண்டாம்!) பிடிக்காது என்பதால் அரைமனதோடுதான் படம் பார்த்தார். படம் முன் பாதி சுமார். பின் பாதி கொஞ்சம் தேவலாம் என்பது அவர் விமர்சனம். மாப்பிள்ளை தந்த மரண அடியால் இது தேவலாம் ரேஞ்சுக்கு தேறிவிட்டது.


எங்கேயும் காதல் -

இளைஞர்களுக்கு:

தவறவிடாமல் நிச்சயமாகப் பார்க்க வேண்டிய படம் - நீங்கள் ரொம்ப நாட்களாக ரூட் போட்டுக் கொண்டிருக்கும் நண்பி இந்தப் படத்துக்கு போலாமா என்று அழைத்தால்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

பார்க்க வேண்டிய படம்: ஓசி டிக்கெட் கிடைத்தால்.

குடும்பஸ்தர்களுக்கு:

பார்க்கலாம்: போஸ்டரில் மட்டும்.



முக்கியக் குறிப்பு:

1. உங்கள் அட்ரஸ் பாரில் www.Google.com என்று டைப் செய்யவும்

2. அதில் இடது மேல் மூலையில் images செலக்ட் செய்யவும்.

3. அதில் engeyum kaadhal stills என்று அடிக்கவும்.

4. இந்தப் படத்தின் ஸ்டில்ஸ் வரும். உங்களுக்குப் பிடித்தமானதைப் பார்த்துக் கொள்ளவும். (உப குறிப்பு: ஹன்சிகாவை பார்க்க வேண்டுமென்றால் hansika stills என்று அடிக்கவும்)

ஸாரி. ஃபோட்டோஸ் அப்லோடு ஆக கொஞ்சம் நேரமெடுக்கிறது.

.
.

26 comments:

அதிலை said...

:)

சுசி said...

//கொஞ்சம் அந்நியத்தன்மை இருப்பதால் பச்சக் என்று ஒட்ட மறுக்கிறார்.//

ம்க்கும்..

//விமர்சனத்தில் நான் கதை சொல்லப் போவதில்லை.//

ஐ லைக்கு திஸ்ஸு :)

நிரூபன் said...

சுருக்கமான விமர்சனம், நச்சென்று இருக்கிறது.

rajamelaiyur said...

I am new commer of your site

rajamelaiyur said...

Padam pakkalama?vayndama?

Joyce the lover. said...

trailer'la sila nimisham varum hansika moojiyavey paakka mudiyala, idhula google images poyi andha attu moojiya paakanumaa enna? idhu ungalukkey konjam overa theriyala? alladhu thookka kalakkuthula edhavadhu ezhudhitteengala?

Suthershan said...

over nakkal...!!

Ramjee said...

என்ன வோய், ஒரு கடியான படத்துக்கு இவ்வளவு பெரிய விமரிசனம் தேவையா... சொந்தமா சிந்திக்கக் கூட இல்லாமல், பல ஹிந்தி மொழி வெற்றிப்படங்கள்ள இருந்து காப்பி அடிச்சிருக்கார். கிளைமாக்ஸ் படு கொடுமை, பார்கரவங்களுக்கு புத்தியே இல்லைங்கற நினைபோட பண்ணியிருக்கற படம்!
நங்கை படம் king of Pops, MJ-வினுடைய "The Way You Make Me Feel" பாடலில் இருந்து சுட்டது என்று ஒரு subtitle போடணும்!

ஷர்புதீன் said...

சூப்பர்

அருமை

அற்புதம்

பின்னிட்டீங்க

சான்சே இல்லை

- இப்படிக்கு கடுப்பேத்த முயற்சி செய்வோர் சங்கம்

Anonymous said...

நேரா விமர்சனத்துக்கு போய் முக்கிய பாயிண்டுகள் மட்டும் சொல்லி,நறுக் விமர்சனம்

அன்பேசிவம் said...

பெண்ணே! ஒரு முறை முத்தமிடு, - பின் உனக்கென பிறந்தவள் நான்தானென்று ஓரிரு முறையாவது சொல்லிவிடு, நான் தனியாய் இருந்த என் நாட்கள் போதும், என்னை மகிழ்ச்சிக் கடலில் தள்ளி விடு....

மைக்கேல் புண்ணியத்தில் தமிழுக்கு ஒரு மாடர்ன் குத்து “நங்காய்: ரெடி
http://www.youtube.com/watch?v=HzZ_urpj4As&feature=relmfu

அன்பேசிவம் said...

டேய், ஒரு டீக்கு ஆசைப்பட்டு உசிர உட்றாதடா.... # பொல்லாதவனில் சந்தானம்.
ஒரு பாட்டுக்கு ஆசைப்பட்டு உயிரை விட்டுடாதிங்க மக்களே! #தியேட்டரிலிருந்து முரளி. :-(

EINSTEEN RAVI said...

படம் சரியான மொக்கை..... பல எதிர்பார்ப்பு இருந்தது .... பாடல்கள் ஓகே...

Ramjee said...
This comment has been removed by the author.
Ramjee said...
This comment has been removed by the author.
Ramjee said...

சினை பண்ணி மாதிரி இருக்கற ஹன்சிகா மோட்டி (ஹிந்தியில் குண்டு என்று பொருள்) வா நீ நல்லாவே இல்லை! இதுல, அவங்க stills பார்க்க suggestions வேற கடவுளே தமிழகத்தை காப்பாத்து

Thirumalai Kandasami said...

மிகவும் ரசித்து படிச்சேன் ,,,சூப்பர்..

a said...

திட்டு வாங்காம தப்பிச்சிட்டீங்கன்னு சொல்லுங்க...

இராஜராஜேஸ்வரி said...

குடும்பஸ்தர்களுக்கு:

பார்க்கலாம்: போஸ்டரில் மட்டும்.//
நன்றி.

பனித்துளி சங்கர் said...

படம் பார்த்த அனுபவத்தை மாறுபட்ட கோணத்தில் சொல்லி இருக்கும் விதம் சிறப்பு . இன்னும் படம் பார்க்கவில்லை

Suresh said...

முக்கியக் குறிப்பு:

1. உங்கள் அட்ரஸ் பாரில் www.Google.com என்று டைப் செய்யவும்

2. அதில் இடது மேல் மூலையில் images செலக்ட் செய்யவும்.

3. அதில் engeyum kaadhal stills என்று அடிக்கவும்.

4. இந்தப் படத்தின் ஸ்டில்ஸ் வரும். உங்களுக்குப் பிடித்தமானதைப் பார்த்துக் கொள்ளவும். (உப குறிப்பு: ஹன்சிகாவை பார்க்க வேண்டுமென்றால் hansika stills என்று அடிக்கவும்)

ஸாரி. ஃபோட்டோஸ் அப்லோடு ஆக கொஞ்சம் நேரமெடுக்கிறது.--

Super Boss :)

www.rasanai.blogspot.com said...

maapillai thantha marana adiyal ithu thevalam rangekku thery vittathu

nice finish

Anonymous said...

sir yanaku starting la irundhai hansika pitika villay. sariyana shoping toll.ithula vijay filmla act panuthu. vijay sir escap plssssssssssss

சிநேகிதன் அக்பர் said...

விமர்சனக்"குறிப்பு" ரொம்ப சூப்பர். :)

ஜானி வாக்கர் said...

படம் ஓவர் மொக்கை.

விக்னேஷ்வரி said...

என்ன இது... எதாவது எழுதணுமேன்னு எழுதறீங்களா..