Tuesday, September 11, 2012

அவியல் 11/09/2012

ழுதுவது குறைந்துவிட்டது. புதுப்படங்களோ, பார்ப்பதே இல்லை. ஆனாலும் இந்த மிஷ்கின்-தான் ஏதோ அகிரா குரோசோவா ரேஞ்சுக்கு பேட்டி எல்லாம் கொடுத்தாரே என்று நம்பி, வித்தியாசமாக இருக்கும் என்று ‘முகமூடி’ படத்துக்குப் போய் ஏமாந்துவிட்டேன். ரொம்ப நாள் கழித்துப் பார்த்த தமிழ்ப்படம் - இப்படி நோகடித்துவிட்டது!

மிஷ்கினின் எந்தப் படத்தையும் தியேட்டரில் பார்த்ததில்லை. அஞ்சாதே, சித்திரம் பேசுதடி, யுத்தம் செய், நந்தலாலா எல்லாவற்றையும் டிவியில்தான் பார்த்தேன். அதுவும் யுத்தம் செய் பார்த்துவிட்டு ‘செம டைரக்‌ஷன்.. எப்படி மிஸ் பண்ணினோம்’ என்று வேறு நினைத்தேன்.

முகமூடிக்கு வருவோம்.


படம் ஆரம்பிச்சதும் ஒரு போலிஸ் ஜீப் வருது. அப்போது எனக்கு ஒரு ஃபோன். எடுத்துட்டுப் போய், கொஞ்சநேரம் கழிச்சு வந்து உட்கார்ந்து மனைவிகிட்ட ‘என்ன ஆச்சு’ன்னு கேட்டேன். “அந்த போலீஸ் ஜீப் ரைட்ல உள்ள போச்சு. இப்ப ஒரு குப்பை வண்டி வந்துட்டிருக்கு’ என்றார். ‘என்ன விளையாடறியா? இவ்ளோ நேரம் பேசிட்டு வர்றேன்…’ என்றேன். ‘சத்தியமாங்க’ என்றார்.

அப்பறம்தான் தெரிந்தது. அவர் சொன்னது உண்மைதான். சென்னையில் ஷூட்டிங் என்றால் கோயம்புத்தூரிலிருந்து கேமரா வைத்துவிடுகிறார்கள்.

இதுபோன்ற பல எரிச்சல்கள். வில்லன் என்கிற பேரில் வீட்டுக்கு வீடு ஆணியடிக்க காண்ட்ராக்ட் எடுத்த மாதிரி நரேன் சுத்தியலோடே சுத்துகிறார். சேஸிங் என்ற பெயரில் அரை மணிநேர நீளத்துக்கு ஒரு சீன். சிறுவர்கள் விளையாடும் அட்டாக் விளையாட்டு போல அடிக்கடி பல கேரக்டர் பேஸ்த் அடித்ததுபோல ஸ்டில்லாக நிற்கிறார்கள்.

திராபை!

முக்கியக் குறிப்பு: அந்த டாஸ்மாக் பாடலில் ‘தன்னானா’ என்ற குரல் வரும்போதெல்லாம் என் விழிகள் சாருவின் விரல்களைத் தேடின.

----------------

நண்பர் ஒருவருக்கு, வெளிநாட்டிலிருந்து வந்த நண்பர், நம் கலாச்சார வழக்கப்படி ஒரு சரக்கு பாட்டிலை பரிசளித்துள்ளார். இவரும் வாங்கி, இரண்டு லார்ஜ் அடித்துவிட்டு பாட்டில் ;லேபிளை ஆராய்ந்திருக்கிறார். 'For Overseas Export Only' என்று போட்டு, பொடி எழுத்தில் ’Distilled, blended & bottled by RADICO KHAITHAN LIMITED, RAMPUR (U.P), Made in India.’ என்றிருந்ததாம்!


-------------

எந்தப் படங்களின் ஆடியோ சிடியும் வாங்கவே பயமாக இருக்கிறது. 5க்கு இரண்டு கூட தேறமாட்டேனென்கிறது. முகமூடி - வாயமூடி சமீபத்தில் கவர்ந்த, பலமுறை கேட்ட பாடல்.

இணைய சர்ச்சைகளுக்கு நடுவில் நீதானே என் பொன்வசந்தம் கேட்க நேர்ந்தது.

‘முதன்முறை பார்த்த ஞாபகம்’ - பாடலின் வயலின் ஆதிக்கம் செமயாக இருந்தது. ‘சாய்ந்து சாய்ந்து’ - குட்டி மெலடி. ‘காற்றைக் கொஞ்சம்’ ஹிட்டடிக்குமென்றாலும் ‘என்னோடு வாவா என்று சொல்லமாட்டேன்’ டிபிகல் இளைஞர்களின் பாடல். கேட்கக் கேட்க கவர்ந்து, செம ஹிட்டடிப்பது உறுதி என்று கூறுகிறது. நா.முத்துகுமாரின் வரிகள் - ஓஹோ ரகம்.

(அதிஷா - யுவா: இந்தப் பத்திக்கு நோ கமெண்ட்ஸ்னு மட்டும் போடுங்கய்யா...)

----------

இமாம் அண்ணாச்சி கலக்குகிறார். சொல்லுங்கண்ணே சொல்லுங்க-வில். மனதுவிட்டு சிரிக்க முடிகிறது.

தமிழ் மாதங்கள் கேட்க - ஒரு பெண் சொல்கிறார்:  “ஜனவரி, ஃபிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜுலை, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, டிசம்பர்.....” என்று அடுக்குகிறார்.

தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர் யார் என்ற கேள்விக்கு, “பா.விஜய், வைரமுத்து, திருவள்ளுவர் என்று பதில்கள் சிரிக்காமல் வந்து விழுகிறது.

தாயின் மணிக்கொடி பாரீர் பாடலை எழுதியவர் பரிமேலர் (அப்படித்தான் சொன்னார்கள்), இந்தியாவின் வடக்கே இருப்பது கோயமுத்தூர், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பாடல் நாலாயிர திவ்ய ப்ரபந்தம் நூலில் உள்ளது - இப்படி நாமே எதிர்பார்க்காத பதில்கள். தெரியாது என்று சொல்வதற்கு பதில் இப்படியெல்லாம்கூட சொல்வார்களா என்று நினைக்கவைக்கும் பதில்கள்.

ஆனால், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் சுதாரித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.  வெகுசீக்கிரமே போரடிக்கக் கூடிய வாய்ப்புகள் இருப்பதால்.. அவர்கள் கொஞ்சம் மாற்றி யோசிக்க வேண்டியது அவசியம்.

(இணையத்தின் ஒரே பயன் இதுதான். சகட்டுமேனிக்கு யாருக்கு வேணா அட்வைஸ் பண்லாம்!)

வர்ட்டா!

---

16 comments:

Cable சங்கர் said...

முகமுடி விமர்சனம் செம..:)

கோவை நேரம் said...

ரொம்ப நாள் கழிச்சு வரீங்க போல...

ravi said...

சிங்கம் களத்துல இறங்கிடிச்சு. :)

மட்டை ஊறுகாய் said...

http://mattaioorukai.blogspot.com/2012/09/blog-post.html

M.G.ரவிக்குமார்™..., said...

அட!மீண்டும் எனக்குப் பிடித்த அவியல் வெகு நாட்களுக்குப் பின்!நன்றி தலைவரே!

Nat Sriram said...

முகமூடி விமர்சனம் நச்..அந்த ஸ்டில்/பேஸ்த் விஷயம் மிக ஆப்வியஸாக தெரிந்தது.

(உங்கள்) எழுத்து எங்கும் போய்விடவில்லை :)

Nat Sriram said...
This comment has been removed by the author.
Thamira said...

இப்போது டிவியில் பார்க்கும் ஒரே நிகழ்ச்சி, சொல்லுங்கண்ணே மட்டும்தான். அதுவும் சொல்பவர்களின் பதிலை இன்னும் இட்டுக்கட்டி நீட்டிமுழக்கும் இமானில் குரல் மற்றும் மாடுலேஷன் இன்னும் அழகு.

அமுதா கிருஷ்ணா said...

உங்கூட்டுல 5 மாதத்திற்கு ஒரு முறை தான் அவியல் செய்வாங்களோ. ஆனாலும் அவியல் அருமை.

சுசி said...

அவியல் நல்லாருக்கு :)

”தளிர் சுரேஷ்” said...

பல்சுவைப் பதிவு! அருமை! இமான் அண்ணாச்சி நிகழ்ச்சி நானும்பார்த்துள்ளேன்! செம கலக்கல்!

இன்று என் தளத்தில்!
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 8
http://thalirssb.blogspot.in/2012/09/8.html


பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

we will meet!!! not with நம் கலாச்சார வழக்கம் :) but with lot of world wovies.

//'For Overseas Export Only' என்று போட்டு, பொடி எழுத்தில் ’Distilled, blended & bottled by RADICO KHAITHAN LIMITED, RAMPUR (U.P), Made in India.//

அதுசரி அப்போ அது free trade zone ல வாங்கியது போல..

இரசிகை said...

sollunganne sollunga...

naangalum paakirom.
kudumbamaa sirikka mudiyuthulla.

aug.15th annaikku paatheengalaa??
makkal rembave pathil sonnaanga,
oru kashttamum undaakum.

ok..

unga pathivu vazhamai pol swaarasiyam
vaazhthukal parisal.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

நரேனின் வித்தியாசமான நடிப்பு ரசிப்போடு இருந்ததே? அதுவும் அந்த அன்ன நடை !

கொங்கு நாடோடி said...


//'For Overseas Export Only' என்று போட்டு, பொடி எழுத்தில் ’Distilled, blended & bottled by RADICO KHAITHAN LIMITED, RAMPUR (U.P), Made in India.//

ஒரு ஆளுக்கு இரண்டு பாட்டில் தான் டுட்டிப்ரீ, எவளவு நண்பர்கள், உறவினர்கள் சமாளிக்க வேண்டி உள்ளது. இது எல்லாம் வெளிநாட்டுலே இருந்து வரவனுகுதன் கஷ்டம் புரியும். அவன் என்னக்கு பாட்டில் கோடுகளே, கிப்ட் வாங்கி வரலனுட்டு... இப்போ கொண்டுவர போட்டியையும் ஒன்ன கொறசுட்டான். ஏன்டா ஊருக்கு வரம்னு தோணும் ஒவ்வொரு தடவையும்...

ஏன் உள்ளுறு சரக்கு மட்டமா என்ன? ஊருக்கு வருவது எல்லோரையும் பார்க்க பேச, சந்தோசமா இருக்க. கிப்ட் சொமந்து வருவதற்கு இல்லை.

கடந்த 15 வருடங்களில் கிப்ட், பாட்டில் கொடுத்து கேட்ட பெயர் வந்கினதுதன் மிச்சம், அதுக்கு ஒண்ணுமே கொண்டுவரமே கொடுகமே கெட்டபேர் வாங்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

Unknown said...

super...