Sunday, July 17, 2011

தெய்வத்திருமகள் - விமர்சனம்

மிகவும் அலப்பறையெல்லாம் இல்லாமல் ஒரு படம் எடுத்து, குறித்த நேரத்தில் அதை விளம்பரப்படுத்தி, வெற்றியும் கண்டிருக்கிறார் விஜய்.

கதை?

கேட்டிருப்பீர்கள். சொன்னாலும் சுவாரஸ்யம் குறைகிற சமாச்சாரமொன்றுமில்லை. மனதளவில் குழந்தையாகவே இருக்கும் கிருஷ்ணாவுக்கு (விக்ரம்) குழந்தை பிறக்கிறது. ஐந்து வயது வரை அந்தக் குழந்தை நிலாவை (சாரா) கிருஷ்ணா வளர்க்கிறார். அங்கே ஒரு ட்விஸ்ட். குழந்தையின் தாத்தா, சாராவை கிருஷ்ணாவிடமிருந்து பிரிக்கிறார். வழக்கறிஞரான அனுராதா (அனுஷ்கா) கிருஷ்ணாவிடம் குழந்தையை மீட்டுத் தருகிறேன் என உறுதியளிக்கிறார். குழந்தையின் தாத்தா பெரிய புள்ளி. மனநலம் பாதிப்பான கிருஷ்ணாவிடம் குழந்தையை ஒப்படைக்க மறுத்து, அனுராதா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவுக்கான வழக்கை மூத்த வழக்கறிஞர் பாஷ்யத்திடம் (நாசர்) ஒப்படைக்க, அனு அவ்வளவு பெரிய வழக்கறிஞரிடம் சில பல தில்லுமுல்லு வேலைகளை செய்து, குழந்தையை கிருஷ்ணாவிடம் ஒப்படைப்பதும், அதன் பிறகு நடப்பதுமே கதை.

மதராசப்பட்டிணம் போலவே, நேர்த்தியான கதை சொல்லல். எந்த இடத்திலும் தொய்வில்லை. நகைச்சுவை என்கிற பெயரில் ஆபாசமோ, ரசிக்க இயலாத எள்ளலோ இல்லை. சந்தானத்தைக் கூட அடக்கி வாசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். சோகம் என்கிற பெயரில் சுவாரஸ்யம் குன்றுகிற மிகைசோகமில்லை.

வசனங்கள் நச் என்றால் (‘அம்மா எங்க? / ‘சாமிகிட்ட’ / ‘ஏன் சாமிக்கு அம்மா இல்லையா?’) பல இடங்களில் வசனங்களே இல்லாமல் காட்சி அமைத்து கைதட்டல் பெற்றிருக்கிறார் இயக்குனர். அதுதான் பாராட்டப்பட வேண்டிய அம்சமாக படத்தில் எனக்குப் படுகிறது. ஜன்னலில் சைகையால் சாராவும் விக்ரமும் பேசிக் கொள்வது, க்ளைமாக்ஸ் கோர்ட் சீன் உட்பட பலதும்.

உதாரணத்திற்கு ஒரு காட்சியில் ஒய்.ஜி.மகேந்திரன், கட்டிலில் படுத்திருக்கும் விக்ரமின் மீதுள்ள போர்வையை கோபமாக எடுத்து கீழே விரித்து சைகையில் ‘கீழ படு’ என்கிறார்.. அதற்கு விக்ரமின் ரியாக்‌ஷனை (அதுவும் சைகையில்தான்) மக்கள் புரிந்து கொண்டு கைதட்டுவது என்பது அசாதாரண விஷயம். சபாஷ் விஜய்!

விக்ரம், குழந்தை சாரா. இரண்டு பேரும் பார்ட்னர்ஷிப்பில் பின்னியிருக்கிறார்கள். நிச்சயமாக விக்ரமை விட கூடுதல் ரன் எடுத்திருப்பது சாரா-தான். அதுவும் கடைசி கோர்ட் காட்சியில் கண்கலங்க வைத்துவிடுகிறார். இனி இவரை பேட்டிகள், விளம்பரங்கள் என்று பலதிலும் பார்க்கலாம். நல்ல தேர்வு.

அனுஷ்கா, அமலா பால் இருவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். சந்தானமும் அவ்வாறே. எல்லா நடிகர்களையும் சரிவர – மிகையுமின்றி குறையுமின்றி பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

பாடல்களை விடவும் பின்னணி இசை பேசுகிறது. ஒளிப்பதிவும் அபாரம். ஊட்டி காட்சிகளும், விழிகளில் ஒரு வானவில் படமாக்கப்பட்ட விதமும் அதற்கு சான்று.

இது ஏதோ - I AM SAM – ஆங்கிலப்படத்தில் தழுவல் என்கிறார்கள். இருந்துவிட்டுப் போகட்டும். இப்படி ஒரு படைப்பை தர, அது தழுவலானாலும் தவறில்லை.

வெகுநாட்களுக்குப் பிறகு – மகாநதிக்குப் பிறகு என்றே சொல்லலாம் – அழவைக்கிற படம். ஆனால் சோகம் என்று சொல்வதற்கில்லை. பாசத்தால் அழவைக்கிறது படம்.

சபாஷ் விஜய் & டீம். கீப் கோயிங்!

.

18 comments:

மல்லிகார்ஜுனன் said...

படத்தை விட விமர்சனத்தில் அனுபவம் தெறிக்கிறது.. அழகு... படமும் தான்..

சுரேகா.. said...

நானெல்லாம். i am sam பார்த்தே அழுதேன்..

இந்தப்படம் பாத்தா கண்டிப்பா ....கதறல்தான்..!

நல்லா இருக்குங்குற? நாளைக்கு நைட் பாத்துருவோம்..!!

நல்லா எழுதியிருக்க மக்கா!

கார்க்கிபவா said...

ஏன் அவசரம் சகா?

படம் பற்றி பிரிப்பீங்கன்னு நினைச்சிட்டு இருந்தேன்..

R. Gopi said...

கதையை சொல்லாதீங்க பரிசல்

R. Gopi said...
This comment has been removed by the author.
R. Gopi said...

@சுரேகா, தனியா போகாதீங்க, யாராவது பெரியவங்களைத் துணைக்குக் கூட்டிக்கிட்டுப் போங்க:-))

Saravanan said...

நானும் இன்று இப்படத்தை பார்த்தேன்... கண்ணீரை கட்டுபடுத்த முடியவில்லை ... உண்மையான விமர்சனம்... நன்றி.

sugi said...

s, I m agree with Mr. Karki.cuz I was also expecting more from u. I have seen the movie. I like very much.Tnx.

அன்பேசிவம் said...

இதை என் பாணியில் அறிமுகம் என்று சொல்லலாம், விமர்சனம் அல்ல :-)

சி. முருகேஷ் பாபு said...

இது ஏதோ - I AM SAM – ஆங்கிலப்படத்தில் தழுவல் என்கிறார்கள். இருந்துவிட்டுப் போகட்டும். இப்படி ஒரு படைப்பை தர, அது தழுவலானாலும் தவறில்லை./ இப்படி மேம்போக்காகச் சொல்லக்கூடாது பரிசல்!
ஐயாம் சாம் படத்தில் ஆறு வயதோடு வளர்ச்சி குன்றி நிற்கும் மனிதனின் உலகத்தில் இருந்து கதை சொல்லப்படுகிறது.
ஆனால், நம்மூரில் ரவுடி போல குடிகாரன் போல வெட்டி ஆபீசர் போல ஹீரோ மனவளர்ச்சி இல்லாதவர் என்று காட்டிவிட்டு கதையைச் சுற்றி அடித்திருக்கிறார்கள்.
ஒரு மரியாதைக்குக்கூட இது ஐயாம் சாம் படத்தின் இன்ஸ்பிரேஷன் என்றுகூடச் சொல்லவில்லை, எங்கேயும்!
திருடர்களை என்கரேஜ் செய்யாதீர்கள்!

rajamelaiyur said...

படம் மிகவும் அருமை .. எல்லாரும் பாருங்கள்

சின்ன கண்ணன் said...

இன்னும் படம் பார்க்க வில்லை
இருந்தாலும் படம் பார்த்த மாதிரி ஒரு இது <<<>>> இருக்கிறது, அருமை

Subash said...

comedy irukuma boss film la

எம் அப்துல் காதர் said...

விமர்சனமே சிம்பிளாய் அழகாய் இருக்கே படம் பார்த்த மாதிரி :-)))

www.rasanai.blogspot.com said...

dear parisal
copy adippavargalukkuththan ippothu kollywoodilum makkalidamum nalla peyarum pughazhum selvamum serukirathu nalla kathay + thiramaisaligalukku ondrum kidaippathillay agave avargalai inam kandu paratti vaazhthavum
ippadi oru padaippai thara thazhuvalanum paravayillai -- too bad i did not expect this "Sappaikattu" from you. this is because aboorvamaga varum oru different padam endru perumbanmaiyana makkalin kuralagave ithu enakku padukirathu. antha alavukku tamil cinema padaippugal tharam thazhnthu ullathu. eppovavathu varum nalla padam copiyaga irunthalum paravayillai engira logic niyamathrathu.
titanic + lagan = madarasapattinam
endru pamara rasigargalukku kooda theriyum analum ivan (vijay dir) yes ennai poruthavarai thirudanukku intha mariyathaiyey jaasthi ivanukellam rathina kambala varaverppu tv shows and interviews ennamo sathithathupol.
"dog bite dog" korean movieyai nativityudan kuranganiyil eduthaal "Myna" kidaithathu. "kikujiro" nandalalavana kathai anaivarum arinthathe. "i robot" film endhiran anathum theriyum. ithupol pala copigal nalla perum vasathiyudanum oorai ematri vaazhgirargal. murugesh babu solvathupol inspiration endru oru courtesykkaga poduvathukooda enakku udanpaadu illai. copy copy thaan. copy adithu exam pass pannupavargalidamirunthu ithaithan ethirpaarkalam. aaga copy adithalum paravayillai 100/100 eduppathutan great endru solveergalpola. do not encourage plagiarism. please encourage the creativity and the real talented. matrapadi ungal mel enakku entha kovamum kidaiyathu. pothuvaga naan ellorudaya valai vasagan aanal eppothavathu mattumey oru comment yarukkavathu poduvaen. intha padam patri ungal vimarsanam padithapin enakku comment kattayamaga ezuthavendum endru thondriyathu (because i am your regular reader i cannot simply digest your Sappaikattu thats why this harsh statements on tamil cinema as i am true cinema lover and i am not able to tolerate these kind of mediocre taste and its awesome HYPE responses) .en niyamana kovam ellorukkum puriyum endru ninaikkiraen. ethavathu manasu punpadumpadi irunthal mannikkavaum anal athey samayam en karuthil naan thelivagavum nermaiyagavum ullen. naan ungalukku podum muthal commentey konjam harshaga irupatharkku mannikkavum. nandri sundar g chennai.

www.rasanai.blogspot.com said...

memories of a murderer padam thaan yudham sei konjam konjam tamil cinemavukku yerpa maatrugirargal avvalavey.

vadivelu japanese kondai pottu comedy seiyum (vijay + asin padam) fight "Zatoichi" padathilurunthu suttathu.
innoru padathil vadivelu irantha naiyai (dog) electric shock koduthu uyir kodupathu "There is something about mary" padakaatchi
innoru padathil vadivelu kinaru(Well) kaanamal povathu pondra comedy scene "Aanantha vikatanil kathaiyagave vanthathu" ezuthiyathu shankarnarayan (Cable sankar?) endru nybagam.
vishalin muthal padathil varum IT raid sequence vikatan sirukathai pottiyil parisupetra oru kathai ikkathai "oru mounathin alaral' thoguppil ullathu.
ghajini "memento" endru oor ariyum. athil varum blind person road cross helping scene "Amelie' endra french padathirunthu suttathu. antha aalin varapogum padamum "inception"in copy endru thaan solgirargal. munbey therinthuvittathal konjam maatrividuvaan thats all. ivargalellam tamil cinemavin star value commodities. vilangina mathirithaan. ithupol sollikondey pogalam. ivargalum copy adithathai othukolla povathilai. murugesh sonnathupol oru nandri credit kooda poda maatargal. enakkuthaan ezutha pidikavillai. ennovo pongal salippagavum erichalagavum irukkirathu ivargal adikkum lootiyai paarthal. nandri.

www.rasanai.blogspot.com said...

dear parisal
copy adippavargalukkuththan ippothu kollywoodilum makkalidamum nalla peyarum pughazhum selvamum serukirathu nalla kathay + thiramaisaligalukku ondrum kidaippathillay agave avargalai inam kandu paratti vaazhthavum
ippadi oru padaippai thara thazhuvalanum paravayillai -- too bad i did not expect this "Sappaikattu" from you. this is because aboorvamaga varum oru different padam endru perumbanmaiyana makkalin kuralagave ithu enakku padukirathu. antha alavukku tamil cinema padaippugal tharam thazhnthu ullathu. eppovavathu varum nalla padam copiyaga irunthalum paravayillai engira logic niyamathrathu.
titanic + lagan = madarasapattinam
endru pamara rasigargalukku kooda theriyum analum ivan (vijay dir) yes ennai poruthavarai thirudanukku intha mariyathaiyey jaasthi ivanukellam rathina kambala varaverppu tv shows and interviews ennamo sathithathupol.
"dog bite dog" korean movieyai nativityudan kuranganiyil eduthaal "Myna" kidaithathu. "kikujiro" nandalalavana kathai anaivarum arinthathe. "i robot" film endhiran anathum theriyum. ithupol pala copigal nalla perum vasathiyudanum oorai ematri vaazhgirargal. murugesh babu solvathupol inspiration endru oru courtesykkaga poduvathukooda enakku udanpaadu illai. copy copy thaan. copy adithu exam pass pannupavargalidamirunthu ithaithan ethirpaarkalam. aaga copy adithalum paravayillai 100/100 eduppathutan great endru solveergalpola. do not encourage plagiarism. please encourage the creativity and the real talented. matrapadi ungal mel enakku entha kovamum kidaiyathu. pothuvaga naan ellorudaya valai vasagan aanal eppothavathu mattumey oru comment yarukkavathu poduvaen. intha padam patri ungal vimarsanam padithapin enakku comment kattayamaga ezuthavendum endru thondriyathu (because i am your regular reader i cannot simply digest your Sappaikattu thats why this harsh statements on tamil cinema as i am true cinema lover and i am not able to tolerate these kind of mediocre taste and its awesome HYPE responses) .en niyamana kovam ellorukkum puriyum endru ninaikkiraen. ethavathu manasu punpadumpadi irunthal mannikkavaum anal athey samayam en karuthil naan thelivagavum nermaiyagavum ullen. naan ungalukku podum muthal commentey konjam harshaga irupatharkku mannikkavum. nandri sundar g chennai.

www.rasanai.blogspot.com said...

P.S
i am a true cinema lover and thats why those harsh comments from me on those cheap plagiarists. copy adippathuthan therigirathey pinbu yaen intha kathai en manathil 10 vardangalukku munbey uthithathu endru reel vidavendum (i am sam -- 2001 oscar 10 years) copy endru othukolla mudiyatha kozhaigal. copy endru solla koodathaam inspiration endruthaan sollanumaam vijay sollraan. ivargal tamil cinemavaiyey maatruvathupol statements athukku jalra oru ghosti. vaniga matrum kalai tamil cinemavukkana pala kathaigal tamizhileyey ullathey athay padithu screen play + direction + casting seyyalamey athai vittu vittu hit aana ayal naatu padathai en copy adikka vendum enbathuthan en kobam.
enakku unmaiyaga uzhaipavargalukku credit poi seravillai enbathuthan varutham. ivargalellam naduvil paerum pugazhum sothum serthuvidugirargal.
naan cinema thuraiyai serthavanalla. naan central govt employee. ithu etharkku endral enakku chance kidaikkavillai endru naan comment pottathaga ninaikkakoodathu.thirudargalai paarthu poramai padupavan naan alla.avargalal enakku entha pathippum illai aanal engo gramthilirunthu kanavudan uzhaipaiyum thiramaiyaiyum vaithukkondu vaaippu thedum oru nalla kalaignargalin vaippai intha thirudargal thatti pariththu avargalin kanavugalai nasukukirargal endra varuthamey. thats why i said do not encourage these thieves and plagiarists. encourage the worthy people. cinema rasigan endra muraiyil en athangathai pathivupanna anumathitha parisalukku en nandrigal. time is 1.20 am. naan satru nimmathiyaga thoonguven ena ninaikiraen. ellavatraiyum manthilirunthu irakkiyathu pol ullathu. nandrigal pala parisal.