# ஃபேஸ்புக்ல என்னை க்ரூப்ல இணைச்சவங்க, ஒரு மெய்லுக்கு ஒரு ரூவா கொடுத்தாலே ஒரே வருஷத்துல கோடீஸ்வரன் ஆகிடுவேன் போலிருக்கே.. #முடியல
# 'கருப்புப் பேரழகா கண்ணுக்குள்ள நிக்கறியே ஜோரா..' பாடல் டான்ஸுடன்.. விநாயகர் சிலையருகே.. சதுர்த்தி விழாவாம்! பொருத்தமாத்தான் போடறாங்க!
# பின்னால ஒருத்தன்: 'இனிமேதான் படமே' #டேய்.. இன்னும் அரை மணிநேரத்துல முடியப்போகுதுடா...
# மங்காத்தாவை 'மங்காத்தாடா'-ன்னு இப்பதான் சொல்றாங்க. விஜய்யோட நண்பனை, 'நண்பேன்டா'ன்னு தமிழ்நாடே எப்பவோ சொல்ல ஆரம்பிச்சாச்சு!
# ஸ்ரீகாந்த்தேவா, தேனிசைத் தென்றல் தேவா-வின் இரட்டைக் குழந்தையா?
# பிடிச்சவங்களுக்குக் கூப்ட்டு, எடுக்கலைன்னா, திருப்பி கால் வர்ற வரைக்கும் நொடிக்கொருக்கா ஸ்க்ரீனைப் பார்க்கற வியாதி உங்களுக்கும் இருக்கா?
# இமேஜைப் பற்றிக் கவலைப்பட வேண்டியவர்கள் புகைப்படக் கலைஞர்கள் மட்டுமே.
# ஃபோன்ல பேசச்சொன்னா, முன்னாடி ஆயிரம் பேர் உட்கார்ந்துட்டிருக்கறப்ப மைக்ல பேசறா மாதிரியே பேசறான்.. #ஹலோஓஓஓஓஓஓஓஓ
# 'உயர்தர சைவ உணவகம்' - இத ஹோட்டல் பேருக்குப் பின்னால டிஃபால்ட்டா வெச்சுக்கறாங்க. அதுக்கு அர்த்தம் தெரியுமான்னே தெரியல!
# 'பெட்ரோமாக்ஸ் லைட்டே வேணும்' என்பதுதான் வாழ்வில் பலரது சோகத்துக்கு காரணமாக இருக்கிறது.
# அன்னா-வுடன் உண்ணாவிரதம் இருக்கச் சென்ற நடிகர் விஜயை சந்திக்க விரும்பும் டெல்லி ரசிகர்கள் 2 to 3 மதிய உணவு இடைவேளையில் சந்திக்கலாம்.
# என் வயதை, நான் பிறந்த நாளை வைத்துக் கணிக்கிறேன். நான் வாழ்ந்ததை, உன்னைப் பார்த்த நாளை வைத்துக் கணிக்கிறேன். #Feelings
# நீயின்றி அமையாது வாழ்வு. #Feelings
# மழை வருவது போலிருந்தால் எல்லாரும் குடை தேடுகிறார்கள். நான் உன்னைத் தேடுகிறேன். #Feelings
# '3 நீங்க எடுத்துட்டு, 1 மட்டும் ஆளுக்குப் பாதியா? தேவையில்ல.. அதையும் நீங்களே வெச்சுக்கங்க' என்ற இந்திய அணியின் ஆண்மையைப் பாராட்டுகிறேன். -Test
# திருமணநாளுக்கு நேரில் சென்று வாழ்த்துவது, அரசியல் பிரமுகர்கள் தங்கள் கட்சியினரை சிறையில் சென்று சந்திக்கும் காட்சியை நினைவுபடுத்துகிறது.
# ஒருத்தன் நல்லா பாடினா 1ஸ் மோர் கேட்கற மாதிரி.. நல்லா விளையாடறாங்கன்னு தொடர்ந்து விளையாடச் சொல்லி ரசிக்கறாங்களோ?-Followon
# 'தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் பட்டியல் எதுவும் இல்லை' - ஜெ. #வெவரம்மா நீங்க! பட்டியல்தான் இல்லைன்னிருக்கீங்க!
# இந்த வாஷிங்பவுடர், ஷாம்பூ விளம்பரங்கள்ல காமிக்கற ஆராய்ச்சிக் கூடங்கள நிஜமாவே அவங்க வெச்சிருப்பாங்களா?
# பாட்டுப் போட்டின்னா பாட மட்டும் சொல்லுங்கடா.. மேக்கப் பண்ணிகிட்டு ஆடறது, ஓடறதுன்னு மகா கொடுமை பண்றாங்க...
# பில்லியனில் இளம்பெண் வைத்து வண்டி ஓட்டுபவர்களை நாம் முந்தினால், அதன் பின் அவர் நம்மை அவ்வளவு சீக்கிரம் முந்துவதில்லை #அவதானிப்பு
# 'The word Krishna means the person who is attractive to everyone' - இப்ப படிச்சிட்டிருக்கற கட்டுரைல இருந்து. கரெக்டாதான் சொல்லிருக்காங்க.
# சரக்கடிக்கும்போது நண்பர்களுக்குள் பின்பற்ற வேண்டுமென்று சொல்லிக்கொள்கிற விதிமுறைகளனைத்தும் அதிகபட்சம் 2வது ரவுண்ட் வரையே நீடிக்கிறது.
# வாக்-கிங் என்பதையே பேராக வைத்திருக்கிறார்கள் சிலர்! #நட-ராஜா
# அழைக்கும் நபர் எதிர்முனையில் என்ன மாதிரியான முகபாவனை காட்டிவிட்டு உங்கள் ஃபோனை எடுக்கிறார் என்று தெரிந்துகொள்ளாதவரை நீங்கள் பாக்யசாலி!
# இந்த பாஸ்'களுக்கு இருக்கற கெட்ட பழக்கங்கள்லயே No1 ஃபோன் பண்றப்ப, 'எங்கிருக்க?'ன்னு கேட்கறது. எங்க இருந்தா என்ன, வேலையச் சொல்லுங்க எசமான்!
# மதியம் சாப்பாட்டுக்கு ஆர்டர் சொல்லிவிட்டேன். இதோ அலைபேசியைத் திறந்து அன்னா ஹசாரேவை ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் ஆதரிக்கப் போகிறேன்.
# நள்ளிரவில் பெற்றோம். நள்ளிரவிற்குப் பின் வாழ்த்தினால் ஒரு SMS-க்கு ஒரு ரூபாயென்பதால் அதற்கு முன்னரே வாழ்த்திக் கொண்டோம். ஜெய்ஹிந்த்!
# படு கேவலமான விளம்பர ஸ்கிரிப்டில் நடிப்பதில் வடக்கே ஷாரூக்குக்கும், தெற்கே சூர்யாவிற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
# சிநேகா, திவ்யா, அனுஷ்கா, தீபிகா, கோபிகா என்றொருவன் கலந்துகட்டி ரசிக்கத் தொடங்கும்போது தேசிய ஒற்றுமை உருவாகிறது.
# முதல் இன்னிங்ஸை விட 20 ரன்கள் கூடுதலாக எடுத்த இந்திய அணியை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.
# ஹோட்டலில் ஒருகுழந்தையை அவள் அம்மா உரக்க அழைத்ததில் மொத்த ஹோட்டலும் அந்தக் குழந்தையைப் பார்த்தது. குழந்தையின் பெயர்தான் காரணம். #காஞ்சனாஆஆ
# 'எல்'லுக்கு பதிலாக 'எஃப்' இடுவது அதிர்ஷ்டத்துக்கு நல்லதல்ல.
# ஒரு நண்பரிடமிருந்து வந்த மெய்ல் இப்படி ஆரம்பிக்கிறது: “Dear my 5278 readers..” - அவ்வ்வ்வ்...........
** ** **
(ஆஃபீஸில் ட்விட்டர்/ஃபேஸ்புக் தடை என்று சொன்ன நண்பர்களுக்காக....)
.
24 comments:
பட்டையக் கிளப்பறிங்க சார்
//# நள்ளிரவில் பெற்றோம். நள்ளிரவிற்குப் பின் வாழ்த்தினால் ஒரு SMS-க்கு ஒரு ரூபாயென்பதால் அதற்கு முன்னரே வாழ்த்திக் கொண்டோம். ஜெய்ஹிந்த்!
ஜிமெயில்ல பயன்படுத்திகிட்டே உங்க டுவிட்களைப் படிச்சுச் சிரித்தேன். நன்றி
//அன்னா-வுடன் உண்ணாவிரதம் இருக்கச் சென்ற நடிகர் விஜயை சந்திக்க விரும்பும் டெல்லி ரசிகர்கள் 2 to 3 மதிய உணவு இடைவேளையில் சந்திக்கலாம்//
கடுகு சிறுத்தாலும் காரமும் குறையவில்லை
நட்புடன்
சம்பத்குமார்
# இந்த வாஷிங்பவுடர், ஷாம்பூ விளம்பரங்கள்ல காமிக்கற ஆராய்ச்சிக் கூடங்கள நிஜமாவே அவங்க வெச்சிருப்பாங்களா? - கூடவே காம்ப்ளான், டூத் பேஸ்ட், ஏன் கடலை, உளுந்து எல்லாம் சேர்த்துகொள்ளுங்கள்...
# 'எல்'லுக்கு பதிலாக 'எஃப்' இடுவது அதிர்ஷ்டத்துக்கு நல்லதல்ல. --- இம்ம்ம் புரியுது புரியுது... எல்' மற்றும் 'எஃப்' மட்டுமே வாழ்கை இல்லை. நீங்க அந்த நாலு எழுதுதை தானே சொல்லரிங்கே
// # ஃபோன்ல பேசச்சொன்னா, முன்னாடி ஆயிரம் பேர் உட்கார்ந்துட்டிருக்கறப்ப மைக்ல பேசறா மாதிரியே பேசறான்.. #ஹலோஓஓஓஓஓஓஓஓ //
இதுதான் என்னுடைய பேவரிட்... என்னிடம் ஒரு பழக்கம் இருக்கிறது... பேருந்தில் என் பக்கத்தில் அமர்ந்து யாராவது இதுமாதிரி சத்தம் போட்டு பேசினால் அதை என் போனில் ரெக்கார்ட் செய்து வைத்துக்கொள்வேன்... இதுமாதிரி ஒரு கலெக்ஷன் வைத்திருக்கிறேன்...
super
ட்வீட்ஸ் எல்லாமே கலக்கல்...
ஏற்கனவே எல்லாமே ட்வீடரில் படித்திருந்தாலும் தொகுப்பாக படிக்கும்
போதும் நல்லா இருக்கு.
# வாக்-கிங் என்பதையே பேராக வைத்திருக்கிறார்கள் சிலர்! #நட-ராஜா .enjoyed the kaduku
கடுகு நல்ல காரம்
என்று என் வலையில்
விஜய் vs அஜித் யார் புத்திசாலி?
yellaame pidichurukku....
vaazhthukal parisal.
Interesting
nice
//
'பெட்ரோமாக்ஸ் லைட்டே வேணும்' என்பதுதான் வாழ்வில் பலரது சோகத்துக்கு காரணமாக இருக்கிறது.
//
ஜுப்பர்...
"L" lula oru "F" kedacha nallathuthane
//# பிடிச்சவங்களுக்குக் கூப்ட்டு, எடுக்கலைன்னா, திருப்பி கால் வர்ற வரைக்கும் நொடிக்கொருக்கா ஸ்க்ரீனைப் பார்க்கற வியாதி உங்களுக்கும் இருக்கா?//
ஹ்ம்ம்.. எனக்கும் இருக்கு
interesting...
# இந்த பாஸ்'களுக்கு இருக்கற கெட்ட பழக்கங்கள்லயே No1 ஃபோன் பண்றப்ப, 'எங்கிருக்க?'ன்னு கேட்கறது. எங்க இருந்தா என்ன, வேலையச் சொல்லுங்க எசமான்!##
ஒன்னும் சொல்றதுக்கில்ல!
:-))
அருமை.
நீர் கலைஞன்யா...!
தலைப்பும் உள்ளடக்கமும் பொருத்தம். அசத்தல்
the one last before.... good one
இன்று முதல் நானும் உங்கள் பரிசலில் பயணிக்கிறேன் நண்பா.
எனக்கு கடைசிக்கு முதல் ட்விட்டூழியம்தான் மிகவும் பிடித்திருந்தது..!
பயங்கரமா சிந்திக்கிறியே மச்சான்!
முடியலையே! :)
Post a Comment