Wednesday, July 20, 2011

க்ளோபல் வார்மிங் கவிதை.

நேற்றைய அவியலில் சொல்லியிருந்தேனல்லவா? நண்பர் சௌந்தர் எழுதிய கவிதை பற்றி..

வைரமுத்து தேர்வு செய்வதால் அவர் பாணியிலேயே எழுதியிருக்கிறார்.

படியுங்கள்..

****** ********** **********

மனிதா!

கிஷ்கிந்தா வாசிகளிடமிருந்து
கிளைபிரிந்து வந்தவனே!

வரம் கொடுத்த பூமிக்கு
ஜூரம் பிடிக்கச் செய்தவனே!

நீர்தேடி நெடும் பயணம் செல்கிறாய் – நிலவுக்கு
பிராணவாயு தேடி பிரயாணம் செய்கிறாய் - செவ்வாய்க்கு

நீ இருக்க இடம் கொடுத்த பூமிக்கோ
இன்னலைத் தவிர என்ன கொடுத்தாய்?

நிலமகளைத்துளையிட்டு நீரை உறிஞ்சினாய்

உனக்கு அது நீர்
பூமிக்கு அது செந்நீர்

பாவம்!

நீ உறிஞ்சிய உதிரத்தால்
உடல் நடுங்குகிறாள் நிலமாதா நீயோ
நிலநடுக்கம் வந்துவிட்டதாய்
நீலிக் கண்ணீர் வடிக்கிறாய்

அடப்பாவி!
நீ வீடு கட்டிக் குடியேற
நிலத்தடி நீருக்கே சமாதி கட்டப் பார்க்கிறாயே

மனிதா
அகழ்வாரைக்கூட தாங்கும் அன்னை - புகை
தருவோரால் புழுங்கிக் கொண்டிருக்கிறாள் ..
அறிவாயா நீ?

ஆகாயத்தில்
ஓசோன் படலத்து ஓட்டையாம்
உனக்குத் தெரியுமா?

விருட்சங்கள் வெட்டி வெட்டி
இலட்சங்கள் சேர்க்கிறாயே
ஓசோனின் ஓட்டையை
காசு தந்து அடைத்திடுவாயா?

மனிதா
பண்ணிய பாவத்துக்கு
பரிகாரம் சொல்கிறேன் கேள்!

நீ ஒன்றும் பூமியை பூக்களால் அர்ச்சிக்க வேண்டாம்
புகையால் அச்சுறுத்தாமல் இரு
நீ ஒன்றும் மரங்களுக்கு நீர் கூட ஊற்றவேண்டாம்
பாலூற்றாமல் இரு
பூமிக்கு பொன்னை அள்ளி இறைக்க வேண்டாம்
மண்ணை அள்ளி அள்ளி இறைக்கவிடாமல் இரு

போதும் மனிதா போதும்
பூமியைச் சுரண்டி நீ வாழ்ந்தது போதும்
இனியேனும் இந்த பூமியை வாழவிடு!!

** ** ** ** ** ** ** ** ** **


பிடித்திருந்தால் 9865 005 345 இந்த எண்ணுக்கு அழைத்து அவரை வாழ்த்துங்கள்.


.

14 comments:

Sen22 said...

i sent the SMS....

Kavithai is good...

Advance wishes for Sounder...!!!

KANALI said...

சொல்புதிது
கருத்தும்புதிது
இரண்டும் இல்லை
ஆனால்
நன்றாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்
வளரட்டும்
சௌந்தரின் கவிதைகள்.

இராஜராஜேஸ்வரி said...

நீ ஒன்றும் பூமியை பூக்களால் அர்ச்சிக்க வேண்டாம்
புகையால் அச்சுறுத்தாமல் இரு//

தெளிவான அருமையான கருத்துள்ள கவிதைக்குப் பாராட்டுக்கள்.

Rathnavel Natarajan said...

கவிதை நன்றாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.

சுசி said...

உங்க நண்பருக்கு என் வாழ்த்துகளையும் சொல்லிடுங்க.. கவிதை நல்லாருக்கு.

அகல்விளக்கு said...

அருமை...
செளந்தருக்கு வாழ்த்துக்கள்...

calmmen said...

simply super,


உங்களது மனக்கண்ணில் ஒன்றை உங்களால் பார்க்க முடிந்தால் ,அது கண்டிப்பாக உங்களது கைகளில் தவழும் .-பாப் பிராக்டர்

Read more: http://karurkirukkan.blogspot.com/#ixzz1SizzPwYz

கிருபாநந்தினி said...

\\வரம் கொடுத்த பூமிக்கு
ஜூரம் பிடிக்கச் செய்தவனே!\\ இந்த வரிகள்ல வாலி தெரியறார்ணே! பாராட்டுக்கள்! :)

R. Gopi said...

Very good attempt.

Keep it up Sounder.

Rain water harvesting, compulsory garden area இந்த மாதிரி ஆலோசனைகள் நிறையக் கொடுத்திருக்கலாம்.

Stock said...

kolaiveri kavithai :-)

Stock said...

கொலைவெறிக் கவுஜை :-)

Senthilkumar said...

arumaiyaana kavithai . Vaalthukkal

குறுக்காலபோவான் said...

//வைரமுத்து தேர்வு செய்வதால் அவர் பாணியிலேயே எழுதியிருக்கிறார்.//

பாணி நல்ல இருக்கு.
வாழ்த்துக்கள் சொல்லிவிடுங்கள் உங்கள் நண்பரிடம்...

Anonymous said...

கவிதை பிரமாதம்... வெற்றி பெற அனைத்து தகுதிகளும் உண்டு...

//நீ உறிஞ்சிய உதிரத்தால்
உடல் நடுங்குகிறாள் நிலமாதா நீயோ
நிலநடுக்கம் வந்துவிட்டதாய்
நீலிக் கண்ணீர் வடிக்கிறாய்///

என்ன அருமையான வரிகள்... க்ளாஸ்..

வாழ்த்துக்கள்!