ப்ளாக் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு. ஏன் எழுதறதில்லைன்னு இதுவரைக்கும் கிட்டத்தட்ட... ம்ம்ம்.. இருங்க எண்ணிப்பார்த்துட்டு சொல்றேன்... ஆங் – மூணு பேர் கேட்டிருக்காங்க. அவங்க்கிட்ட இந்த வாரம் எழுதறேன், அவன் இவன் விமர்சனத்திலிருந்து எழுதறேன்னெல்லாம் சொல்லி வெச்சிருக்கேன். அதுக்காகவாவது என்னமாச்சும் எழுதணும்..
- விஷாலுக்கு நல்ல கேரக்டர். நல்ல கேரக்டர் விஷால் உனக்குன்னு சொன்ன பாவத்துக்கு என்னென்னமோ பண்ணீருக்காரு மனுஷன். நல்லாத்தான் இருக்கு. ‘விஷாலுக்கு இது ஒரு மைல்கல். தேசிய விருது அப்டிக்கா இப்டிக்கா’ன்னெல்லாம் விமர்சனம் வரும். படிச்சுக்கோங்க. ஓபனிங் சீன்ல போடற ஆட்டம், மேடைல நவரச நடிப்புன்னு மனுஷன் கொஞ்சம் பண்ணீருக்காரு.
- ஆர்யா விஷாலோட அம்மாவோட சக்காளத்தியோட மகன். அதாவது தம்பி. அண்ணனை திட்டீட்டே இருக்கற - அப்பாலிக்கா அண்ணனைப் புரிஞ்சுக்கற பாத்திரம்.
- ஹைனஸ்ங்கற பாத்திரத்துல ஊர் ஜமீனா ஜி. எம். குமார். அம்மணமால்லாம் நடிச்சிருக்காருப்பா.. சப்போர்ட்டிங் ஆக்டர் தேசிய விருது நெக்ஸ்ட் இயர் உங்களுக்குத்தாண்ணே-ன்னு ஒரு லைட்பாயாவது கண்டிப்பா அவர்கிட்ட சொல்லிருப்பான்.
- படம் லீனியரா, நான் லீனியரா, ஆடா ஈவனான்னெல்லாம் தெரியல. கடேசி 25 நிமிஷத்துலதான் கதை ஆரம்பிக்குது. அதுவரைக்கும் என்னென்னமோ பண்றாங்க.
- நான் என்ன நினைக்கறேன்னா - விஷாலும் ஆர்யாவும் நடிப்புப் பயிற்சி எடுத்துக்க பாலாகிட்ட போயிருக்காங்க. அவர் ‘சரி நான் சொல்ற மாதிரியெல்லாம் பண்ணுங்க. ஷூட் பண்ணிக்கறேன்.. கடைசில ரெண்டு சீனைக் காமிச்சு கதை மாதிரி பண்ணி தியேட்டர்ல ரிலீஸ் பண்ணிடலாம்’ன்னு சொல்லீருப்பாரு போல.
- போலீஸ் ஸ்டேஷன்ல உயரதிகாரியை ஒரு குட்டியூண்டு பையன் யோவ் சொட்டைங்கறான். அந்த ஆஃபீஸர் படம் பூராவும் அழுது வடிஞ்சுட்டு, காமெடி பீஸாவே இருக்கான். எந்த ஊர்லய்யா போலீஸ் இப்டி இருக்கு? அடிங்...
- ஆரம்ப டியா டியா டோலுக்கப்பறம் பாட்டுங்கற எதுவும் ஒட்டல. ராசாத்தி போல வரியெல்லாம் மாத்தி – கொலை. இசை யுவன் ஷங்கர் ராஜா. ம்ம்.. ஆரண்யகாண்ட்த்துக்கு திருஷ்டி.
- சக்களத்தி சண்டை, கெட்ட வார்த்தைகள், சுடுகாடு, விளிம்பு நிலை மனிதர்கள் வாழ்க்கை (உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... ப்ப்பா.....), சாவுன்னு பாலா ஒரு வட்டத்துக்குள்ளயே சுத்திட்டு இருக்காரு. வெளில வரணும்.
- ஒரு ஜட்ஜுக்கு லாக்கர் பூட்டைத் தொறந்து ஹெல்ப் பண்றாரு ஆர்யா. ஜட்ஜுகிட்ட எனக்கு பதிலுக்கு நீங்க உதவணும்கறாரு. அப்பறம் ஒண்ணையும் காணோம். பூட்டைத் திறக்காமயே இருந்திருக்கலாம்.
- சின்னப்பசங்களை திருத்தற படமெல்லாம் எவனும் எடுக்க வேண்டாம். அதிகப்ரசிங்கத்தனமா பேசற பசங்களை கேரக்ட்ரா வெச்சு எடுக்கறது ஒரு ஸ்டைலாய்ட்டு வருது. கடுப்பாகுது யுவர் ஆனர்.
- அப்படி ஒரு சூப்பர் ஃபிகர் (மதுஷாலினி) குடிச்சுட்டு கூத்தடிக்கற ஆர்யாவை லவ் பண்ணுமாம். போலீஸ்காரி (ஜனனி ஐயர்) அரவாணியா, திருடனான்னு தெரியாம பொறுக்கித்தனமா சுத்தற விஷாலை லுக்கு விடுமாம். நம்பீட்டோம்யா. பாலா படமாச்சே...
- வேற என்ன சொல்றதுன்னு தெரியல. எனக்கு படம் பார்த்தாச்சுங்கற திருப்தி இல்லை. ஆனா பார்க்கலைன்னா விட்டுட்டோமேன்னு வருந்திருப்பேன். அந்த மாதிரி ஆளுக ஒருக்கா பார்த்துக்கலாம்.
வேறு சில:
நண்பர் ஒருத்தர் படம் பார்க்கணும்ன்னு ஃப்ரெண்ட்ஸுக்கும் சேர்த்து டிக்கெட் புக் பண்ணீருக்கார். 1200 ரூவா. ஊஊஊஊஊஊஊஊஊஊஊ... இப்படி ஒரு படத்துக்கு கூட்டீட்டு வந்ததுக்கு நீ தாடா காசு-ங்கறாங்களாம்.
இடைவேளையில் ட்விட்டர், வலைப்பூ எல்லாம் இல்லாமல் இன்ஸ்டண்டாக விமர்சனம் எழுதிவிட்டார் ஒருத்தர் நாலு சீட் தள்ளி. கொர்ர்ர்ர்ர்ர்.. குறட்டை. எனக்குத் தெரிந்து அவன் இவன் விமர்சனங்களிலேயே பெஸ்ட் அதுதான்.
புதுப் படம் வந்தால் முதலில் ஒரு வாரத்துக்குள்ள பாத்துடணும். இல்லைன்னா புக்ல விமர்சனம் வந்துடும்’ என்று நினைப்பேன். பிறகு வலைப்பூ வந்த பின் ரிலீஸ் அன்னைக்கே.. இப்ப என்னடான்னா இந்த ட்விட்டர் வந்தபிறகு முதல் ஷோ-வே போய் விட வேண்டும் போல. பிரித்து மேய்ந்துவிடுகிறார்கள்.
அவன் இவன் - பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பாலா.
.
22 comments:
hello sir,
I have been also waiting for ur writing.. pls keep writing if possible.
thank you
Sir athu வ ஐ செயபாலன் illa... ஜி.எம்.குமார்r....
நெசமாவே எங்கள மாதிரி தான் காஞ்சு போயிட்டு வந்து இருக்கீகா... ரொம்ப சீரியசா பால படம் அப்படீங்கரதுனால் ஒரு "இண்டேலேக்சுவல் லுக்கு" வேணுங்கறதுக்காக அது சூப்பர் இது சூப்பர்னு எழுதிடுவீகலோன்னு பயத்தொடயே பார்தேன்... காய்ந்து போன எங்களோட ஒரு போரை டீ சேர்ந்து குடிங்க!
பாலாவின் படம் என்றாலே ஒரு எதிர் பார்ப்பு, இந்தப்படத்தில் இல்லை என்பது, நீங்கள் சொல்வதைப் பார்க்கும்போது தெரிகிறது. ஏன், பாலா சார்?
படம் பார்க்கும் செலவை மிச்சபடுத்திய பரிசல் அவர்களின் அக்கௌன்ட் நம்பர் அனுப்பினால் பணம் பட்டுவாடா செய்யப்படும்
படம் ரிலீஸ் ஆன அன்றே பார்த்து விமர்சனம் எழுதும் ஆட்களை பார்த்தால் புல்லரிகிறது (மெய்யாலுமே!)
:( அப்போ பார்க்க வேண்டாம்ங்கறீங்களா.. அந்த ரெண்டு பாட்டுக்காகப் படம் பார்க்கலாம்னு நினைச்சேன். ப்ச்.
எல்லாருமே சும்மார்னு தான் சொல்றங்க ..
இன்று என் வலையில்
வருகிறார்-ஜேம்ஸ் பாண்ட்-23
//கொர்ர்ர்ர்ர்ர்.. குறட்டை. எனக்குத் தெரிந்து அவன் இவன் விமர்சனங்களிலேயே பெஸ்ட் அதுதான்.//
:-)
யோவ்... நீயெல்லாம் என்னய்யா மனுஷன்?!
//யோவ்... நீயெல்லாம் என்னய்யா மனுஷன்?!//
பாஸூ அப்ப நீங்களும் படம் பார்த்திட்டிங்க. சரிதானே :)
சப்போர்ட்டிங் ஆக்டர் தேசிய விருது நெக்ஸ்ட் இயர் உங்களுக்குத்தாண்ணே-ன்னு ஒரு லைட்பாயாவது கண்டிப்பா அவர்கிட்ட சொல்லிருப்பான்./
லைட்பாய்னு சொல்லப்படுறதால் சின்னப் பையன்கள்தான் வேலைக்கு இருப்பாங்கனு நினைச்சு ‘ன்’ விகுதி போட்டீங்க போல... ரிட்டயர்ட் ஆகும் வயசிலெல்லாம் லைட்டோடு அலையும் ஆட்கள் நிறைய இருக்காங்க பரிசல்!
பரிசல், ரொம்ப நாட்களுக்குப்பிறகு ஒரு மெகா போஸ்ட் எதிர்பார்த்தோம்!
நன்றி. தப்பிப்போம்.
பாலா ஏமாற்றிவிட்டார் போலிருக்கிறதே.
காமசூத்திராவை தலைகீழாக கற்று வைத்திருப்பதற்கும் , கலவியில் வெற்றிகரமாக ஈடுபடுவதற்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் தான் சினிமாவைப் பற்றி பேசுவதற்கும் , சினிமாவில் இயங்குவதற்கும் இடையில் இருப்பது ---இதை புரிந்து கொள்ளுங்கள் திரு.யஸ்.ராமகிருஷ்ணன் {எழுத்தாளர் } அவர்களே......
R.S.செந்தில் குமார்
//நான் என்ன நினைக்கறேன்னா - விஷாலும் ஆர்யாவும் நடிப்புப் பயிற்சி எடுத்துக்க பாலாகிட்ட போயிருக்காங்க. அவர் ‘சரி நான் சொல்ற மாதிரியெல்லாம் பண்ணுங்க. ஷூட் பண்ணிக்கறேன்.. கடைசில ரெண்டு சீனைக் காமிச்சு கதை மாதிரி பண்ணி தியேட்டர்ல ரிலீஸ் பண்ணிடலாம்’ன்னு சொல்லீருப்பாரு போல.// உங்க மொத்த விமர்சனமும் இந்த நாலு வரிக்குள்ள அடங்கிடுச்சுங்ணா!:)
படம் பார்க்கும் செலவை மிச்சபடுத்திய பரிசல் அவர்களின் அக்கௌன்ட் நம்பர் அனுப்பினால் பணம் பட்டுவாடா செய்யப்படும்
//ஆனா பார்க்கலைன்னா விட்டுட்டோமேன்னு வருந்திருப்பேன். அந்த மாதிரி ஆளுக ஒருக்கா பார்த்துக்கலாம்.//
படம் பாத்த பின்னாடி எனக்கும் இதே எண்ணம்தான் தோன்றியது.
நானும் பாலா படம்னு ஆசையா போனேன். முதல் பாடலில் வரும் விஷாலின் ஆட்டம் பார்த்து சந்தோஷபட்டேன். ஆனா என் சந்தோஷம் அந்த பாடலோடு முடிந்துவிட்டது.
மணிரத்தினம், பாரதிராஜா போல பாலாவும் மியுசியம் பீஸ் ஆயிட்டாரோ என்னமோ?
என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....
இப்படி ஒரு படத்துக்கு கூட்டீட்டு வந்ததுக்கு நீ தாடா காசு-ங்கறாங்களாம்.//
இதைவிட சிறப்பாக விமர்சிக்கமுடியுமா ஒருபடத்தை.
Post a Comment