அது என்ன என்பதைக் கடைசி பத்தி படித்து அறிந்து, கொல்லவும். (எ.பி.அல்ல)
-----------------
மூணு, நண்பன், ராஜபாட்டை, கழுகுன்னு போனவாரம் பூரா இசை வேட்டைதான். ஆங்.. வேட்டை வேற.. அத விட்டுட்டேன் பாருங்க..இந்த அஞ்சுல மூணு யுவன்.
என்னது…. மூணு அனிருத்-தா? ஹலோ.. அஞ்சு படங்கள்ல மூணு படம் யுவன் இசைன்னு சொல்றேன்.
அதுல ராஜபாட்டை ‘பொடிப்பையன் போலவே’, ‘பனியே பனிப்பூவே’-வை விடவும் ‘வில்லாதி வில்லன்கள்’ செம ரெட்ரோ சாங். அதோட ட்ரம்ஸுக்காக அத கேட்டுட்டே இருந்தேன்.
வேட்டைல ‘வெச்சுக்கவா உன்னை மட்டும்’ ம்யூசிக்ல தொடங்கி, ’ஆறு’ படத்துல வர்ற ‘சோடா பாட்டில் கைல’ பாட்டோட மெட்டுல வர்ற ‘பப்பபப்பா பப்பபா” நல்லாருக்கு. இன்னொரு சுவாரஸ்யம்: இந்தப் படத்துல வர்ற பாட்டோட ஆரம்பமெல்லாமே கவனிச்சீங்களா? தம் தம் தம் / டம்ம டம்ம டம்மா / பப்ப பப்ப பப்ப்பா / தையத் தக்கா தக்கா - ன்னு ஒரே மாதிரி இல்ல?
யுவன் ம்யூசிக்ல வந்த இந்த மூணு படத்துலயும் கழுகுதான் பெஸ்ட். எல்லாமே நல்லா இருக்கு. (அல்லது நல்லா இருக்கற மாதிரி இருக்கு) யுவன் குரல்ல ‘பாதகத்தி கண்ணுபட்டு’ டிபிகல் யுவன் சாங்! ‘ஆத்தாடி மனசுதான்’, இளையராஜா பாடல் மாதிரியான மெலடி. (கார்த்திக் ராஜா குரல்)
3. அனிருத் கொலவெறியோட காணாமப் போற ஆளில்லைன்னு நினைக்கறேன். எல்லா பாட்டுமே நல்லாத்தான் இருக்கு. கம் ஆன் கேர்ள்ஸ், இதழின் ஓரம் எல்லாமே. கொலவெறி நான் கேட்கவே இல்லை. சலிச்சுட்டுது. மோஹித் சௌகான் & அனிருத் சேர்ந்து (யுவன் ஸ்டைல்ல) பாடின போ நீ போ – வாவ் ரகம். நிச்சயமா கேளுங்க.
நண்பன்: ஹாரிஸ் –சங்கர் கூட்டணி எப்பவும் போலவே ஏமாத்தல. அதுவும் அஸ்க லஸ்கா – அஸ்கா! விஜய் ப்ரகாஷ் - சின்மயி!
சின்மயியை விட, விஜய் ப்ரகாஷ் பாடறப்ப அந்த ‘சிந்தா சிந்தா / ப்யாரோ ப்யாரோ-வுல ஒரு துள்ளல் தெறிக்குது பாருங்க.. சூப்பர்!
இந்தப் பாட்டோட வரிகள்... இந்த மாதிரி எழுதறப்பதான் ஒரு கவிஞர் தன்னோட இடத்தை கெட்டியா பிடிச்சுக்கறார். வரிகளை கவனிச்சு, ரசிக்கற என்னை மாதிரி ஆனவங்களுக்கு மதன் கார்க்கியோட வரவு – வரம். சும்மா இல்லாம, பல மொழிகள்ல காதல்ங்கற வார்த்தையை கோர்த்து எழுதிருக்கற இந்தப் பாட்டுல
“முக்கோணங்கள் படிப்பேன் உன் மூக்கின் மேலே..
விட்டம் மட்டம் படிப்பேன் உன் நெஞ்சின் மேலே
மெல்லிடையோடு வளைகோடு நான் ஆய்கிறேன்” - அபார கற்பனை! (இப்படிச் சொல்லிக் குடுத்திருந்தா ஜ்யாமெண்ட்ரில ஆஹா ஓஹோன்னு மார்க் வாங்கீருப்பேனே..)
அதே பாட்ல ரெண்டாவது சரணத்துல வர்ற
‘புல்லில் பூத்த பனி நீ ஒரு கள்ளம் இல்லை
வைரஸ் இல்லா கணினி - உன் உள்ளம் வெள்ளை
நீ கொல்லை மல்லி முல்லை போலே
பிள்ளை மெல்லும் சொல்லைப் போலே’ -
வாவ்!
பதினாறு பதினாறா பல அடிகள் தாண்டப்போகுது இந்தக் குட்டி!
----
போன வாரம் ஒரு பிரபலத்தை அழைத்தேன்.
“பிஸிங்களா.. பேசலாமா? ஜி.நாகராஜன் படிச்சிட்டிருக்கேன். உங்ககிட்ட பேசணும்னு தோணிச்சு”
“இல்ல.. சொல்லு பரிசல். விகடனுக்காக நட்சத்திர எழுத்தாளர் சிறுகதை கேட்டிருக்காங்க. எழுதிட்டிருந்தேன்’ என்றார்.
“ஓ! சூப்பர்ங்க” என்றுவிட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கும்போது இப்படிக் கேட்டார்: “சரி பரிசல்.. நீ எப்ப நட்சத்திர எழுத்தாளரா மாறப்போற”
அன்னா ஹசாரே, ஆஸ்திரேலியா டெஸ்ட், இளையராஜா இசைவிழா என்று அவர் கவனத்தை திசை திருப்பிப் பேசிவிட்டு வைத்துவிட்டேன்.
கிறிஸ்துமஸ் டைம். ஒரு நல்ல நட்சத்திரமாக வாங்கி வீட்டு முன் மாட்டி நட்சத்திர எழுத்தாளராகியே தீருவது என்று முடிவெடுத்திருக்கிறேன்.
--
விஜய் டிவி- நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி- நிகழ்ச்சிக்காக சூர்யா கேட்கும் கேள்விகள் அடடா.. அபாரம். இதுபற்றி ட்விட்டரில் போட்டுக் கிழிக்கப்பட்டது. இப்படிக் கூட கேட்பார்கள் என்று. அவற்றில் நானெழுதிய சில கேள்விகள்:
சமீபத்தில் ஒன்-டேவில் இரட்டை சதம் அடித்த வீரர்
1) விஸ்வநாதன் ஆன்ந்த் 2) மைக் டைசன் 3) சேவக் 4) பிடிஉஷா
ஜனகனமண என்பது நம்
1) தேசியப் பறவை 2) தேசியக்கொடி 3) தேசிய விலங்கு 4) தேசிய கீதம்
சமீபத்தில் குழந்தை பெற்றுக் கொண்ட உலக அழகி
1) கொல்லங்குடி கருப்பாயி 2) ஐஸ்வர்யா ராய் 3) சௌகார் ஜானகி 4) பரவை முனியம்மா
சூப்பர் ஸ்டார் ரஜினியின் இயற்பெயர்
1) சாந்தி 2) பூந்தி 3) காந்தி 4) சிவாஜிராவ் கெய்க்வாட்
இரட்டை ஆஸ்கார் வாங்கிய தமிழன் / இசையமைப்பாளர் யார்?
1) கே.ஆர்.விஜயா 2) ஏ.ஆர்.ரஹ்மான் 3)எம்.ஆர்.ராதா 4) ஜி.ஆர்.தங்கமாளிகை
தமிழக ஆட்சி மாற்றத்தில் தன்னை அணில் என்று விளித்துக் கொண்ட நடிகர்
1) என்னத்தே கண்ணையா 2) டாம்க்ரூஸ் 3) ஜாக்கிஜான் 4) விஜய்
ஜெயலலிதாவால் சமீபத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தோழி பெயர்
1) சசி 2) பசி 3) குஷி 4) மஷி
கமலஹாசன் 10 வேடங்களில் நடித்த படம்
1) பாட்ஷா 2) முத்து 3) படையப்பா 4) தசாவதாரம்
--------------------
நேற்று மதியம் ஒருவர் அழைத்தார்.
“பரிசல்.. ஏன் இப்பல்லாம் எழுதறதே இல்லை?”
வழக்கம் போல நான் அசடு வழிந்ததை, அந்த அழைப்பு வீடியோ காலிங் அல்லாததால் அவரால் பார்க்க முடியவில்லை.
“இது ரொம்ப தப்பு பரிசல். நீங்கள்லாம் எழுதாம இருக்கறது ரொம்பவே தப்பு. ஒரு கட்டத்துக்கு மேல நிறுத்திடறீங்க. நானும் உங்க பழைய போஸ்ட் ஒவ்வொண்ணா எத்தனை நாள்தான் படிக்கறது?” என்று கேட்டார். பாவமாகத்தான் இருந்தது. என்னாலேயே அதில் பலவற்றைப் படிக்க முடிவதில்லை.
“இல்லைங்க.. வேலை..” என்று ஆரம்பிக்கப் போனவனை ஒரு அதட்டலாக இடைமறித்தார். “அதெல்லாம் சோம்பேறிக சொல்றது பரிசல்” (அப்பறம் நான் யாரு? ரொம்பச் சுறுசுறுப்பானவனா? அதுசரி!) “எஸ்.ரா, ஜெ.மோ இவங்களையெல்லாம் எடுத்துக்கோங்க. அவங்களுக்கு இல்லாத வேலைப்பளுவா உங்களுக்கு இருந்துடப் போகுது? அவங்கள்லாம் எவ்ளோ படிக்கறாங்க.. எவ்ளோ உலகப்படங்கள் பார்க்கறாங்க.. அவங்க எழுதறதில்லையா?”
“அவங்க கூட என்னை ஒப்பிடறதா..” என்று கேட்கவும் மறுபடி பொங்கினார்.
“அப்படி ஒரு நெனைப்பு வேறயா? அவ்ளோ பிஸி ஷெட்யூல்ஸ் இருக்கறவங்களே எழுதறப்ப உங்களுக்கென்ன கேடுன்னு சொல்ல வந்தேன்” என்றவர் “கண்டிப்பா வாரம் ரெண்டு மூணாவது எழுதுங்க பரிசல்.. ஆமா சொல்லீட்டேன்” என்று என் பதிலை எதிர்பாராமல் அழைப்பைத் துண்டித்தார்.
நான் எழுதணும்னு ஒரு ஜீவன் இப்படிக் கிடந்து துடிக்கும்போது, உலகம் சுழலாம என்ன பண்ணும்!
---
---
25 comments:
அடடா மீ தி பர்ஸ்ட் ஆ ...அண்ணே
அப்படியே ஒரு கவிதை எழுதிருந்த நல்லாயிருந்திருக்கும்.
"ஜனகனமண என்பது நம்
1) தேசியப் பறவை 2) தேசியக்கொடி 3) தேசிய விலங்கு 4) தேசிய கீதம்"
உச்சக்கட்ட நக்கல்
"ஒரு நல்ல நட்சத்திரமாக வாங்கி வீட்டு முன் மாட்டி நட்சத்திர எழுத்தாளராகியே தீருவது என்று முடிவெடுத்திருக்கிறேன்."
அண்ணே இதுதான் உங்க டக்கா... கிறிஸ்துமஸுக்கு முன்னாடியே பல பேர் நட்சத்திர எழுத்தாளர் ஆகிட்டாங்க
கும்பகர்ணன் தூக்கத்துல இருந்து எழுந்துவிட்டார் ...............!
உங்களை திட்டி எழுத வைத்த நண்பருக்கு நன்றி :-) ரொம்ப சுவையான ஒரு பதிவு. எப்பொழுதும் போல உங்கள் நகைச்சுவை உணர்வு மேலோங்கி, படிப்பவர் முகத்தில் புன்முறுவலை வர வழிக்கும் ஒரு பதிவு. அடிக்கடி எழுதுங்க.
amas32
நீண்ட நாட்களுக்குப் பின் உங்க அவியல்
படித்து மகிழ்ச்சி.நீ.வெ.ஒ.கோ -ன்
நேற்றய கேள்வியை பார்த்தீங்களா?
மதன் கார்கியின் வரிகள் ரொம்பவே வித்யாசமா,நல்லா இருக்கு.
//“அப்படி ஒரு நெனைப்பு வேறயா? அவ்ளோ பிஸி ஷெட்யூல்ஸ் இருக்கறவங்களே எழுதறப்ப உங்களுக்கென்ன கேடுன்னு சொல்ல வந்தேன்” என்றவர் “கண்டிப்பா வாரம் ரெண்டு மூணாவது எழுதுங்க பரிசல்//
ஐய்யா, இதைத்தானே நானும் சொல்லிட்டே இருக்கேன். ஏன் பிரபலங்கள் சொன்னாத்தான் கேட்பீங்களோ? நான் சொன்னா கேட்க மாட்டீங்களோ?
அவியல் சூப்பர் சுவையுடன் இருந்தது.
Good Avial after a long time!!!
முப்பொழுதும் உன் கற்பனைகள் விட்டுடீங்களே :)
நல்ல மலபார் அவியல் சாப்பிட்ட திருப்தி
தன்னை அணில் என்று சொன்னது என்னத்தைக் கன்னையாவா, விஜய்-ஆ?
welcome back
வைத்யாண்ணா நலமா?
ஜோக் பண்ணிக்கிற சாக்குல கொஞ்சம் சொந்த ட்ரெம்பெட்டையும் ஊதிக்கிற மாதிரி இருக்குது.
பாத்து சத்தம் இங்க கேக்குது. இப்படித்தான் ஆரம்பிக்கும்.. அப்பால கேக்குறவன் காது கிழியும்.
விஜய் டிவி- நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி- நிகழ்ச்சிக்காக சூர்யா கேட்கும் கேள்விகள் அடடா.. அபாரம். இதுபற்றி ட்விட்டரில் போட்டுக் கிழிக்கப்பட்டது. இப்படிக் கூட கேட்பார்கள் என்று. அவற்றில் நானெழுதிய சில கேள்விகள்://
the profit from sms of KBC-3 hosted by sharukh khan alone was 7 crores out of an income of 15 crores. that time per sms was charged 2.40 rs. easy questions like this will bring many sms and more profit.
nice aviyal hope u will save the world from apocalypse)))
//கிறிஸ்துமஸ் டைம். ஒரு நல்ல நட்சத்திரமாக வாங்கி வீட்டு முன் மாட்டி நட்சத்திர எழுத்தாளராகியே தீருவது என்று முடிவெடுத்திருக்கிறேன்.//
இதுதான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு அண்ணா :))
//இசையமைப்பாளர் யார்? 1) கே.ஆர்.விஜயா 2) ஏ.ஆர்.ரஹ்மான் 3)எம்.ஆர்.ராதா 4) ஜி.ஆர்.தங்கமாளிகை //
என்னா நக்கலு உங்களுக்கு ? தங்கமாளிகைனுலாமா கேக்குறாங்க :))
நல்லா இருந்தது அவியல்...
Oru kodi.. All jokes superb...!!
சூப்பர்...அருமையான எழுத்து நடை..
அசத்தல்..
நிறைய எழுதுவிங்கன்னு எதிர்பார்க்கறேன்.
நன்றி பரிசல், மீண்டும் எழுதுவதற்கு.
அடாடா.. என்னமா பிட்டு போடுறீங்க..
என்ன கேள்வி... என்ன பதில்..
பின்னிட்டீங்க..
மீண்டும் பரிசல்.
அடிச்சு தூள் கெளப்புங்க...
ரத கஜ தூரக பதாதிகள் ரெடியா?(அப்டீன்னா என்ன?)
aviyal so tasty
இந்த நட்சத்திரம் வாங்கி மாட்ற கதையெல்லாம் கேக்க நல்லா தான் இருக்கு. ஆனா எப்போ ஒழுங்கா மறுபடியும் ஒரு ரவுண்ட் வரப் போறீங்க ப்ளாக்ல..
நானும் போன் போட்டு திட்டலாம்னு இருந்தேன்... நம்ப same blood இருக்குது ...
“இது ரொம்ப தப்பு பரிசல். நீங்கள்லாம் எழுதாம இருக்கறது ரொம்பவே தப்பு. ஒரு கட்டத்துக்கு மேல நிறுத்திடறீங்க. நானும் உங்க பழைய போஸ்ட் ஒவ்வொண்ணா எத்தனை நாள்தான் படிக்கறது?”
Post a Comment