பொறந்துடுச்சு!
2012 மாதிரியான சிக்கலான வருஷம் இருந்ததில்லை. (இனி இருக்கும்டா-ங்கறது கேட்குது) . புதுவருஷம்கறது ஒரு ரிஃப்ரெஷ்தான். மத்தபடி அதே வட்டி, வாடகை, திரி, கிஸ்தி எல்லாமே தொடரத்தான் செய்யும்.
நான் சொல்ல வந்தது வேற. இந்த கி.பி.2013, இன்னைக்காக வெச்ச தலைப்பு இல்ல. சுயபுராணம்.
கீழ இருக்கற ஸ்டில் பாருங்க. பெரிசு பண்ணிப் படிச்சுப் பாருங்க.
நான் எழுதி 30.09.1993 குமுதத்துல வந்தது.
அந்த கி.பி. 2013-ஏ வந்தாச்சு. அதை எழுதறப்ப- நான், இப்படி கணினில எழுதுவேன், ப்ளாக் ஆரம்பிச்சு உங்களையெல்லாம் டார்ச்சர் பண்ணுவேன்னெல்லாம் கற்பனை கூட பண்ணிருக்க மாட்டேன். எல்லாம் விதி! ஹும்!
அதை விடுங்க.
2012 - கொடுமையான கடுமையான வருஷம். கேட்ட பலரும் இதையேதான் சொல்றாங்க.
சரி.. அப்படி இருந்தும் வாழ்க்கையை ரசிக்கறது எப்படி? சொல்றேன் கேளுங்க.
----
எங்க ஆஃபீஸ் லஞ்ச் டைம்ல அஞ்சாறு பேர் ஒக்கார்ந்து பேசிகிட்டிருந்தோம். அதுல ஒருத்தர் கறார் ஆசாமி. டீ, காஃபி சாப்பிடமாட்டார். சினிமா பத்தி அதிகமா பேசமாட்டார். சிடுமூஞ்சின்னு சொல்ல முடியாது ஆனா.
சமீபத்திய சினிமாக்கள் பத்தின பேச்சு வந்தப்ப நான் கேட்டேன்:
“யோவ்.. நீ டீ, காபிக்கே வரமாட்ட. சினிமால்லாம் பார்க்கற பழக்கம் உண்டா?கடைசியா தியேட்டர்ல பார்த்த படம் என்ன?”
அவர் கொஞ்ச நேரம் யோசித்து, ‘ஜீவா நடிச்ச படம். பேர் சரியா தெரியல..” என்று யோசித்தார்.
நான், ‘ஈ’யா என்றேன். (‘நான்’ பக்கத்துல கமாவைக் கவனிங்க. ‘நான் ஈ’ அல்ல)
‘இல்லைங்க.. என்று என்னென்னமோ சொன்னார், ஜீவா அதச் செய்வார் இதைச் செய்வார் என்று கிட்டத்தட்ட கமர்ஷியல் படங்களில் ஹீரோ செய்யும் எல்லாவற்றையும் சொன்னார். நான் “வேற எதுனா சொல்லு” என்றதற்கு, ‘அந்தப் படத்துல ஜீவா, ஹீரோயினை லவ் பண்ணுவார்” என்றார். நான் கடுப்பை மறைத்துக் கொண்டே, ‘ஹீரோயின் பேர் என்ன?’ என்றேன். என்னமோ லதாவோ, சுதாவோ சொன்னார்.
“அந்தப் பேர்ல யாருய்யா ஹீரோயின்?” என்று கேட்டதற்கு, ‘படத்துல ஜீவா அப்டித்தான் கூப்டாரு” என்றார். இது வேலைக்காகாது என்று விட்டுவிட்டு கேட்டேன்.
“சரி அதை விடு. அப்ப, நீ புதுப் படமெல்லாம் பார்க்கறதே இல்லையா?”
“ஓ.. பார்ப்பேனே..”
“எப்படி?”
“டி.வி-லதான்”
”டி.வி.லயா? அது வந்து ஆறேழு மாசம் கழிச்சுத்தானே போடுவாங்க? நாங்கேட்கறது புதுப் படம்”
“ஆமாங்க புது படம்தான் சொல்றேன்” என்று சொல்லிவிட்டு ஒரு புது படம் பேர் சொல்லி, ‘அதக்கூட போன வாரம் பார்த்தேன்’ என்றார்.
“ஓ..திருட்டு டிவிடில பார்த்தேன்னு சொல்லு”
“என்னது திருட்டா? போய்யா யோவ்.. காசு குடுத்து வாங்கின டிவிடி. திருட்டு டிவிடியாம்ல” என்றார்.
கூட இருந்தவர்களெல்லாம் சிரிக்கவே, அவர்களையும் ஒரு மாதிரி பார்த்து, முன்னைவிடவும் சீரியஸாக, “நெஜமாய்யா. காசு குடுத்துதான் வாங்குவேன். அதும் மூணு பட டிவிடி அம்பது ரூவா தெரியுமா?” என்றார்.
அதையும் ரொம்பவே சீரியஸாகச் சொன்னார். நாங்களெல்லாம் கொஞ்ச நேரம் திருட்டு டிவிடி என்றால் என்ன என்று விளக்கிச் சொல்லியும் அவர் கேட்டபாடில்லை.
“எங்க - என்ன நடக்குதுன்னெல்லாம் எனக்குத் தேவையில்லை. நான் அத காசு குடுத்துதான் வாங்கறேன். அத திருட்டு-ன்னு சொல்றத ஏத்துக்க முடியாது. நான் வாங்கற எல்லாத்தோட ரிஷிமூலம் நதிமூலம் பார்த்தா நான் வாங்க முடியும்?” என்று முடித்துக் கொண்டார்.
--
கொஞ்சம் ஆராய்ந்தால், நம்மைச் சுற்றி இப்படி பல சுவாரஸ்ய மனிதர்களும், சம்பவங்களும் இருக்கத்தான் செய்யும். (மெசேஜ் சொல்ட்டனா?)
அதை உணர்ந்து, ரசித்து வாழ்ந்தால், இந்த நாள் மட்டுமல்ல எல்லா நாளும் இனிய நாள்தான். :-)
8 comments:
இந்த வருட கணக்கை ஆரம்பிச்சிடீங்க!!தொடருங்கள்!!!புத்தாண்டு வாழ்த்துகள்
சார் வழக்கம்போல் நகைச்சுவையாக இருந்தது சார் நீங்க 93 லேயே பத்திரிகையல எழுதுனது இந்த பதிவுக்கு அப்புறம் தான் தெறித்து சூப்பர் சார் ஆமா ஒரு சந்தேகம் இப்ப விடல யாரு சமையல்
புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!
:)) hahaha...
அருமையான பதிவு... நன்றி.... தங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் ('க்' வராதுல்ல?)
2012--ல் 12 பதிவு எழுதின மாதிரி 2013-ல் 13 பதிவா? புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும்.
:)
happy new year..parisal
புத்தாண்டு வாழ்த்துகள்
Post a Comment