கடல் படத்தின் மிக ஹிட்டான ஒரு பாடல் ‘நெஞ்சுக்குள்ளே.. ஒம்ம முடிஞ்சிருக்கேன்…’. முதன்முதலில் அஃபீஷியலாக இந்த படத்தின் இந்தப் பாடலைத்தான் வெளியிட்டார்கள். இணையம் முழுவதும் பரவி, இணையம் அல்லாத இடத்திலும் பரவி சக்கை போடு போட்டது நெஞ்சுக்குள்ளே பாடல்.
’லப்பரு வளவிக்கெல்லாம் சத்தமிட வாயில்லையே’ இந்த வரிகள் சிலரை வதைத்தது, ‘ச்சே.. வைரமுத்துதானே.. அவரால் மட்டும்தான் இப்படி கதாபாத்திரத்தோடு ஒன்றி அந்த வட்டார வழக்கிலேயே எழுதமுடியும்’ என்றார்கள். ஆம். வைரமுத்துதான். அவரே ட்விட்டரில் இந்தப்பாடலை பகிர்ந்தார், ‘காசநோய்க்காரிகளும் கண்ணுறங்கும் வேளையிலே ஆசநோய் வந்தமக அரை நிமிசம் தூங்கலியே’ –இந்த வரிகளை தாறுமாறாகப்பேசிக்கொண்டார்கள்.
இரண்டொரு நாட்களுக்கு முன் அலுவலக விஷயமாக வெளியூர் சென்றிருந்தேன். வெளி மாநிலம். அவர்களுக்கு தமிழ் தெரியாது,. ஆனால் மணிரத்னத்தை தெரியும். கடல் ரிலீஸ் என்று பேச்சு அடிபட்டதும், “அந்த ‘நெஞ்சுக்குள்ளே’ பாடல் அதுலதானே?” என்கிறார்கள்.
முதல் சரணம் முடிந்ததும் ரகுமானின் ‘ஏஹேஹே.. நாநா’ அவர்களை ஈர்த்திருக்கலாம். மொழி தெரிந்தவர்களுக்கோ.. ‘ஏலே இளஞ்சிறுக்கி’ கவர்ந்திருக்கலாம்.
அந்தப் பாடல் யாருக்காகப் படமாக்கப்பட்டது மணிரத்னம் அவர்களே? படத்தில் அர்ஜூனைக் காதலிப்பவராக வருகிறார் லக்ஷ்மி மஞ்சு, மனதால் அர்ஜூனைக் காதலிக்கிறார். அவர்தான் இந்த ‘லே..’ வழக்கைப் பயன்படுத்துகிறார். இந்தப் பாடல் அவரது கேரக்டருக்காக உருவாக்கப்பட்டதுதான். ஐயமில்லை. அந்தப் பாடல் வரிகளும் அதைத்தான் சொல்கிறது.
ஆனால்..

ஆனால்.. படத்திலோ… கொஞ்சம் கொஞ்சம்தான் அந்தப் பாடல் காண்பிக்கப்படுகிறது. மாண்டேஜாக. யாருக்கு? கௌதமின் நாயகி துளிசிக்காக!
துளசி, இந்தப் படத்தில் நர்சிங் படிக்கும் மாடர்ன் பெண்ணாகத்தான் காட்டியிருக்கிறீர்கள். பிரசவம் பார்க்கப்போகும்போது கூட ஸ்லீவ்லெஸ்ஸில் செல்லுமளவு மாடர்னாக. அவர் ஒரு காட்சியிலும் இந்த ‘வாலே.. போலே..’ வசனம் பேசியவரில்லை. அவருக்கான மாண்ட்டேஜில் இந்த’ நெஞ்சுக்குள்ளே’ பாடலைப் புகுத்தியிருக்கிறீர்கள்.
இதை என்னால் எப்படி ஒன்றிப் பார்க்கமுடியும்? காட்சிமுழுவதும் ஸ்டைலிஷாகப் பேசும் ஒரு பெண், “வண்ணமணியாரம்… வலதுகை கடியாரம்’ என்று பாடுவதாகக் காட்டினால் எப்படி என்னால் பொருத்திப் பார்க்கமுடியும்?
படத்தில் கௌதம், இந்தத் துளசியை விட்டுப் பிரிவதே இல்லை. அப்படியிருக்க, ‘நீர் போனபின்னும் நிழல்மட்டும் போகலியே போகலியே’ என்ற வரிகள் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்னுள்?
என்ன காரணத்தினாலோ, அர்ஜுனின் காதலியாக நடித்தவரின் காட்சிகள் வெட்டுப்பட்டுவிட்டன. எனின், அந்தப் பாடல் ஹிட் என்பதால் ‘அதை இந்த நாயகி (துளசி)க்குப் பொருத்தலாம்’ என்ற எவரோ ஒருவரின் யோசனைக்கு நீங்கள் தலை சாய்த்திருக்கிறீர்கள். அப்படி ஒத்துக் கொண்ட நீங்கள், இந்தப் படத்தின் கடுமையான விமர்சனத்தையும் ஒத்துக் கொண்டே ஆகவேண்டும்.
உயிரே படத்தை ஏதோ ஒரு B செண்டரில் பார்க்கிறீர்கள். நான்காவது சீனில் உங்கள் சீட்டுக்கு முன் அமர்ந்திருந்த ஒரு பெரியவர் முண்டாசைக் கழட்டி உதறியபடி, ‘என்னா படமெடுக்கறானுக’ என்று வெளியே போகிறார். ‘என்றைக்கு அவரை என்னால் திருப்திப்படுத்த முடிகிறதோ அன்றைக்கு நான் ஒப்புக் கொள்வேன் நானும் ஒரு இயக்குனர் என’ என்று சொல்லிவிட்டு நீங்களும் வெளியேறுகீர்கள்.
நீங்கள் ஒரு பேட்டியில் சொன்னவிஷயம் இது.
படமெல்லாம் அவ்வளவு நேர்த்தியாய் தரவேண்டாம். ஒரு பாடலை தகுந்த காரணகாரியங்களோடுத் தரத்தவறியிருக்கிறீர்கள். இந்தப் பாடலை நீங்கள் வெட்டியிருந்தால்கூட நான் வருத்தப்பட்டிருக்கமாட்டேன்.
நான் கடவுள் படத்தின் ஆகச்சிறந்த பாடலாக (அதன் இசைக்காக) – ‘அம்மா உன் பிள்ளைநான்’ பாடலை நான் கூறுவதுண்டு. இன்றைக்கும் அந்தப்பாடலைக் கேட்டு சிலிர்த்தேன் நான். ஆனால், அந்தப் பாடல் , படத்தில் இல்லை.
இந்தப் பாடலையும், அவ்வாறே நீங்கள் நீக்கியிருக்க வேண்டும். காரணம், அந்தப் பாடல் பெற வேண்டிய புகழையெல்லாம் அதைக் கேட்ட காதுகள், தந்துவிட்டன. இப்போது கண்களோ – அதை நீங்கள் வலிந்து புகுத்திய விதம் கண்டு - ஜீரணிக்க முடியாமல் அழுதுகொண்டிருகின்றன.
இதை வெறும் விமர்சனமாக ஒதுக்க உங்களுக்கு முழு உரிமையுண்டு. ஆனால், நீங்கள் உங்களையே சீர்தூக்கிப் பார்க்கவேண்டிய தருணமிது!

ப்ளீஸ் மணி... உங்களிடம் நாங்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறோம்.
10 comments:
மிகச் சரியாச் சொன்னீரு லே, மணிரத்னம் வர வர மினிரத்னமாயிட்டு வறாரு வே.....
Excellent!
amas32
எத்தனைபேர் இதைக் கவனித்தார்கள் என்று தெரியவில்லை! Very Good !!
ஆராய்ச்சி அருமை.
ஆராய்ச்சி அருமை.
Well said! Not many would have noticed or thought of commenting!
விமர்சனம் அருமை நண்பா..இப்டி நான் சொல்ல நினைக்குறது எல்லாம் சொல்லிட்டா..நான் என்னத்த சொல்றதாம்? # சம்முவம்..விட்ரா வண்டிய..! @kattathora

அட ஆமால்ல.. எத்தனை நுணுக்கமாக கவனித்துள்ளீர். கிரேட்

Post a Comment