எழுதி நாளாகிறது. லேப்டாப் இன்மை, நெட் கார்ட் பேலன்ஸ் இன்மை, கரண்ட் இன்மை என்று பல காரணங்கள் சொன்னாலும் - சோம்பேறித்தனம்தான் எல்லாவற்றையும் முந்திக் கொண்டு முதலிடம் பெறும் காரணியாக இருக்கிறது. கிட்டத்தட்ட, காணாமல் போன ப்ளாக்கராகிவிட்ட நிலையிலும், அவ்வப்போது அழைத்துப் பேசும் சிலரது அன்பைச் சம்பாதித்திருப்பது, வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொண்டிருக்கிறது.
--------------------
‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ படத்தை மிஸ்
பண்ணிடாதீங்க என்று பலரும் சொல்லவே, வியாழன் இரவு திருப்பூர் வாரணாசி
தியேட்டருக்கு சென்றிருந்தேன். காசி, லிங்கம், வாரணாசி என்று மூன்று தியேட்டர்கள்.
9.20க்கெல்லாம் போய் நிற்க, 9.45க்குதாங்க டிக்கெட் தருவாங்க’ என்றார்கள். நண்பர் முரளியும் வந்திருந்தார். மற்ற இரண்டு தியேட்டர்களில்,
‘தொடாம விடமாட்டேன்’ (ஆமாங்க.. படம் பேருதான்) ஒன்றிலும், 'லைஃப் ஆஃப் பை’ மற்றொன்றிலும் போட்டிருந்தார்கள்.
9.45க்கு
டிக்கெட் கொடுக்கும் மகானுபாவன் வர, கவுண்டரில் கை நீட்டி ந.கொ.ப.கா-வுக்கு
டிக்கெட் கேட்டதும், “அந்தப் படம் நைட் ஷோ இல்லைங்க. சிவாஜி 3-டிக்கு வேலை
நடந்துட்டிருக்கு” என்றார் கூலாக. “ஏங்க.. வெளில எழுதிப்
போட்டிருக்கலாம்ல? வேற தியேட்டருக்காவது போயிருப்போம்ல?” என்று கேட்க, “எனக்கே இப்பதாங்க தெரியும்” என்றார்.
கொள்கையாவது
மண்ணாவது, திருட்டு டிவிடிக்கு என் நிபந்தனையற்ற ஆதரவு பெருகிக் கொண்டே போகிறது.
இந்தப் பத்தியைப் படிக்கும் கேபிள் சங்கர் போன்ற, திரைத்துறையினரிடம் செல்வாக்கு பெற்றிருக்கும் நண்பர்கள் இதற்கான
பிராயச்சித்தமாக, தயாரிப்பாளரிடம் இந்தப் புகாரைத் தெரிவித்து, நகொபகா படத்தின்
தெளிவான திருட்டி டிவிடி-யை நஷ்டஈடாகப் பெற்றுத் தருவார்கள் என்று நம்புகிறேன்.
------------
படத்துக்கு வந்த
முரளி இன்னொரு விஷயம் சொன்னார். இதே தியேட்டருக்கு ‘சன் ஆஃப் சர்தார்’ பார்க்க, நண்பருடன் வந்தாராம். “இதுவரைக்கும் 7
பேர்தான் டிக்கெட் கேட்டிருக்காங்க. மினிமம் 15 பேர் வந்தாத்தான் படம்” என்று சொல்லியிருக்கிறார்கள். ஆட்கள்
வராததால், கேன்சலாகவே, வேறுவழியில்லாமல் அதே காம்ப்ளக்ஸில் ஓடிய ‘அம்மாவின் கைபேசி’ படத்துக்குப் போயிருக்கிறார். படம் போட்ட இருவதாவது
நிமிடத்தில் நவதுவாரங்களிலும் ரத்தம் வர, தட்டுத்தடுமாறி எழுந்து, நைசாக பக்கத்து
தியேட்டரில் நுழைந்திருக்கிறார்கள். அமர்ந்திருந்த தியேட்டர் ஊழியர்
கேட்டிருக்கிறார்...
“என்ன இந்தப்
பக்கம்?”
“மன்னிச்சுக்கோங்க. தாங்கமுடியல. இந்த
தியேட்டர்ல உட்கார்ந்துக்கறோம்”
“என்ன? அம்மாவின் கைபேசியா?”
“ஆமாங்க”
“அங்கயாச்சும் இருவது நிமிஷம்
தாக்குப்பிடிச்சீங்க. இங்க ரெண்டே நிமிஷத்துல தெறிச்சு ஓடுவீங்க. பேசாம அங்கயே
போங்க” என்றிருக்கிறார்.
அந்தத்
தியேட்டரில் ஓடிய படம் போடாபோடி.
-------------------------
இந்த இடத்தில்
அதே போடாபோடி பற்றி கார்க்கி அடித்த கமெண்ட்:
நண்பன் ஒருவனின் தாயாருக்கு அறுவை சிகிட்சை. சிகிட்சை முடிந்து நலமாயிருக்கும்
அவரைக் காணச் சென்றிருந்தோம். நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னான்: “மேஜர்
ஆபரேஷன் மாப்ள. பயமுறுத்தீட்டாங்கடா. 12 மணிக்கு ஆபரேஷன் தியேட்டர் போனவங்க, நாலரை
வரைக்கும் அறுவை சிகிட்சை பண்ணாங்க” என்றான். டக்கென்று சொன்னான் கார்க்கி:
“சிம்புவே பரவால்ல. 2.30 மணிநேரம் அறுத்துட்டு விட்டுட்டாரு!”
-------------------------------------
அலுவலக நண்பர் அவர். B Tech ஃபேஷன் டிசைனிங்
முடித்தவர். அவரைக் காண, அவரது கல்லூரி ப்ரொஃபசர் இருவர் வந்திருந்தனர். ரொம்பவும்
பவ்யமாக பேசிக் கொண்டிருந்தவரை, ஒரு ப்ரொஃபசர் வியப்போடே பார்த்துக்
கொண்டிருந்தார். அவர்கள் போனதும் கேட்டேன். “என்னப்பா.. அந்த ப்ரொஃபசர் அப்டிப்
பார்த்துட்டிருந்தாரு உன்னை?”. அதற்கு நண்பர் சொன்ன சம்பவம் நகைக்க வைத்தது.
அந்தப் ப்ரொஃபசருக்கும், இவருக்கும் ஏழாம்
பொருத்தமாம். காரணம் ஒரு சம்பவம் என்றார்.
ஃபேஷன் டிசைனிங் என்பதால், ஃபேண்ட் தைத்துக்
கொண்டு வரச்சொல்லி, ப்ராக்டிகலில் சொல்லியிருக்கிறார்கள். எல்லாரும் தைத்து
வைத்திருக்க, நண்பரும் வைத்திருக்கிறார். எல்லாரையும் பாராட்டிக் கொண்டே வந்தவர்,
நண்பர் வைத்திருந்த ஃபேண்டை பாராட்டிக் கொண்டே எடுத்திருக்கிறார். டக்கென்று,
ஃபேண்டை வீசியெறிந்து ‘கெட் அவுட்’ என்று திட்டினாராம். ‘அதற்குப் பிறகு, அவர் க்ளாஸ் என்றாலே எனக்கு ஆகாது’ என்றார்.
‘அப்டி என்னய்யா இருந்த்து அந்த ஃபேண்ட்ல?” என்றேன்.
நண்பர் சொன்னார்: “அதை தைச்சு வாங்கின கடையோட பில்லு”
---------------------------
சிறுகதைப்போட்டி எப்போது என்று கேட்டு குவியும் மெயில்களால் ஜி மெயில் கெப்பாசிட்டி இன்றித் தவிக்கிறது. (யாருப்பா சிரிக்கறது?) விரைவில் அறிவிப்பு வெளிவரும்.
------------------------------
விஸ்வரூபம் படத்தை டிடிஹெச்-சில் வெளியிடுவதற்கு எனது ஆதரவு. (ஒன்ன எவன் கேட்டான்?) தியேட்டர்காரர்களின் அட்டூழியத்தால் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன். தவிரவும், ‘திருட்டு விசிடியையெல்லாம் உங்களால் ஒழிக்க முடியாது. நான்கைந்து வருடங்களில் எல்லார் வீட்டிலும் டிவிடி இருக்கும் என்று பற்பல வருடங்களுக்கு முன்னே சொன்னவர் கமலஹாசன். அதுதான் இன்று நடந்துகொண்டிருக்கிறது. ஆகவே - அட்வான்ஸாக சிந்திப்பதில் கமல் எப்போதுமே முன்னோடி.
இன்னொரு விஷயம்: டிடிஹெச்-ல் பார்க்க ஆயிரம் ரூபாய் கட்டணமாம். நான் சத்தியமாக தியேட்டரில் போய்த்தான் பார்ப்பேன். தியேட்டர்காரர்கள் கவலைப்படவேண்டாம். ஆனால் - இந்த முன்னேற்றத்தை வரவேற்றே ஆகவேண்டும். வேறு வழியே இல்லை.
---------------------
ஒருவழியாக, இருவிழியாக சனிக்கிழமை இரவு நகொபகா படம் பார்த்தேன். அருமையான வசனங்கள், கதைக்களன். ஆனால் நடுவுல கொஞ்சம் தூக்கம் வந்து தொலைத்துவிட்டது. பாலாஜி & டீம் செய்வன திருந்தச் செய்திருக்கிறார்கள். சபாஷ்! ஆனாலும் - வெங்கட் பிரபு டீமிடம் போயிருந்தால் இன்னும் க்ரிஸ்பாக கொண்டுபோய் இருப்பார்கள் என்ற எண்ணம் வந்ததைத் தவிர்க்கமுடியவில்லை.
--------------------
இன்னொரு விஷயம்: டிடிஹெச்-ல் பார்க்க ஆயிரம் ரூபாய் கட்டணமாம். நான் சத்தியமாக தியேட்டரில் போய்த்தான் பார்ப்பேன். தியேட்டர்காரர்கள் கவலைப்படவேண்டாம். ஆனால் - இந்த முன்னேற்றத்தை வரவேற்றே ஆகவேண்டும். வேறு வழியே இல்லை.
---------------------
ஒருவழியாக, இருவிழியாக சனிக்கிழமை இரவு நகொபகா படம் பார்த்தேன். அருமையான வசனங்கள், கதைக்களன். ஆனால் நடுவுல கொஞ்சம் தூக்கம் வந்து தொலைத்துவிட்டது. பாலாஜி & டீம் செய்வன திருந்தச் செய்திருக்கிறார்கள். சபாஷ்! ஆனாலும் - வெங்கட் பிரபு டீமிடம் போயிருந்தால் இன்னும் க்ரிஸ்பாக கொண்டுபோய் இருப்பார்கள் என்ற எண்ணம் வந்ததைத் தவிர்க்கமுடியவில்லை.
--------------------