இணையம் – மனைவியிடமிருந்து தற்காலிகமாகத் தப்பித்துக் கொள்ள கணவர்கள் தஞ்சமடையும் இடம்
ஃபேஸ்புக்:பெண்கள் அக்கவுண்டில் ‘ஃபோட்டோஸ்’ பகுதியை ஆண்கள்
ஆர்வமாகப் பார்க்கும் இடம்
ட்விட்டர் – பஸ் மூடியதால் பலர் தஞ்சமடையும் இடம்
கூகுள் ப்ளஸ் – இன்னமும் இன்னதென்று தெரியாத ஒரு வஸ்து
பதிவர் – தனது அனுபவங்களை இணையத்தில் கன்னா பின்னாவென எழுதுபவர்
எழுத்தாளர் – அதையே அச்சில் புத்தகமாகப் போடுபவர்
ச்சாட் – ஆஃப் த ரெகார்ட் போட்டு ஆணும் பெண்ணும் பேசிக் கொள்ளும் இடம்
மெய்ல்: பெர்சனல் அக்கவுண்டிலேயே அஃபீஷியலாக ஒன்றும் ரொம்பவே பெர்சனலாக ஒன்றும் வைத்துக் கொள்வது
காலை வணக்கம்: அருகிலிருப்பவருக்கு சொல்லாமல் அண்டார்டிக்காவில் இருப்பவர்களுக்கு சொல்வது
குட் நைட்: அதிகாலை 3 மணிக்கு சொல்லிக் கொள்வது.
சினிமா விமர்சனம்: ஏதாவது பஞ்ச் லைனில் முடிவது
பின்னூட்டப் பெட்டி: அருமை , அட்டகாசம், ---------- டச் என்றுநண்பர்கள் எழுதும் இடம்
எதிரிகள்: மேற்கண்டவாறு எழுதாதவர்கள்
பொறாமை: அடுத்தவர் நம்மீது நல்ல விமர்சனம் வைக்கும்போது,
அவர்களைப் பற்றி நாம் சொல்ல பயன்படுத்துவது
காலை 9 மணி: அலுவலர்கள் வருவார்கள் என்று முதலாளிகள் எதிர்பார்க்கும் நேரம்
10 மணி: முதலாளி வந்துவிடுவாரோ என்று அலுவலர்கள் வேலை செய்வதாய் பாவ்லா காட்ட ஆரம்பிக்கும் நேரம்
11 மணி: கேண்டீன் டைம்.
கேண்டீன் - ஸ்டாஃப்ஸ் மீட்டிங் நடக்குமிடம்
கான்ப்ரன்ஸ் ஹால் - ஸ்டாஃப்ஸ் டீ/காஃபி சாப்பிடுமிடம்
பொங்கல்: கணவர்களுக்கு தினமும் கிடைப்பது
பூரிக்கட்டை: பூரி செய்யவும் இதை உபயோகப்படுத்தலாம் என்று மனைவியர் அறிந்து கொண்ட வஸ்து
ஜனாதிபதி - இந்தியாவின் முதல் குடிமகன்
கேப்டன் - தமிழகத்தின் முதல் குடிமகன்
வெற்றிகரம் - ஒரு படம் இரண்டாவது நாள் ஓடினால் தயாரிப்பாளர்கள் சொல்வது
சூப்பர் ஹிட் - வெளியான இரண்டாம் மாதம் டிவியில் வரும் படம்
சீரியல் - பெண்களைத் திட்டிக் கொண்டே ஆண்கள் பார்ப்பது
க்ரிக்கெட் - ஆண்கள் பார்ப்பதாலேயே பெண்கள் வெறுப்பது
வேஷ்டி - சத்தியமூர்த்தி பவனைச் சுற்றியுள்ள கடைகளில் அதிகம் விற்பனையாவது
பஞ்சாயத்து – தவறு செய்தவன் பணம் கொடுக்கும் இடம்
போலிஸ் ஸ்டேஷன்: புகார் கொடுத்தவன் / தவறு செய்தவன் இருவரும்
பணம் கொடுக்கும் இடம்
ஹார்ன்: வாகன ஓட்டிகள் தேவையில்லாத போதெல்லாம் உபயோகிப்பது
ப்ரேக்: வாகன ஓட்டிகள் தேவையான போதெல்லாம் உபயோகிக்க மறப்பது.
-இப்போதைக்கு இவ்வளவுதான். தொடரலாம். சான்ஸ் இருக்கிறது..
.
39 comments:
அருமை , அட்டகாசம், பரிசல் டச்
பின்னூட்டப்பெட்டி -
வட, மொத வட, வட போச்சே.
Pakirvukku
nanri....super....sema...
:)
:)
:)
வெற்றிகரம் - ஒரு படம் இரண்டாவது நாள் ஓடினால் தயாரிப்பாளர்கள் சொல்வ//// இரண்டாவது ஷோவே போடுவது .....வெற்றி நடைபோடுகிறது...
Super dictionary!
;-)
ரொம்ப யோசிக்கிறீங்க!!! நல்லா இருக்கு.
//காலை வணக்கம்: அருகிலிருப்பவருக்கு சொல்லாமல் அண்டார்டிக்காவில் இருப்பவர்களுக்கு சொல்வது
குட் நைட்: அதிகாலை 3 மணிக்கு சொல்லிக் கொள்வது.//
கலக்கல் பாஸ்... :)
good. continue. :)
எல்லாமே அசத்தல் ரகம்தான்.
அருமை அட்டகாசம் பரிசல்..:)
தொடரலாம் அடுத்த பகுதி..
பரிசல்:
இந்தப் பதிவை என் மனைவியிடமும் காட்டினேன். மிகவும் ரசித்து வாசித்தார்.
அவர் சொல்ல விரும்பியது:
"நன்றாக உள்ளது. தொடருங்கள். எங்களுக்கு எழுத நேரம் கிடைச்சால் நீங்க தாங்க மாட்டீங்க. பொழச்சுப் போங்க"
sema
சவால் - வருடா வருடம், பரிசல், ஆதிரா இணைந்து நடத்தும் தமிழ்ப் பதிவுலக சிறுகதைப் போட்டி.
கூகுள் ப்ளஸ் – இன்னமும் இன்னதென்று தெரியாத ஒரு வஸ்து
எனக்கும்தான் பாஸ்
பெருசா இருந்தாத்தான் டிக்ஸனரி:)
அப்ப பரிசா இருந்தா!
அருமை , அட்டகாசம், ---------- டச்....
பரிசல் - கன்னாபின்னாவென யோசிப்போர் சங்கத் தலைவர்...
:))))))))))))) அசத்தலோ அசத்தல்
(அங்கங்க தங்க்ஸை சீண்டியிருப்பதை மட்டும் வன்மையா கண்டிக்கிறேன்)
ஒவ்வொன்றும் பரிசல் டச்...எல்லாமே நச்.
செம்ம்ம்ம!!
சிரிச்சு முடியலைங்க :)
//
காலை வணக்கம்: அருகிலிருப்பவருக்கு சொல்லாமல் அண்டார்டிக்காவில் இருப்பவர்களுக்கு சொல்வது
//
Nach.....
அருமை , அட்டகாசம், ---------- டச்
அருமையான நகைச்சுவை தோரணங்கள்.
எங்களது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
ஒன்னுக்கொன்னு செம காலாய்ப்புங்க. அதுலயும்
//குட் நைட்
சூப்பர் ஹிட்
சீரியல்
க்ரிக்கெட் // மிக ரசித்தவை.
நல்ல முயற்சி ;wikipedia போல பலர் இதில் சொற்கள் சேர்க்கலாம்:இதோ என் contribution:
அழகி:மனைவியுடன் செல்லும்போது எதிரே வரும் எவளும்!
கூலிப்படை:நம்மிடம் பணம் வாங்கி மற்றவர்களை கொலை செய்பவர்கள்.
மருத்துவர்கள்:நம்மிடம் பணம் வாங்கி நம்மையே கொலை செய்பவர்கள்.
இலக்கியம்:புரியவும் செய்யாது;சுவாரசியமாகவும் இருக்காது.காணப்படும் இடம்:புத்தக அலமாரி
குமுதம்:புரிய எதுவும் இல்லை ஆனால் சுவாரசியமாக இருக்கும்
காணப்படும் இடம்:வரவேற்பு அறை முதல் குளியலறை வரை
Playboy:நன்றாக புரியும் சுவாரசியமாகவும் இருக்கும்.
காணப்படும் இடம்:படுக்கை அறை(தலையணைக்கு கீழே)
நண்பரே
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
நண்பர்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தமிழர் வாழ்வு மேம்படும் என்ற நம்பிக்கையோடு..
//கான்ப்ரன்ஸ் ஹால் - ஸ்டாஃப்ஸ் டீ/காஃபி சாப்பிடுமிடம்
///
it should be
//கான்ப்ரன்ஸ் ஹால் - ஸ்டாஃப் டீ/காஃபி சாப்பிடுமிடம்
staff itself a plural word.
just wanted to inform u.no offence.
btw,
அருமை , அட்டகாசம் :-)
அருமை , அட்டகாசம், ---------- டச்!!!!!
பரிசல் டிக்ஷ்னரி : போன் எடுக்க நேரமில்லாதவர்கள் பதிவில் எழுதுவது...!! :)))
Arumai miga Arumai
:)) கலக்குற போ!
பரிசல் டச் எல்லா வரிகளிலும் தெரிகிறது.
சாவி யின் தமிழ் சினிமா உலகம்.
மெரினா: 03.02.2012 - திரைவிமர்சனம்!
Vikatan வலையோசை - Valthukkal Parisal
ஆங் மறக்காம நம்ம வூட்டு விசேசத்துக்கு வந்துடுங்க..... வர்ட்டா....
அப்பாலிக்கா ஆனந்தவிகடன் பகுதிக்கு அண்ணனனுக்கு ஒரு வாழ்த்து பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்!!!!!!
gd mng
gd nt
canteen
conference hall
ithellaam pidichurunthathu..
நான் வலையில் புதுசா பிடிபட்ட மீன். உங்கள் டிக்ஸ்னரியை படித்தோன். நிறைய பேர் அருமை என விமர்ச்சனம் செய்துள்ளனர். நாமும் விமர்ச்சனம் எழுதலாம் னு பார்த்த எங்க எழுதுவது என்று தெரியலை அரை மணி நேரம் தேடி ‘கடைசியில்’ பா£ர்த்தேன். அருமைங்க Dn’t Stop Thinking. ok
Post a Comment