“ஹலோ XXXX பேங்க்-லேர்ந்து பேசறோம்... கேன் ஐ டாக் டு..................?”
“யெஸ்.. ஸ்பீக்கிங். சொல்லுங்க”
“ஹவுசிங் லோன் அப்ளை பண்ணீருந்திங்கல்லியா? அதுவிஷயமா என்கொயரி பண்ணக் கூப்ட்டோம். நான் கேட்கற விஷயங்களை சொல்லுங்க”
“ஆனா மேடம்.. ஏற்கனவே இந்த டீடெய்ல்ஸ் எல்லாம் கேட்டு, வெரிஃபிகேஷனும் வந்துட்டுப் போய்ட்டாங்க..”
“பரவால்ல சொல்லுங்க... உங்க பேரு..”
“......”
”கல்யாணமாய்டுச்சா?”
“ஆமாங்க”
“உங்க மனைவி பேரு?”
“........”
“உங்க சம்பளம்?”
“.........”
“உங்க வீட்ல மொத்தம் எத்தனை பேரு?”
“.....”
“ஓகே.. உங்க மனைவி வேலைக்குப் போறாங்களா.. அவங்க ஏர்னிங் எவ்வளவு?”
“மேடம் கோச்சுக்காதீங்க.. நான் ஒரு மீட்டிங்ல இருக்கேன். தவிரவும் இதே கேள்விகளை ஏற்கனவே பலதடவை கேட்டுட்டாங்க. ஒவ்வொருக்காவும் லோன் டூ வீக்ஸ்ல வந்துடும்கறாங்க. சைட்டையும்கூட டெக்னிகல் விசிட் வந்து பார்த்துட்டு போய்ட்டாங்க.”
“ஹலோ.. என்னங்க மரியாதை இல்லாம எரிஞ்சு விழறீங்க? லோன் அப்ளை பண்ணீருக்கதானே.. அப்ப எத்தனை தடவை கேட்டாலும் சொல்லித்தான் ஆகணும்!”
“மேடம் நான் எங்க எரிஞ்சு விழுந்தேன்?”
“இதோ இப்ப கோவமா பேசறீங்கதானே?”
“என்னங்க பிரச்னை உங்களுக்கு? நாலைஞ்சு வாட்டி இந்த டீடெய்ல்ஸ் கேட்டுட்டாங்க. தவிரவும் வீட்டுக்கும் ஆஃபீஸுக்கும் ரெண்டு வாட்டி வெரிஃபிகேஷனும் வந்துட்டாங்க. அதுனால எப்ப சாங்க்ஷன் பண்ணுவீங்கன்னு கேட்கறேன். அவ்வளவுதான்”
“சரிங்க நீங்க ஒண்ணும் சொல்ல வேணாம். போதுமா?”
“என்னதுக்கு மேடம் இப்ப கோச்சுக்கறீங்க?”
“ஹலோ.. லோன் வேணும்னா கேட்கறதுக்கு பதில் சொல்லித்தான் ஆகணும். எத்தனை தடவை கேட்டாலும் சொல்லணும்”
“என்னங்க மேடம் இது! லோன் அப்ளை பண்ணீருக்கேன்தான். அதுக்காக ஒருத்தனுக்கு ஃபோன் பண்ணி பேசலாமான்னு கூட கேட்காம நீங்கபாட்டுக்கு குற்றவாளி மாதிரி கேள்வி கேட்பீங்களா? லோன் அப்ளை பண்ணினா அவன் மனுஷன் கிடையாதா?”
“சரி.. நீங்க ஒண்ணும் சொல்லவேணாம்...”
“ஹலோ.. ஹலோ..”
“சார்.. என்ன சார்.. டென்ஷனாகறீங்க?”
“பேசப் பேச ஃபோனை வெச்சுட்டா. லோன் வாங்கினா நான் மனுஷன் இல்லையா? மனுஷன்னா ரோஷம் வரணும் சார். நான் மனுஷன். ரொம்ப ச்சீப்பா பேசறா.. அதான் ரோஷம் வந்துச்சு. கத்தினேன்...”
** **
“லோன் என்னாச்சுங்க? பேங்க் போனீங்களா?”
“ம்ம்... வந்துடும். ஏதோ பேப்பர் கேட்டாங்கன்னு இஞ்சினியர் சொன்னாரு.. வர்ற மண்டே குடுத்துடுவாராம். எப்படியும் அடுத்த வாரம் லோன் ஓகே ஆகிடும்”
“இப்படியேதான் ரெண்டு மூணு வாரமா சொல்றீங்க..”
“அடுத்தவாரம் கண்டிப்பா ஆகிடும்..”
“ம்க்கும்!”
“என்ன என்னடி பண்ணச் சொல்ற? பேங்க்காரன் வந்து வாங்கிக்கன்னு சொல்லி நான் போகாத மாதிரி. நீயும் எரிஞ்சு விழு..”
“ம்ம். என்கிட்ட காமிங்க உங்க ரோஷத்தையும் கோவத்தையும்... பேங்க்காரன்கிட்டயும், ப்ரமோட்டர்ஸ்கிட்டயும் காமிச்சு வேலைய முடிக்கற வழியக் காணோம். நான் கேட்டா மட்டும் கோவம் மூக்கு மேல வரும்”
“இதுக்குதான் நான் சாப்பிட உட்கார்றதே இல்லை. சாப்பிட உட்காந்தாத்தான் இந்தக் கதையெல்லாம் பேசுவ”
“என்னத்தக் கேட்டுட்டேன்னு இப்ப சாப்பாட்டு மேல கோவத்தை காட்டறீங்க? எனக்கென்ன? ரெண்டு தோசை போதும்னா நான் சுடறத நிறுத்தீட்டுப் போறேன். யாருக்கென்ன வந்தது..”
“ஆமா.. போதும் நீ ஒண்ணும் சுட வேண்டாம்..”
** **
“சார்.. நான் ..................... என் ஹவுசிங் லோன் விஷயமா பேசணும்னு வந்தேன்..”
“உங்க லோன் நம்பர்?”
“...........”
“ஓ.. நீங்கதானா அது? ஏன் சார்... பேங்க்ல கூப்ட்டு டீட்டெய்ல்ஸ் கேட்டா குடுக்கமுடியாதுன்னு சொல்லுவீங்களா?”
“ஐயோ சார்.. அப்படியெல்லாம் சொல்லல சார். நாலைஞ்சு தடவைக்கு மேல டீட்டெய்ல் டீட்டெய்ல்னு அதையேதான் கேட்கறாங்க..”
“ஹலோ நான் பேசீட்டிருக்கேன்.. ஏன் குறுக்க பேசறீங்க?”
“இல்ல சார்.. நீங்க கேட்டீங்கன்னு பதில் சொல்ல வந்..”
“ப்ச்.. மறுபடியும் நடுவுல பேசறீங்க.. லோன் அப்ளை பண்ணினா ஒண்ணுக்கு நூறுதடவை விசாரிக்கத்தான் செய்வாங்க. அதுக்கு கன்னாபின்னான்னு பேசறதா?”
“சார்.. கன்னாபின்னானெல்லாம் பேசலை சார்.. அந்தப் பொண்ணு ரொம்ப கோவமா ஹலோ ஹலோன்னு ஹார்ஷா கேட்கவும்”
“ஓ.. லோன் வாங்கறதுக்கு முன்னாடியே எங்க ஸ்டாஃபை கம்ப்ளெய்ண்ட் பண்றீங்களா நீங்க?”
“சார்.. என்ன சார்... எதச் சொன்னாலும் கோவமாவே பேசறீங்க? வீட்லயும் ப்ரச்னை சார். இன்ஜினியரும் வேலையை கிட்டத்தட்ட நிறுத்திட்டார். நீங்களும் இப்படி கோவமா பிஹேவ் பண்ணினா..”
”“ஹலோ மிஸ்டர்.. எங்க பேங்க்லேர்ந்து கூப்ட்டு கேட்ட்துக்கு நீங்க சரியா டீட்டெய்ல்ஸ் குடுக்கலை.. அதக் கேட்டா என் பிஹேவியரையே குறை சொல்வீங்களா?”
“ஐயோ.. அப்படியெல்லாம் இல்லை சார்..”
“ம்ஹும்.. நீங்க சரியில்லை. என் சீனியர்கிட்ட உங்களை கம்ப்ளெய்ண்ட் பண்றேன். இங்கயே இருங்க. இப்படி உட்காருங்க..”
“இல்ல பரவால்ல சார். நான் நின்னுட்டே இருக்கேன்.. சார்.. ப்ளீஸ் நான் கோவமா எதுவுமே பேசலை சார்.. புரிஞ்சுக்கோங்க”
“நோ நோ.. .வெய்ட்.. பேங்க்காரங்கன்னா உங்களுக்கு அப்படி ஆய்டுச்சு”
“சார் ப்ளீஸ் அப்ப்டிலாம் இல்லை சார்..”
“இங்க முன்னாடி நிக்காதீங்க. அங்க வெய்ட்டர்ஸ் சேர்ல உட்காருங்க. நான் கூப்பிடறப்போ வாங்க”
** ** **
“ஹலோ மிஸ்டர்............... என்ன இங்க?”
“இல்ல சார்.. ஹவுசிங் லோன் விஷயமா வந்தேன் சார். பேங்க்ல கூப்ட்டு என்கொய்ரி பண்ணாங்க. அப்ப மன்த்லி மீட்டிங்ல இருந்தேன்.. சரியா பேசலைன்னு கம்ப்ளெய்ண்ட் போல.மேனேஜரைப் பார்க்கணும்கறாங்க..”
“இவனுக இப்படித்தான் பண்ணுவானுக சார்.. இந்த மேனேஜரை போன மாசம் ஒரு செக் திருப்பி விட்டான்னு வாங்கு வாங்குன்னு வாங்கீட்டேன் நான். என் கம்பெனி அக்கவுண்ட் இத்தனை வருஷமா வெச்சிருக்கேன்.. எவ்ளோ டீலிங் நடக்குது. ஒரு இன்ஃபர்மேஷன்கூட இல்லாம எப்படி செக் ரிட்டர்ன் பண்லாம்னு போட்டு தாளிச்சுட்டேன். என்னைக் கண்டாலே பயந்துக்குவார். வாங்க போய் ரெண்டுல ஒண்ணு கேட்கலாம்”
“ஐயையோ.. வேணாங்க. நான் வெய்ட் பண்றேன். சண்டை வேணாம். அவர் கூப்டாலும் சாரி கேட்டுட்டு ஆக வேண்டியதப் பார்க்கப்போறேன்”
“என்ன சார்.. இப்படி இருக்கீங்க? மனுஷனா பொறந்தா ரோஷம் வேணும் சார்”
“கரெக்ட்தான். அதவிட- மனுஷனா பொறந்தா பணம் வேணும் சார்”
* * *
42 comments:
attagasam....
வாய்யா வா, இவ்வளவு நாள் ஆச்சா திரும்ப வர?
கலக்கல்
parisal sir,
ithu kalakkal
Epdinga ippadi !!!! Nice one....
அது எந்த பேங்குல தல இந்த மாதிரி நடந்துக்கறாங்க,
கலக்கல்.
ம்ம்ம்ம்
வங்கிக்காரர்கள் நம்மை நொந்து நூடுல்ஸ் ஆகத் தான் செய்கிறார்கள். எனது இந்த பதிவை பாருங்கள். இது லோன் வாங்குபவர்களுக்கு மட்டும் உள்ள நிலை இல்லை. நமது பணத்தை இழந்து திரும்பப் பெற நாம் படும் நிலையும் இது தான். http://venthayirmanasu.blogspot.com/2011_06_01_archive.html
கலக்கல்..நான் வீடு கட்ட லோனுக்கு மூன்று மாதம் லோ,லோன்னு அலைஞ்சு இப்ப இந்த மாதம் தான் வாங்கினேன்.
Wonderful post!Customer service என்ற பதத்துக்கு அர்த்தமே தெரியாதவர்களில் செல் போன் கம்பனிகளுக்கும் வங்கிகளுக்கும் தான் போட்டா போட்டி!
amas32
http://www.karkibava.com/2009/03/48.html
y blood? same blood
//“என்ன சார்.. இப்படி இருக்கீங்க? மனுஷனா பொறந்தா ரோஷம் வேணும் சார்”
“கரெக்ட்தான். அதவிட- மனுஷனா பொறந்தா பணம் வேணும் சார்”
//
True!
பரிசல்காரன் டச்!
நல்லாருக்கு க்ரிஷ்.
ம்ம்ம்ம்... நிஜம்.
//மனுஷனா பொறந்தா பணம் வேணும் சார்//
மிகச்சரி!
நகைச்சுவை ஊடே ஒரு நல்ல கருத்து...பரிசல் ஸ்பெஷல் !!!
//"மனுஷனாப் பொறந்தா.."// இப்டித்தாங்க எழுதணும்..
சுவாரசியமா சொல்லிட்டு போயிட்டே இருக்கணும்.. :))
There is something between being submissive and aggressive called assertive.
நல்லா விசாரிச்சீங்களா? பேங்க்ல யாராவது ப்ளாக் படிக்கறவங்களா இருக்கப்போறாங்க...
எல்லாம் மனப்பான்மை சார். இந்தியாவில் நாற்காலி கிடைத்துவிட்டால் எதிரே நிற்கிறவன் எல்லாம் அவன் அடிமை. அது சிறிய நாற்காலி ஆகட்டும், அப்பாடக்கர் நாற்காலி ஆகட்டும் எல்லோரும் இப்படித்தான் இருக்கிறார்கள். ஒருவேளை அந்த பேங்க்கு அம்மையாருக்கும் இது நடந்து இருக்கும், இப்போ அந்த அம்மாகிட்டே மட்டரவன் எல்லோருக்கும் இந்த ட்ரீட்மென்ட் தானோ என்னமோ.
பதிவு சூப்பர் அண்ணா.
பாஸ் என்கிற பாஸ்கரன் ல ஒரு சீன் நினைவுக்கு வருது.
சந்தானம்: "லோன் வாங்குறதுக்கு பாரு நடையா நடக்க வேண்டி இருக்கு."
ஆர்யா: "விடு மச்சி திருப்பி வாங்க அவன் நடப்பான்"
இவ்வளவு கடுப்பேத்துறதுனால தான் லோன் வாங்குன யாரும் சீக்கிரம் திருப்பி கட்டுறதே இல்ல.
எல்லா கேள்விக்குமே
"..............."
இப்பிடி புள்ளி புள்ளியா பதில் சொன்னா லோன் எங்க கிடைக்கும்...
இதுல கடுப்பா வேற பேசிருக்கீங்க....
பரிசல், கலக்கல். அப்பறம், ப்ளாக் பிக்சர் டிஸ்ப்ளே வரலை, வெறும் காத்துதான் வருது... என்னன்னு பாருங்க.
சோகத்தையும் சுவாரசியமா சொல்லிருகீங்க. வாழ்த்துக்கள்.
அந்த பேங்க் ஸ்டாபுக்கு இந்த கட்டுரை லிங்க் அனுப்பிச்சுருகீங்கள்ள?
Parisal Back to form , So happy ... Ezhuthunga
Super... Rompa nalachu...
கலக்கல்... நாங்கல்லாம் களத்துல எறங்க மாட்டோம்.. எறங்கிட்டன்னா சும்மா சிக்ஸர்தான்னு சொல்ற மாதிரி ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு அட்டகாசமான கதை... கதையல்ல நிஜம் ??
well said...
யதார்த்தமான பதிவு!...
super...
well written...
பரிசலை கலாய்ச்சி லோன் குடுக்க டேக்கா கொடுக்குற அந்த பேங்க் பார்ட்டிக்கு “என் ப்ரெண்டு வந்து உங்கிட்ட லோன் கேட்டா, நீ என்ன சொல்லிருக்கனும்? தரேன்னு சொல்லியிருக்கனும் இல்ல தரலேன்னு சொல்லியிருக்கனும். அதவுட்டுட்டு நீ என்னமோ உன் அப்பன் ஊட்டு காச எடுத்துக்குடுக்குற மாதிரி, அசிங்கப்படுத்தி அனுப்பியிருக்க. நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? இல்ல அவ்ளோ பெரிய அப்பாடக்கட்ரான்னு கேக்குறேன்”
இவன் தலதளபதி ஃபேன்
ரத்தம் கொதிக்குது... எவன் உங்களை அப்படிச் சொன்னது.... விடுங்க பாஸ் நான் பார்த்துக்கறேன்.
என் சங்கத்து ஆளை அடிச்சது எவண்டாஆஆஆஆ?
மனுஷனா பொறந்தா பணம் வேணும்//
நம் வாழ்க்கையை கேவலம் அச்சடிக்கப்பட்ட காகிதங்கள் தான் தீர்மானிக்குது.
சே என்ன வாழ்க்கைடா?(வானம் மியுசிக்)
:)
superb...
என்னா டேக்கிங் அண்ட் நேரேஷன்...
இந்த மாதிரி சும்மா மெரள வெக்கிற மாதிரி கத எழுதனும் மக்கான்னு தோண வெச்சதே உங்களுக்கான வெற்றி..
கலக்கல் பரிசல் :)
suvarasyamana nadai.write more.
பதிவு நல்லா இருக்கு.தொடர்ந்து எழுதுங்க.
சூப்பர் பரிசல் சூப்பர்
m...!
vaazhthukal parisal......
உணர்வுகள் தாண்டவமாடுதே!
கலக்கல்!!
அனுபவம் அதிகமா பேசிருக்கு!!
எழுது நண்பா எழுது!!
எனது வீட்டுக்கடனுக்கு வங்கியை அணுகியபோது பெற்ற அனுபவங்களை அப்படியே ஒத்திருந்தது தங்கள் எழுதிய அனுபவங்கள்.ஒரு வேளை இது உங்கள் உண்மை அனுபவமா?அல்லது வேறு ஒருவரின் அனுபவமா?எனெனில் அதில் சிறு நகைச்சுவை இழையோடுகிறது!!!உங்கள் அனுபவம் என்றால் பெரும் சோகம் அல்லவா இழையோடும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
http://machamuni.blogspot.com/
http://kavithaichcholai.blogspot.com/
Post a Comment