பெரியவள் மீரா விஜய் ரசிகை. சின்னவள் சூர்யா. அவர்கள் படுக்கையறையில்
பத்திரிகைகளிலிருந்து வெட்டப்பட்ட ப்ரிய நடிகர்கள் இருவரது படங்களும் அங்கங்கே இருக்கும்.
பெரிதாக வாள் போரோ, வாய்போரோ எல்லாம் நடக்காது எனினும் அவ்வப்போது நைஸாக இருவரும் பரஸ்பரம்
வாரிக் கொள்வது வழக்கம். எனக்கு போரடித்தால் நான் யாரோ ஒருவரை வம்புக்கிழுத்து கொஞ்ச
நேரம் கலாய்ப்பதும் உண்டு.
சென்ற வாரம் ஏதோ ஒரு சேனலில் விஜய் நடித்த ‘தமிழன்’. விஜய்க்கு
தபால்தலை எல்லாம் வெளியிடுவது போன்ற காட்சி வந்ததும் மீராவைப் பார்த்து, “இதெல்லாம்
ஓவராத் தெரியலியா?” என்று வம்புக்கு இழுத்தேன். அவள் என்னை முறைப்பது போலப் பார்க்க,
சின்னவள் மேகா, “அவ்ளோ நல்ல பேரு வாங்கீருக்காருல்ல. அதான் ஸ்டாம்ப் வெளியிடறாங்க”
என்றாள்.
‘என்ன அதிசயம்? இவள் விஜய்க்கு சப்போர்ட் பண்றாளே’ என்பதாய்
நானும், ஆச்சர்யம் தாங்காமல் மீராவும், மேகாவைப் பார்க்க அவள் அப்பாவி போல் அமர்ந்திருந்தாள்.
படம் ஐந்து நிமிடம் ஓடிக்கொண்டிருந்த போதுதான், எங்களுக்கு விஷயம்
புரிந்தது. படத்தில் விஜய் பேர் சூர்யா!
** ** ** ** **
சிவகார்த்திகேயனின் டைமிங் சென்ஸ் பிரமிக்க வைக்கிறது. அது இது
எது நிகழ்ச்சியை அவருக்காகவே விரும்பிப் பார்ப்பது உண்டு. சமீபத்தில் ’நீங்களும் வெல்லலாம்
ஒரு கோடி’யில் பங்கு கொண்ட அவர் பண்ணிய அதகளம் அபாரம். ‘நமக்கு பொதுவாவே அறிவில்ல..
பொது அறிவும் இல்ல’ என்பது போன்ற அவரது வெடி டைமிங்கள் ‘சிவா’ரஸ்யம்! நிகழ்ச்சியின் மற்றொரு பங்கேற்பாளரான கோபிநாத்
மனம்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. அப்பாவைப் பற்றிப் பேசியபின்
அவர் கொஞ்சம் அமைதியாகிவிட்டதாய்த் தோன்றியது. நேர்மையான, அமைதியான, அனைவருக்கும் பிடித்தமானவராக
இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற கோபியும் தன்பங்குக்கு சிக்ஸர்களாக
விளாசினார். சரியான ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்ததற்காக அவர் சொன்ன லாஜிக்குகள் பாராட்ட வைத்தன.
இங்கே ஒரு அவதானிப்பு. விஜய் டிவி நிர்வாகத்தினர் தனிநபர் திறமைகள்
அங்கீகரிக்கும் விதமும், அவர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவமும் குறிப்பிடத்தக்கது.
இன்றைக்கு தயாரிப்பாளர்கள் வரிசைகட்டி நின்று தேதி வாங்கும் காமெடி நடிகர் சந்தானம் விஜய் டிவியினால் வளர்ந்தவர் என்பதை மறுக்க முடியாது.
இப்போது ஒரு கேள்வி: இதே விஜய் டிவியில் ‘அசத்தப்போவது யாரு’-வில்
அசத்திக் கொண்டிருந்து பிறகு சடாரென்று சன் டிவிக்குத் தாவிய, வெடிச்சிரிப்புகளை இடைவிடாது
உதிர்க்கும் மதுரை முத்து என்னவானார்?
** ** ** ** **
கிட்டத்தட்ட ஒரு வருடமாக நடந்து கொண்டிருக்கிறது வீட்டுவேலை.
‘இன்னும் முடியலையா’ என்று கேட்பவர்களிடம் ‘இன்னும் ஆரம்பிக்கலையான்னு கேளுங்க’ என்று
சொல்லிக் கொண்டிருக்கிறேன். அங்கே இங்கே என்றலைந்து ஒரு வங்கியில் கடனுக்கு ஏற்பாடாகி
விட்டது.
அந்த வங்கியில் கடனை அனுமதிக்கும் முன் ஒரு நேர்முகம் என்று
அழைத்திருந்தார்கள். எல்லா கேள்விகளுக்குப் பிறகு என்னுடைய பாலிசி பத்திரத்தையும் வங்கியில்
ஒப்படைக்கச் சொன்னார்கள். சரி என்று கொடுக்க, வாங்கிக் கொண்ட அதிகாரி ‘வேற எதாவது பாலிசி
வெச்சிருக்கீங்களா’ என்று கேட்டார்.
“நாலைஞ்சு பாலிஸி வெச்சிருக்கேன் சார். ட்ராஃபிக் சிக்னலை மதிக்கணும்..
ஸ்டாப்லைனைத் தாண்டி நிக்கக்கூடாது, சிகரெட் பிடிக்கக் கூடாது.. சிகரெட்டுக்காக யாருக்கும்
காசும் கொடுக்கக்கூடாது, நல்லது பண்ணாட்டியும் கூடுமானவரை கெட்டது பண்ணக்கூடாது..”
என்று சொல்ல நினைத்து வாயை அடக்கிக் கொண்டு, “இல்லை” என்றேன்.
கிடைக்கறதும் கிடைக்காமப் போச்சுன்னா என்ன பண்றது?!?
** ** ** ** **
இது ஒன்று அல்லது ஒன்றரை வருஷம் முன்பு நடந்தது. எங்கள் நிறுவனத்தின்
உற்பத்திப் பிரிவில் பெரிய பொறுப்பில் இருக்கிறவர் அவர். ஒருநாள் காலை 9 மணிக்கு அவரிடமிருந்து
ஒரு குறுஞ்செய்தி. “அவசரமாக சொந்த வேலையாக வங்கிக்கு செல்ல வேண்டியிருப்பதால் அரை நாள்
விடுப்பு”.
பத்து மணி அளவில் அலுவலகம் வந்த எங்கள் நிர்வாக இயக்குனர் என்னை
அவர் அறைக்கு அழைத்து பேசிக் கொண்டிருந்தபோது, அந்த உற்பத்திப் பிரிவு அதிகாரியை அழைக்கச்
சொன்னார்.
“அவர் அரைநாள் லீவு சார். பேங்க் வேலையா போயிருக்கார்” என்றேன்
நான். அவருக்கு கொஞ்சம் முகம் சுருங்கிவிட்டது. ‘நான் வர்றேன்னு சொல்லீருந்தேனே. அப்படியும்
எப்படி லீவு எடுக்கலாம்’ என்று அந்த நண்பரை அலைபேசியில் அழைத்து ‘ஏன் லீவு எடுத்தீங்க’
என்பதாய் ஏதோ பேச ஆரம்பித்து என்னை நோக்கி, ‘உள்ளதான் இருக்காராமே?’ என்றார். நான்
அவர் அனுப்பிய குறுஞ்செய்தியை நிர்வாக இயக்குனருக்குக் காட்டிக் கொண்டிருக்க, அந்த உற்பத்திப்
பிரிவு அதிகாரி உள்ளே வந்தார்.
“நான் லீவுன்னு எங்க சொன்னேன்.. ஏன் இப்படி ராங் இன்ஃபர்மேஷன்
மேனேஜ்மெண்டுக்குக் கொடுக்கறீங்க?’ என்று முகம் சிவக்கக் கேட்டார்.
நிர்வாக இயக்குனர் குறுக்கிட்டு “நீதான்யா மெசேஜ் அனுப்பீருக்க…”
என்று சொல்ல என் மொபைலை வாங்கிப் பார்த்த அவர், “இது எனக்கு ஃபேப்ரிக் இன்சார்ஜ் அனுப்ச்ச
மெசேஜ். HRல இன்ஃபர்ம் பண்ணனுமேன்னு நான் அதை ஃபார்வேர்ட் பண்ணினேன். அதெப்படி நான்னு
நீங்க நினைக்கலாம்?” என்று மறுபடி கேட்டார்.
“சார்.. நீங்க மெசேஜை ஃபார்வேர்ட் பண்ணினா உங்க நம்பர்லேர்ந்துதான்
வரும். வேறொருத்தர் அனுப்ச்சதுன்னு எனக்கெப்படி தெரியும்?” என்று எவ்வளவோ சொல்லியும்
அவர் புரிந்து கொள்ளவே இல்லை.
ஐந்தாறு மாதங்களுக்குப் பிறகு ஒருமுறை என்னிடம் அவர் கேட்டார்.
“நல்ல மொபைல் ஒண்ணு வாங்கணும். சஜஷன் சொல்லுங்களேன்”
“உங்களுக்கா?”
“ஆமாம்”
“ஜி-ஃபைவ்னு ஒரு மாடல் 700-800 ரூவாய்க்கு கிடைக்குது. அருமையா
இருக்கும்”
“800 ரூவாயா? அதுல பேச மட்டும்தான் முடியும்தான் போலிருக்கே”
என்றவரிடம் “வேற.. ஃபோன்ல என்ன பண்ண முடியும் உங்களால” என்று கேட்க ஒன்றுமே பேசவில்லை
அவர்.
** ** ** ** **
22 comments:
நல்லாருக்கு..
@NattAnu
Kalakkal... Antha office experience
//உங்கள் விலைமதிக்க முடியாத நேரத்தை ஒதுக்கி பின்னூட்டமிடுவதற்கு மிகவும் நன்றி!
// இந்த ஒரு காரணத்துக்காவே கமெண்ட் போடுறேன் என்னையும் பிசியா இருக்கேன்னு சொன்னதுக்கு....
“ஜி-ஃபைவ்னு ஒரு மாடல் 700-800 ரூவாய்க்கு கிடைக்குது. அருமையா இருக்கும்”
“800 ரூவாயா? அதுல பேச மட்டும்தான் முடியும்தான் போலிருக்கே” என்றவரிடம் “வேற.. ஃபோன்ல என்ன பண்ண முடியும் உங்களால” என்று கேட்க ஒன்றுமே பேசவில்லை அவர். /////
அப்போ வேற என்ன எதிர்ப்பார்த்திருப்பாரு
//
இதே விஜய் டிவியில் ‘அசத்தப்போவது யாரு’-வில் அசத்திக் கொண்டிருந்து பிறகு சடாரென்று சன் டிவிக்குத் தாவிய, வெடிச்சிரிப்புகளை இடைவிடாது உதிர்க்கும் மதுரை முத்து என்னவானார்?
//
சன் டிவியா நம்பி போனா இதுதான் கதின்னு எல்லாருக்கும் சொல்லிகிட்டு இருக்கார்
இன்று
கதம்பம் 19-04-2012
சீக்கிரம் வீடு கட்ட வாழ்த்துக்கள்.நாங்கள் ஒரு வருடமாக அலைந்து திரிந்து போன மாதம் புது வீட்டிற்கு குடியும் வந்தாச்சு.
படம் ஐந்து நிமிடம் ஓடிக்கொண்டிருந்த போதுதான், எங்களுக்கு விஷயம் புரிந்தது. படத்தில் விஜய் பேர் சூர்யா! //
sema :)))
அவியல் நல்லா இருக்கு.வீட்டு வேலை சீக்கிரம் முடிய வாழ்த்துகள்.அடிக்கடி எழுதுங்கள்.
பின்னூட்டப் பெட்டில எம் பேரைப் பார்த்தா பழைய நாவகமெல்லாம் வந்து சந்தோஷப்படுவீங்களேன்னு இந்த பின்னூட்டத்தைப் போடுறேன் :)
Thanks for spending your Time.
அவியல் அருமை..!!
அருமை நல்லாருக்கு.. உங்கள் பதிவு படித்து ரெம்ப நாட்கள் ஆகிவிட்டது...
நல்லாயிருக்கு
@vivaji
@vivasaayi.blogspot.com
அருமை..!!!
மொபைல் கேட்டவருக்கு மத்த சங்கதியும் தெரிஞ்சிருக்கும்போல...!!!
ஏன் தான் இப்படி விஜய் சாதித்த விடயம் என்று சின்னவர்களையும் கடுப்பூ ஏத்துகின்றார்! ரசித்தேன்.
பாவம் மதுரை முத்து டைனாமிங் கமடியாளர்.
மொபைல் மேட்டர் சூப்பர்... எனக்கும் ஒரு முறை இதே போல் நடந்திருக்கிறது... :))
அசத்தப்போவது யாரு’-வில் அசத்திக் கொண்டிருந்து பிறகு சடாரென்று சன் டிவிக்குத் தாவிய, வெடிச்சிரிப்புகளை இடைவிடாது உதிர்க்கும் மதுரை முத்து என்னவானார்?
ஆதித்யா டிவி இல் ஒப்புக்கு சப்பாக வந்து போகிறார்...
நல்லாவே கலக்குறீங்க.
நல்லாவே கலக்குறீங்க. தொடரட்டும் இப்பணி.
Uruku ellam velicham tharumam Villaku, Annal avan veetuku matum tharvillai Velicham!!!!!
Post a Comment