Tuesday, May 14, 2013

மெகா ட்வீட் அப் 2013 - கோவை

வரலாறு முக்கியம் என்பதால் இதை வலையில் பதிகிறேன்.

· #TNMegaTweepUp என்னும் தமிழ் ட்விட்டர்களின் வருடாந்திரச் சந்திப்பு நிகழ்வொன்று @ExpertSathya என்னும் சக ட்விட்டரால் ஆரம்பிக்கப்பட்டு, சென்ற வருடம் முதல் - நிகழ்ந்து வருகிறது.

· 2012 -மே 13ல் சென்னையில் நிகழ்ந்தது. அப்போதே, அடுத்த வருடம் கோவையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. சொன்னது போலவே மே 12 2013ல் கோவையில், பேருந்து நிலையம் பின்புறம் உள்ள மங்களா இண்டர்நேஷனலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

. கிட்டத்தட்ட ஒரு கல்யாணநிகழ்வைப் போலவே, பல ஊர்களிலிர்ந்து நண்பர்கள் முதல் தினமே வந்து திருப்பூர் / கோவையில் அறையெடுத்துத் தங்கிக் கலந்து கொண்டதும், வர இயலாதவர்கள் ட்விட்டர் மூலம் இந்தச் சந்திப்பு குறித்து பரவலாகப் பேசிக் கொண்டிருந்ததும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை ஊக்குவித்தது.

· மாலை 3 மணிக்கு என்று அறிவிக்கப்பட்ட ட்வீட்-அப் மிகச்சரியாக 3 மணிக்கே ஆரம்பமானது. பெரும்பாலனாவர்கள் இரண்டு மணியிலிருந்தே வரத்தொடங்க, சிலர் ஆறு மணி வரை வந்து விழாவைச் சிறப்பித்தனர்.

· லாஸ் ஏஞ்சலீஸ்-லிருந்து பெங்களூர் வந்திருந்த லாஸேஞ்சலீஸ்ராம் (ட்விட்டரில் - கலக்கல் கபாலி) சக ட்விட்டர் சண்முகம் அவர்களோடு வந்து சிறப்பித்தார்.

· மாணவர் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய கோவை ஜெகதீஷ் (கிறுக்கன் ஜெகு)-ம், 70 வயதைத் தொடும், ராதா இல்லீன்னா சாதாவும் (ட்விட்டர் பேருங்க அது) வந்தது நெகிழ்வாகவும் மகிழ்வாகவும் இருந்தது.

· சென்னை, திண்டுக்கல், மதுரை, சேலம், திருச்சி, திருப்பூர், வேலூர், திருவண்ணாமலை உட்பட பல ஊர்களிலிருந்தும் லாரி லாரியாக வந்திருந்த ட்வீட்டர்களால் ஹோட்டல் அரங்கமும் நிர்வாகமும் கிடுகிடுத்தது. எப்படி இவ்வளவு கூட்டம் என்று எண்ணிப் பார்த்தபோது மொத்தம் 84 பேர் இருந்தார்கள்.


· ‘ஒவ்வொரு ட்வீட் அப்லயும் எதாச்சும் நல்லதைப் பகிர்ந்துக்கணும் பாஸ்’  என்ற எக்ஸ்பர்ட் சத்யாவின் கொள்கைப்படி, இந்த வருடமும் வாழை, யுரேகா ஆகிய இரண்டு NGOக்களின் சேவைகளும், அதற்கு எப்படி பிறர் / ட்விட்டர்கள் உதவ முடியும் என்பதும் பகிரப்பட்டது.  வாழை சார்பாக தீபக்,  முருகானந்தம் ஆகியோரும், யுரேகா சார்பாக AID செல்வாவும் கருத்துகளைப் பகிர்ந்தார்கள்.

· இவர்கள், தங்களது குறிக்கோள், செயல்பாடுகள் குறித்து விளக்கிக் கொண்டிருக்க, பலரும் அது குறித்து கேள்விகளும், ஆலோசனைகளுமாய் தங்கள் பேச்சுகள் மூலம் பங்கெடுத்தது மனநிறைவாய் இருந்தது.

· லாஸ் ஏஞ்சலீஸ் ராம், தனது சினிமா அனுபவம் , வாத்தியார் சுஜாதாவுடனான தனது நட்பு, மற்றும் சுஜாதாவின் புகழ் பற்றியெல்லாம் உரையாடியது சிறப்பாக அமைந்தது. ‘சுஜாதா ட்விட்டர் உலகில் இல்லாதது எனக்குப் பெரும் வருத்தம்’ என்று அவர் குறிப்பிட்டபோது, 84 பேர்களும் ஆமாம் என்று 168 கைகளை உயர்த்தி ஆமோதித்தார்கள்.

· வாழை அமைப்பினர் கொண்டு வந்த 20 டி-ஷர்ட்கள் ஒன்று 200 ரூ. என்றும், அதில் வரும் பணம், அந்த அமைப்பின் நிதிக்கு உபயோகமாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. எல்லாம் விற்றுத் தீர்ந்ததாக அறிகிறேன்.

· எக்ஸ்பர்ட் சத்யாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட ட்விட்கள் அடங்கிய ‘ட்விட்குறள்’  புத்தகம் லாஸ் ஏஞ்சலிஸ் ராம் அவர்களால் வெளியிடப்பட, கிறுக்கன் ஜெகு அவர்கள் பெற்றுக்கொண்டார். கார்க்கி, ராஜன், தோட்டா ஆகியோரின் மதிப்புரையோடு வெளியாகியிருக்கும் அந்தப் புத்தகத்தின் மூலம் வரும் இலாபம் முழுவதும் வாழை அமைப்பினர்க்கு வழங்கப்படுவதாய் சத்யா அறிவித்தார்.

· ரூ. 60 மதிப்புள்ள அந்தப் புத்தகம் 100 ரூ, 200 ரூ என்று கொடுத்து வாங்கினர் சிலர். 500 ரூவாய்க்குக் கூட அந்தப் புத்தகம் வாங்கப்பட்டதாய் அறிகிறேன். நன்றியும் அன்பும். 

- அந்தப் புத்தகம் தேவைப்படுவோர் எக்ஸ்பர்ட் சத்யா – அல்லது கௌதம் (பிரபலம்) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம். (@expertsathya மற்றும் @pirabalam)

· சிறந்த கீச்சுகள் சில ஃப்ரீயாவிடு டேவிட் மூலம் தொகுக்கப்பட்டு, கார்க்கி குரலில் – அவரது கமெண்டுடன் திரையிடப்பட்டது. அரட்டை கேர்ள் சௌம்யா, சிஎஸ்கே ஆகியோரது எழுத்துகள் சிறப்பு கவனத்தைப் பெற்றது.

· சென்ற வருடம் போலவே, இந்த வருடமும் ட்விட்டர் ‘பட்டாசு’,  ‘ஃபாத்திமா ஃபாத்திமா’ என்ற போன வருடம் பாடிய அதே பாடலைப் பாடினார். அடுத்தவருடமும் இதே பாடலை, இன்னும் சரியாகப் பாடச்சொல்லும்படி வந்திருந்த ட்விட்டர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

· பிளிறல் பாலா, ‘பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா’ என்ற பாடலை வாசலைப் பார்த்துக் கொண்டே பாடினார். ஆனால் கடைசி வரை அரட்டை கேர்ளோ, சௌமியோ வரவே இல்லை.

· பிரபலம் என்றால் என்ன, பிரபலங்களிடம் ஏதும் கேள்வி வேண்டுமென்றால் கேளுங்கள் என்று அறிவிக்கப்பட்டபோது, பலரும் பல மாதிரிக் கேள்விகளைக் கேட்டு நிகழ்ச்சியைக் கலகலப்பூட்டினர்.

· குறிப்பாக ராஜனிடம் அவரது சிறை அனுபவங்கள், அப்போதைய அவரது மனநிலை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. மிகவும் தேர்ந்த முறையில், சர்ச்சைக்கிடமின்றி, நண்பர்களுக்கு அதற்கான பதிலைக் கூறினார் ராஜன்.

· போலவே, ட்விட்டரிலிருந்து சினிமாவுக்கு காலடி எடுத்து வைத்திருக்கும் கார்க்கி, தன் அடுத்த முயற்சிகள் குறித்துப் பகிர்ந்து கொண்டார். கேபிள் சங்கர் இயக்கும் ‘தொட்டால் தொடரும்’ என்று பெயரிடப்பட்ட படத்தில், அவருடன் பணிபுரிவதாகவும், ரைட்டர் பாரா கதையில் வரும் சீரியல் ஒன்றிற்கு வசன வாய்ப்பு வந்திருப்பதாகவும் அவர் பகிர்ந்து கொண்டபோது, அவரவர் வீட்டில் ஒருத்தன் உயர்வது போல ஆர்ப்பரித்து வாழ்த்தினர் வந்திருந்த நண்பர்கள். கூடவே, ட்விட்டர் – ஃபேஸ்புக் போன்றவற்றில் வரும் பல க்ரியேட்டிவிட்டிகள் பல பிரபலங்களால் கவனிக்கப்படுவதையும் கார்க்கி குறிப்பிட்டார்.


· தங்களைக் கவர்ந்த சிறந்த கீச்சுகள் மூலம், நிகழ்ச்சிக்கு வராத பலரையும் அவர்களது கீச்சுகள் மூலம் வருகை புரிய வைத்தனர் வந்திருந்தவர்கள். அதில் அரட்டைகேர்ளின், ‘சரிங்க’, புரட்சிக்கனலின் ‘LogOff’ மற்றும் தேங்காவின் ‘நல்லிரவு’ ஆகியவை பரவலானப் பாராட்டைப் பெற்றன.

· எய்ட் செல்வா, கோவை ஷேக் ஆகியோர் லைவ் ஸ்ட்ரீமிங்கிற்காக பலத்த முயற்சிகள் மேற்கொண்டனர்.

·  சென்றவருடம் ‘தல’ செந்தில்நாதனின் களப்பணி போலவே, இவ்வருட நிகழ்ச்சிக்காக சத்யாவுடன் ஹோட்டல் நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைப்புகளை ‘பிரபலம்’ கௌதம் மற்றும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களின் பதிவு மற்றும் புத்தக விற்பனை ஆகியவற்றை ‘வேதாளம்’  அர்ஜூன்  ஆகியோர் சிறப்பாக செய்தனர். அவர்களுக்கு சத்யா சார்பில் நன்றி நவிலப்பட்டது. 

· இந்நிகழ்ச்சிக்கான முழுச் செலவையும் ஒரு ட்விட்டர் ஏற்றுக் கொண்டார். அவரது ஒரே வேண்டுகோள் அவரது பெயர், ஹேண்டிலைச் சொல்ல வேண்டாம் என்பதே. இது அறிவித்து அவருக்கு நன்றி சொல்லப்பட்டபோது, சில நிமிடங்கள் தொடர்ந்த கைதட்டல். அன்பருக்கு இங்கேயும் எம் நன்றி.

· அடுத்தவருடம் மே மாதம், மதுரையில் ட்வீட் அப் என்று அறிவிக்கப்பட்டபோது, சைல்ட் சின்னா டைமிங்காக, ‘இந்த வருடம் தேங்கா நகரம். அடுத்த வருடம் தூங்கா நகரம்’ என்றார்.

· வந்திருந்த அனைவர்க்கும், டின்னரோடு நிகழ்வு முடிந்தது.

.

10 comments:

Nat Sriram said...

கச்சிதம்! நாம் ஏன் ஊரில் இல்லை என ஏங்கவைக்கும் தருணங்களில் ஒன்று..

maithriim said...

Super! பதிவுக்காகக் காத்திருந்தேன் அருமை. நன்றி :-)

amas32

Krishna... said...

கேபிள் சங்கர் இயக்கும் ‘தொட்டால் தொடரும்’ என்று பெயரிடப்பட்ட படத்தில், அவருடன் பணிபுரிவதாகவும், ரைட்டர் பாரா கதையில் வரும் சீரியல் ஒன்றிற்கு வசன வாய்ப்பு வந்திருப்பதாகவும் அவர் பகிர்ந்து கொண்டபோது, அவரவர் வீட்டில் ஒருத்தன் உயர்வது போல ஆர்ப்பரித்து வாழ்த்தினர் வந்திருந்த நண்பர்கள், என் கைதட்டல்களும் அதே உணர்வுடன்,
அருமையான பதிவு.. நன்றி..

Karthi said...

ஹே... அடுத்த வருடம் எங்க ஊருல..
கண்டிப்பா போகணும்...

ILA (a) இளா said...

பெரிய ட்விட் லாங்கர்(ட்விட் லாங்கர் அப்படின்னாவே பெருசுதானே அப்படின்னு கேட்கப்படாது) ஒன்னை எழுதிட்டு இருக்கும் போதே வந்ததால அதை சுருக்கி இங்கே சொல்லிடறேன்.

தொழில்நுட்ப வசதி குறைவு - அப்படின்னு சொல்லியே இரண்டு முறையும் நேரலை இல்லாம போயிடுச்சு. இது தமிழ்நாட்டுக்கான மெகா ட்விட் அப் இல்லை. உலகம் முழுசும் நாங்களும் என்னை மாதிரி ஏதோ ஒரு நப்பாசையினாலதான் பார்க்க ஆசைப்படறோம். அது அங்கே இருக்கிற மக்களுக்கு புரியுதா இல்லை புரிஞ்சும் ஏதும் செய்ய முடியாத கையறுநிலையான்னு புரியலை.

ஒரு வீடியோ எடுத்தும் கூட யூட்யூப்ல ஏத்தி விட்டுருக்கலாம். அது முடியலாமே? பெரும்பாலும் ஸ்மார்ட் போன் வெச்சிருப்பாங்களே? இல்லைன்னு சொல்லப் போறீங்களா?


லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

எல்லாவற்றையும் அழகாக இணைத்துத் திறமையாக டைமிங்குடன் 'MC' பண்ணியது பரிசல். அவர் தன்னடக்கத்தினால் இதைச் சொல்லிக் கொள்ளாவிட்டாலும் நான் இங்கே சொல்லியாகவே வேண்டும்!

So much camaraderie and fun!

Unknown said...

அடுத்த முறை தொழில் முறை ஒளிப்பதிவாளரை வைத்து மொத்த நிகழ்ச்சியையும் பதிவு செய்து வலையேற்ற வேண்டுகிறேன்.

selventhiran said...

நல்ல தொகுப்பு. ஒரு சஜசனாக சொல்கிறேன், ட்வீட்டரில் தீவிரமாக செயல்பட்டு அகால மரணமடைந்த டோண்டு, பட்டா பட்டி போன்றவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தியிருந்திருக்கலாம்.

nandhu said...

மாலை 3 மணிக்கு என்று அறிவிக்கப்பட்ட ட்வீட்-அப் மிகச்சரியாக 3 மணிக்கே ஆரம்பமானது. பெரும்பாலனாவர்கள் இரண்டு மணியிலிருந்தே வரத்தொடங்க, சிலர் ஆறு மணி வரை வந்து விழாவைச் சிறப்பித்தனர்....

nandhu said...

மாலை 3 மணிக்கு என்று அறிவிக்கப்பட்ட ட்வீட்-அப் மிகச்சரியாக 3 மணிக்கே ஆரம்பமானது. பெரும்பாலனாவர்கள் இரண்டு மணியிலிருந்தே வரத்தொடங்க, சிலர் ஆறு மணி வரை வந்து விழாவைச் சிறப்பித்தனர்...
parisal touch.